Wednesday, March 14, 2018

உபி - முடிவின் தொடக்கமா?


மொட்டைச் சாமியார் யோகியும் அவரது துணை முதல்வரும் 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற கோரக்பூர் மற்றும் பூல்பூர் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர்கள் தோற்றுப் போய் சமஜ்வாதி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இரண்டு தொகுதிகளிலும் கடந்த முறை மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மொட்டைச் சாமியாரும் அவரது டெபுடியும் வெற்றி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமான அதிகார துஷ்பிரயோகத்தையும் மீறி பாஜக தோற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து ஊடகங்களை துரத்திப் பார்த்தும் பாஜகவின் தோல்வியை தடுக்க முடியவில்லை.

அகிலேஷூம் மாயாவதியும் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து ஒன்றாக களம் கண்டதே இந்த வெற்றிக்கான காரணம். 

இந்த இடைத்தேர்தல் முடிவுகள்தான் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்காக முன்னோட்டம் என்று சொன்னார் மொட்டைச் சாமியார். 

அதன் படி பார்த்தால் 2019 ல் பாஜக நிலை என்ன ஆகும்?

பீகாரில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளும் முக்கியமானது. லாலு கட்சி இரண்டு இடங்களையும் பாஜக ஒரு இடத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 

கடந்த முறை லாலுவோடு இருந்த நிதிஷ்குமார் இப்போது பாஜகவுடன்.  நிதிஷ்குமார் கட்சியின் வாக்குகள் பாஜகவிற்கு இப்போது சென்றுள்ள சூழலில் லாலுவின் இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. 

மொட்டைச் சாமியார் சொன்னது போல மோடி ஆட்சியின் முடிவிற்கு இத்தேர்தல் முடிவுகள் நல்லதொரு துவக்கமாக அமையட்டும்.


3 comments:

  1. முடிவின் தொடக்கம் அல்ல.. சாமியார்கள் தொடக்கத்தின் முடிவு.

    ReplyDelete
  2. மோடியின் விருப்பத்திற்காக குஜராத சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பை தள்ளி வைத்த தேர்தல் ஆணையம் கோரக்பூரிலும், புல்பூரிலும் மோடிக்காக என்னவெல்லாம் செய்திருக்கும்? அப்படி இருந்தும் மண்ணைக் கவ்வி இருக்கிறது பாஜக கும்பல்.

    அய்யங்காளி சென்னை

    ReplyDelete
  3. count down started . 2019 is not far. It is hightime that both the national parties are shown the door.

    ReplyDelete