Thursday, March 22, 2018

மாசுக்கும் மாசுக்கும் சண்டை.




400 குவிண்டால் மாமர விறகு, 120 குவிண்டால் எள், 60 குவிண்டால் அரிசி, 25 குவிண்டால் வெல்லம், 41 டின் நெய், 3 டிராலி சாண வறட்டி பயன்படுத்தி 108 ஹோம குண்டங்களில்  முன்னூற்றி ஐம்பது வேதவிற்ப்பன்னர்களுடன் எட்டு நாட்கள் மகா யக்னம் நடத்துகிறார்கள்.

எங்கே?

மொட்டைச்சாமியார் முதலமைச்சராக இருக்கிற உத்தர பிரதேச மாநிலத்தில் ஏதோ ஒரு காவி அமைப்பின் பெயரில் இந்த கூத்து நடைபெறுகிறது.

எதற்கு?

இடைத்தேர்தல்களில் தோற்றுப் போனதற்கான பிராயசித்த ஹோமமா? இல்லை வரவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் சிக்கலில் இருக்கும் அந்த ஒரு இடத்தில் வெற்றி பெறவா?

நோ நோ நோ

உத்திர பிரதேச மாநிலத்தில் மாசு அதிகரித்து விட்டதால், ஓசோன் படலத்தில் விழுந்த ஓட்டையை அடைக்க இந்த ஹோமம் நடத்தப்படுகிறதாம்.

எப்படி?

ஹோமத்தில் உருவாகும் புகை ஓசோன் படலத்து ஓட்டையை அடைக்கும் பசையாக பயன்படுமாம். ஹோமத்தில் பயன்படுத்தப்படும் மந்திரங்களுக்கு அவ்வளவு சக்தி இருக்கிறதாம்.

பிள்ளையார் பிறப்பே உலகின் முதல் பிளாஸ்டிக் சர்ஜரி, ரிலேட்டிவிட்டி தியரியை விட சிறந்த கோட்பாடு வேதத்தில்  உள்ளதாக ஸ்டீபன் ஹாக்கிங்கே கூறினார் என்று கதை அளந்து விடுகிற கூட்டமள்ளவா?

நீங்கள் நடத்தும் யாகங்களுக்கு ஏதாவது காரணத்தை சொல்லுங்கள். 400 குவிண்டால் மாமர விறகு, 120 குவிண்டால் எள், 60 குவிண்டால் அரிசி, 25 குவிண்டால் வெல்லம், 41 டின் நெய், 3 டிராலி சாண வறட்டி இவையெல்லாம் போட்டு எரித்து  சுற்றுச்சூழலை மாசு படுத்தி விட்டு மாசு படுதலை தடுக்கத்தான் யாகம் என்றாவது சொல்லாமல் இருங்கள்.

மோடி பக்தர்களைப் போலவே எல்லோரையும் கேணையர்களாக நினைத்து விடாதீர்கள்.


9 comments:

  1. எப்படி தான் யோசிப்பார்களோ.

    ReplyDelete
  2. if you do not know about yaagam better shut up. Read relevant information and try to understand its effects during Bhopal MIC gas tragedy. Do not openly reveal your stupidity and typical comrade ignorance and arrogance.

    ReplyDelete
    Replies
    1. அராஜகம் தொனிப்பது உம்முடைய வார்த்தைகளில்தான் கோழையே!
      இன்னும் எத்தனை நாட்கள்தான் இப்படி வேதம், ஹோமம், என்றெல்ல்லாம் மக்களை முட்டாளாக்க உத்தேசம்?
      இந்த பிழைப்பிற்கு நீயெல்லாம் தூக்கில் தொங்கலாம்.
      தெனாலி ராமனின் சூட்டுக்கோல் வைத்தியம்தான் உம்மைப் போன்ற
      மோசடிப் பேர்வழிகளுக்கு லாயக்கு.

      Delete
    2. அந்த ஹோம குண்டம் ஷேப்பை கவனித்தீர்களா?
      இதய வடிவில் அமைத்துள்ளார்கள்.
      ரண களத்திலயும் ஒரு கிளுகிளுப்பு

      Delete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete