Friday, March 2, 2018

இன்னும் பொருத்தமான தலைப்பு

தீக்கதிர் நாளிதழில் திரிபுரா மாநில தேர்தல் தொடர்பாக வெளியான கட்டுரையினை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

ஊடகங்கள் சொல்ல மறந்த உண்மைகள்

என்ற தலைப்பை விட

ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்த உண்மைகள்

என்ற தலைப்பு இன்னும் பொருத்தமாக இருக்கும் என்ற உணர்வு கட்டுரையைப் படித்தால் உங்களுக்கும் வரும்.

திரிபுரா

 ஊடகங்கள் சொல்ல மறந்த உண்மைகள்



கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி திரிபுராவில் சட்டமன்ற தேர்தல் நடந்துள்ளது. இதில் மாணிக் சர்க்கார் தலைமையிலான இடதுசாரி அரசாங்கத்தை எப்படியாவது வீழ்த்த வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு பா.ஜ.க. வெறித்தனமாக செயல்பட்டுள்ளது. இந்த வெறி காரணமாக பாஜக பல முறைகேடுகளை செய்தது மட்டுமல்ல; அரசியல் நஞ்சு கலந்த ஆபத்தான செயல்களிலும் ஈடுபட்டுள்ளது.

1988 இல் காங்கிரஸ் செய்ததும்
2018இல் பா.ஜ.க. செய்ததும்

1977 ஆம் ஆண்டில் முதன் முதலாக இடதுசாரி ஆட்சி தோழர் நிருபன் சக்கரவர்த்தி தலைமையில் திரிபுராவில் அமைந்தது. 1983 ஆம் ஆண்டு நடந்த அடுத்த தேர்தலிலும் இடது முன்னணியே வென்றது. 1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தி படுகொலையை தொடர்ந்து மத்தியில் மிருகபலத்துடன் ஆட்சி அமைத்த ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 1988 ஆம் ஆண்டு தேர்தலில் இடது முன்னணி ஆட்சியை வீழ்த்த சதித் திட்டம் தீட்டியது.

இதற்கு காங்கிரஸ் தேர்ந்தெடுத்த வழிகள் மூன்று

திரிபுராவில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கும் வங்காளிகளுக்கும் இடையே மோதலை உருவாக்கியது;

திரிபுரா தனி தேசமாக அறிவிக்க வேண்டும் என கோரும் தீவிரவாதி களுடன் கூட்டு வைத்தது.

தேர்தலில் வன்முறையை உருவாக்கி வாக்கு சாவடிகளை கைப்பற்றுவது.

இதனை செய்து முடிக்க நியமிக்கப்பட்ட இரு மத்திய அமைச்சர்கள் சந்தோஷ் மோகன் தேவ் மற்றும் ப.சிதம்பரம் ஆவர். இந்த இருவருமே திரிபுராகண்டிராத வன்முறையை அரங்கேற்ற “ஸ்கெட்ச்” போட்டு தந்தனர் எனில் மிகை அல்ல.

1985 முதல் 1988 வரை திரிபுராவில் என்ன நடந்தது?

இந்த மூன்று ஆண்டுகளில் மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் 400 பேர் கொல்லப்பட்டனர்.

காங்கிரஸ் கட்சி டி.என்.வி./டி.யூ.ஜே.எஸ். எனும் தீவிரவாத அமைப்புடன் கூட்டு சேர்ந்தது.

தீவிரவாதிகள் ஊடுருவ 100 கி.மீ நீளம் உள்ள திரிபுரா- சிட்டகாங் எல்லை திறந்துவிடப்பட்டது.

தேர்தலுக்கு முன்பு இடதுசாரி அரசாங்கம் அகற்றப்படும் எனும் வாக்குறுதி பிரதமரால் தீவிரவாதிகளுக்கு தரப்பட்டது. (இது தொடர்பான கடிதத்தை சில ஊடகங்கள் கசியவிட்டன).

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இடது முன்னணி அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரம் முடக்கப்பட்டு மத்திய அதிகாரம் அமலாக்கப்பட்டது.

2500 இடது முன்னணி தலைவர்களும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டனர்.

தேர்தலில் பல வாக்குசாவடிகள் கைப்பற்றப்பட்டு காங்கிரசுக்கு ஆதரவாக வாக்குகள் பதியப்பட்டன.

இத்தனை முறைகேடுகள் செய்த பின்னர்தான் 1988 இல் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஆனால் இடது முன்னணியின் இடைவிடாத இயக்கங்கள் காரணமாகவும் காங்கிரசின் அராஜகம் காரணமாகவும் 1993 ஆம் ஆண்டு மீண்டும் இடது முன்னணி ஆட்சியை பிடித்தது. கடந்த 25 ஆண்டுகளாக இடது முன்னணி ஆட்சி தொடர்கிறது.

மீண்டும் அதே சதிகள்...

இந்நிலையில், இப்போது இந்திய ஆளும் வர்க்கங்களின் முக்கிய பிரதிநிதியாக காங்கிரசை பின்னுக்கு தள்ளிவிட்டு தன்னை முன்னிலைப்படுத்தி கொண்டுள்ள பாஜக, இருபது ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் செய்த அதே சதியை மீண்டும் திரிபுராவில் அரங்கேற்றியுள்ளது. 

பாஜகவின் சதிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து 08.02.2018, 17.02.2018 மற்றும்20.02.2018 ஆகிய மூன்று தேதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக மூன்று நீண்டபுகார்கள் தக்க ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் தரப்பட்டுள்ளன.1988 இல் காங்கிரஸ் செய்தது போலவே தற்பொழுது பா.ஜ.க. திரிபுரா தீவிரவாதிகளுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளது. 

திரிபுராவில் பத்திரிகையாளர்களை கொன்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த கொலையாளிகள் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க.வில் சேர்க்கப்பட்டனர். 1988 ஆம் ஆண்டு கொலை வெறியை நடத்தி காட்டிய காங்கிரஸ் தலைவர்கள் இன்று பா.ஜ.க.வின் வேட்பாளர்கள். 2013 தேர்தலில் காங்கிரஸ் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை திரிணாமுல் காங்கிரஸ் விழுங்கியது. பின்னர் அவர்களை பா.ஜ.க. விலைக்கு வாங்கியது. திரிபுராவில் மீண்டும் இடது முன்னணி ஆட்சியை கைப்பற்றுவதை தடுக்க அனைத்து முறைகேடுகளும் செய்யப்படும் என பிரதமர் அலுவலகம் தீவிரவாதிகளுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் உள்ளன. கடந்த 50 ஆண்டுகளாக திரிபுரா கண்டிராத பணமழையை பா.ஜ.க. கொட்டியுள்ளது. இந்த பணமழையுடன் ஒப்பிட்டால் ஆர்.கே. நகரில் கொட்டிய பணமழை தூசுக்குச் சமமானது என கூறப்படுகிறது.

பாஜக... இன்னும் என்னவெல்லாம் செய்தது?

வெளி மாநிலங்களில் தங்கியிருக்கும் திரிபுரா வாக்காளர்கள் வாக்களிக்க திரிபுரா வருவதற்கு ரயில் மற்றும் பேருந்து பயணம் கட்டணங்களை பா.ஜ.க. தரும் என பகிரங்க அறிவிப்பு.n மாதிரி வாக்கு பதிவில் எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரைக்கு வாக்கு விழுந்தது.

n அசாமிலிருந்து ஆயிரக் கணக்கான சமூக விரோத சக்திகளும் பா.ஜ.க./ ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களும் இறக்குமதி செய்யப்பட்டனர்.

n மாநில அரசாங்க ஊழியர்களுக்கு ஏழாவது ஊதிய பலன்களை வழங்கியது ஆளுநர்தான் என பா.ஜ.க. ஆதரவான ஆளுநர் புகைபடத்துடன் பிரசுரங்கள் வெளியிட்டது.

n தேர்தல் தொடர்பான வானொலி மற்றும் தூர்தர்ஷன் நிகழ்ச்சிகளை பிரச்சாரம் செய்யும் பொறுப்பு பா.ஜ.க. ஆதராவாளர்களுக்கு வழங்கப்பட்டது.

n எந்த அரசியல் கட்சிக்கும் தெரிவிக்காமல் தேர்தல் ஆணையம் மூலமாக இந்தோ- திபெத் எல்லை காவல்படை இயக்குநரை பார்வையாளராக நியமித்தது; அவர் நேரடியாக திரிபுரா பாஜக தலைவருடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார்.

n மொத்தமுள்ள 3174 இல் 519 வாக்கு சாவடிகளில் அதாவது 17ரூ வாக்கு சாவடிகளில் வாக்கு எந்திரங்கள் மணிக்கணக்கில் செயல்படாமல்பழுதடைந்தன. இது ஒரு அசாதாரண நிகழ்வு ஆகும். இந்தியாவில் வேறு எங்கும் இப்படி நடந்தது இல்லை.

n இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வாக்களிக்க இயலவில்லை.n தேர்தலுக்கு ஒரு நாள் முன்பாக நூற்றுக்கணக்கான வாக்கு எந்திரங்கள் திறக்கப்பட்டன. அப்பொழுது எந்த அரசியல் கட்சியின் பிரதிநிதியும் அழைக்கப்படவில்லை. அவ்வாறு எந்திரங்களை திறந்தவர்கள் யார் என்பது மர்மமாக உள்ளது. ஏனெனில் அவர்கள் தேர்தல் ஆணையத்தின் பொறியாளர்கள் அல்ல என கூறப்படுகிறது.

n இவ்வாறு சட்டவிரோதமாக திறக்கப்பட்ட எந்திரங்களில் கணிசமானவை, முதல்வர் மாணிக் சர்க்கார் போட்டியிடும் தொகுதியின் எந்திரங்களும் அடங்கும்.

n சில வாக்கு சாவடிகளில் இடது முன்னணி தேர்தல் ஏஜெண்டுகள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு துரத்தப்பட்டுள்ளனர்.

n தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி தேர்தல் நாளில் அசாம் பாஜக அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் திரிபுராவின் பல தொகுதிகளில் தங்கியிருந்தனர். அவர்களில் பல்லவ் லோச்சன் தாஸ் எனும் அமைச்சரை மக்கள் கையும் களவாக பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் இவர்களை வெளியேற்றிட எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

n தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசாங்க ஊழியர்களை விலைக்கு வாங்க முயற்சிகள் நடந்துள்ளன. இதற்கு ஏராளமான பணம் செலவு செய்யப்பட்டுள்ளது.n வாக்கு சாவடிகளில் பா.ஜ.க.வினர் தமது கேமராக்களுடன் நாட்டாமை செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.இப்படி ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. இவற்றை ஆதாரங்களுடன் மார்க்சிஸ்ட் கட்சி, தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளது.

முறைகேடுகளை கண்டு கொள்ளாத ஊடகங்கள்

இந்த விவரங்கள் அனைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பா.ஜ.க.வின் நவீன தாராளமய கொள்கைகளையும் இந்துத்துவா மதவெறியையும் ஒரு சேர எதிர்த்து களம் காணும் இயக்கம் இடதுசாரிகள் மட்டும்தான்! எனவே பா.ஜ.க.விற்கு இடதுசாரிகள் சாதாரண எதிரிகள் அல்ல; முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டிய அசாதாரண எதிரிகள். அதற்காக என்ன செய்தாலும் தகும் என பா.ஜ.க. எண்ணுகிறது. மத்தியில் ஆட்சி அதிகாரம் இருப்பதை பயன்படுத்தி அனைத்துவிதமான அராஜகங்களையும் பா.ஜ.க. அரங்கேற்றியுள்ளது.

இந்திய தேசியம் பற்றி வாய்க்கிழிய பேசும் பா.ஜ.க. திரிபுராவை தனி தேசமாக அறிவிக்க வேண்டும் என கொள்கை கொண்ட தீவிரவாத அமைப்புடன் கை கோர்க்கத் தயங்கவில்லை. வாக்கு எந்திரங்களை தவறாக பயன்படுத்தி “அறிவியல் முறைகேடுகள்” மூலம் வெற்றி பெற கனவு காண்கிறது. 

ஆனால் எந்த ஒரு ஊடகமும் இவ்வளவு பெரிய முறைகேடுகளை கண்டுகொள்ளவில்லை. அதே சமயத்தில் “எக்ஸிட் போல்” எனும் கருத்துத் திணிப்பை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. 

இந்த கருத்து திணிப்பையும் மீறி இடது முன்னணி வெற்றிவாகை சூடும் என்பதில் ஐயமில்லை.

சிபிஐ(எம்) இணையதளம் மற்றும் திரிபுரா தகவல்களில் இருந்து தொகுப்பு : அ.அன்வர் உசேன்

9 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நாளா காணாமல் போயிருந்த தெரு நாய் ஏன் இப்போ டென்ஷன் ஆகி குறைக்குதுன்னு நல்லா புரியுது.
      பைத்தியம் முற்றிப் போய் கல்லடி பட வாழ்த்துக்கள்

      Delete
  5. anything is good and everything is right against Chinese stooges.

    ReplyDelete
    Replies
    1. இந்த கொழுப்புக்கெல்லாம் ஒரு நாள் நாக.செல்வரத்தினம் போல ஷூவைக் கழட்டிட்டு தெருவில ஓடப் போறீங்கய்யா

      Delete
    2. Red Salute to the People of Tripura for eradicating communism. But the plague is till in Kerala and it needs to be eradicated.

      Delete
    3. கிரகணங்கள் நீண்ட நேரம் நீடிப்பதில்லை. நாங்கள் மீண்டும் வருவோம். மீண்டும் வெல்வோம். இறுதி வெற்றி எங்களுடையதே

      Delete