Thursday, May 18, 2017

பொங்கல், தோசை, சப்பாத்தி, இந்தி

தோழர் வெண்புறா சரவணன் அவர்களின் பதிவு இது.

முழுமையாக படியுங்கள்.

வேலூர்காரர்கள் கீழே உள்ள அழைப்பிதழைப் பார்த்து அவசியம் வரவும். 
இன்றுதான். 


பொறுங்கள் சொல்கிறேன்...
______________________________
"எதுக்கு சார் ஹிந்திக்குப் போயி இவ்வளவு பெரிய பிரச்சன பண்றீங்க" என்றபடியே வெண்பொங்கல் ஆர்டர் செய்துவிட்டு முகத்தை பார்த்தார் நண்பர்.

பொறுங்கள் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு எனக்கு ரெண்டு சப்பாத்தி என்றேன் சர்வரிடம்.

"அடுத்து என்ன சார்" என்றார் சர்வர்

நண்பர் ஒரு தோசையும், நான் மறுபடி ரெண்டு சப்பாத்தியும் சொன்னவுடன், அவர் ஆச்சரியத்துடன் "என்னங்க நீங்க, வெரைட்டியா டிபன் ஐட்டம் இருக்கும்போது மறுபடியும் சப்பாத்தியே கேக்குறீங்க" என்றார் ஒருவித அசூசையுடன்.

பொறுங்கள் சொல்கிறேன் என்றேன்.

அவர் என்னை விநோதமாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே நாங்கள் இருவரும் முதலில் கேட்டதை எடுத்து வந்து வைத்துவிட்டு சர்வர் நகர்ந்தவுடன் பொங்கலை எடுத்து சாப்பிட ஆரம்பித்தேன்.
நண்பர் பதற்றத்துடன், "சார், அது நான் கேட்டது" என்றார்.


நான் நிதானமாக, ஓ... சரி பரவாயில்லை நீங்கள் சப்பாத்தி சாப்பிடுங்கள் என்றேன்.


"அட, எனக்கு சப்பாத்தி பிடிக்காதுங்க" என்று சொல்லியபடியே வேண்டா வெறுப்புடன் சாப்பிட ஆரம்பித்தார்.


"அப்புறம் சார் நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லலியே. ஹிந்தி"... என்று முடிப்பதற்குள், பொறுங்கள் சொல்கிறேன் என்றேன்.
நக்கலாக சிரித்துக் கொண்டார்.


தோசையும் சப்பாத்தியும் வந்தது.

உள்ளே இறங்க மறுத்த சப்பாத்தியின் கடைசி பிட்டை இறக்க அவர் தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தபோது, தோசையை சாப்பிட ஆரம்பித்தேன்.


டம்ளரை கீழே வைத்துவிட்டு அந்த காட்சியைப் பார்த்தவர் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றார்...


"அலோ உங்களுக்குத் தேவையென்றால் நீங்கள்தான் ஆர்டர் செய்துகொள்ள வேண்டும். உங்கள் உணவை என் தலையில் கட்ட நீங்கள் யார்?" என்று கொதித்தார். விட்டால் அடித்துவிடுவார் போலிருந்தது!


அவரிடம் அமைதியாகச் சொன்னேன். நாளை காலையில் வெளியேறிவிடும் உணவை உங்கள் மீது திணித்ததற்கே உங்களுக்கு இவ்வளவு ஆத்திரம் வருகிறதே, காலங்காலமாக பேசும் ஒரு மொழியின் இடத்தில் இன்னொரு மொழியை திணிப்பதை எப்படி இவ்வளவு மொன்னையாக அணுகுகிறீர்கள்?

நீங்கள் கேட்ட கேள்விக்கு பதில் இதுதான்...

உங்கள் முன் இருக்கும் சப்பாத்திதான் ஹிந்தி. நான் மோடி அரசு. ஒரே ஒரு வித்தியாசம்தான். நானாவது உங்கள் உணவை சாப்பிடுவேன். மோடிகள் அதை செய்ய மாட்டார்கள். சப்பாத்தியை தலையில் கட்டுவது மட்டும்தான் அவர்கள் வேலை, வாங்க போகலாம்.


"எங்கே"...

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்திற்கு!

4 comments:

  1. மொழியை வெறுக்கவில்லை. திணிப்பை வெறுக்கிறோம். உங்கள் இடுகை நல்ல கருத்துள்ளது.

    ReplyDelete
  2. Super, Nethiadi

    ReplyDelete
  3. Sir, whatever stories you have told to make them understand, they never going to catch the point. Because they are inborn idiots. Their inability to learn English impose others to learn hindi. To make them understand the difficulty of learing new language we can ask them to learn Chinese language. All hindiwalas have to learn chinese as a third language. Otherwise if tamilnadu government force the people to learn chinese then see the reaction of those inborn idiots who advocate for hindi.

    ReplyDelete
  4. ஐயா வேலை போகின்ற இடங்களில் உனகு Java தெரியுமா C தெரியுமான்னு கேக்குறானுவ. அப்படியே இனிமேல் தொடக்க பள்ளி குழந்தைகளின் எதிர்காலமும் நலமும் கருதி கட்டாயம் C and Java கற்றுக்கொடுக்க சொல்லுங்க. அது மட்டும் இல்லாது உகல பழைய மொழியாம் ஈபுரு அதை இனி தேசிய மொழியாக அறிவித்து எல்லோரும் ஈபுருவும் அதன் அருகில் வளர்ந்து வந்த உருது மொழியும் கற்கவேண்டும் என்று சொல்ல சொல்லுங்கள். வேண்டும் என்றால் மோடிய நாளைய இரவு தொகாவில் தோன்றி இன்று முதல் DeTamilization, DeTamilnaduzaitation, DeIdilizaitation, DeSouthzaisation என்று சொல்ல சொல்லுங்கள் எங்களுக்கு ஒன்றும் கவலை இல்லை.

    அப்படியே இனி தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு வேலைக்கு ஆள் சேர்க்க தமிழக அரசு தமிழில் வைக்க போகும் வேலை தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றால் தான் வேலை. அப்படி எல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்றால் அந்த மத்திய அரசு அலுவலகத்தை கொண்டு போய் தமிழ் பேசாத இடத்தில வச்சுக்க சொல்லுங்க. இந்த பிரிவினை வாத அரசு கிட்ட மாட்டிக்கிட்டு ரொம்பவும் தான் சிரமபடுகின்றோம்.

    ReplyDelete