மோடி அரசின் மூன்றாண்டுகள் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி எழுதிய முக்கியமான கட்டுரையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். இந்த ஆட்சியைத்தான் முதலாளித்துவ ஊடகங்கள் வெட்கமே இல்லாமல் தூக்கிப் பிடித்துக் கொண்டு கூத்தாடுகின்றன. 
வெட்கம் கெட்ட பொய்யர்கள் 
இனி கட்டுரைக்குச் செல்லுங்கள்
மோடி அரசின் மூன்று ஆண்டுகள் மோசத்திலிருந்து மிக மோசத்திற்கு...
சீத்தாராம் யெச்சூரி
பாஜக அரசாங்கம் தன் மூன்றாண்டு கால 
ஆட்சியை மிகவும் படாடோபத்துடனும் ஆடம்பரமாகவும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
 ஆனால் நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களின் பரிதாபகரமான நிலையினைப் 
பார்க்கும்போது, இவ்வாறு கொண்டாடுவதற்கு எவ்விதமான காரணத்தையும் 
கூறமுடியாது. கடந்த மூன்றாண்டுகளில் நாட்டு மக்களின் வாழ்வாதார நிலைமைகள் 
மிகவும் மோசமாகச் சீரழிந்திருக்கிறது.
பிரதமர் 
நரேந்திரமோடியின் தலைமை யிலான பாஜக அரசாங்கம், ஆர்எஸ்எஸ்-சின் அரசியல் 
அங்கமாகத்தான் பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்கிற உண்மையான 
சொரூபத்தை வெளிப்படுத்தி இருக்கிறது.  ஆர்எஸ்எஸ் இயக்கமானது நாட்டை, 
தற்போதுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசு அமைப்பிலிருந்து, ஒரு 
வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரமாக’ மாற்ற 
வேண்டும் என்கிற தத்துவார்த்த ரீதியிலான திட்டத்தை அமல்படுத்தும் 
நோக்கத்துடன் வெறித்தனமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.இதனை 
நிறைவேற்றுவதற்காக இந்த அரசாங்கம் நாட்டின் மீதும் நாட்டு மக்கள்மீதும் 
நான்கு கட்ட தாக்குதலைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.
 
முதலாவதாக, தலித்துகள் மீதும், முஸ்லிம் சிறுபான்மையினர் மீதும் கொடூரமான 
தாக்குதல்களைத் தொடுத்து அவர்களைக் கொலை செய்வது அதிகரித்து வருகிறது. 
இரண்டாவதாக, நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களை முந்தைய 
அரசாங்கத்தைக்காட்டிலும் மிகவும் மூர்க்கத்தனமாகப் பின்பற்றிக் 
கொண்டிருக்கிறது. மூன்றாவதாக, ஜனநாயக மாண்பு களையும், நாடாளுமன்ற 
அமைப்பையும் சிறிதும் மதிக்காத எதேச்சதிகார அணுகுமுறை அதிகரித்துக் 
கொண்டிருக்கிறது. இறுதியாக, இந்தியாவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இளைய 
பங்காளி என்னும் நிலைக்குத் தரம் தாழ்த்தியுள்ளது.
மக்களின் வாழ்நிலைகள்சீரழிந்து கொண்டிருக்கின்றன
மக்களுக்கு
 நல்லகாலம் பிறக்குது என்று உறுதி அளித்துத்தான் பாஜக அரசாங்கம் ஆட்சியைக் 
கைப்பற்றியது. ஒவ்வோராண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்பை உருவாக்குவோம் 
என்றும் உறுதி அளித்திருந்தது. ஆனால் இதற்கு நேரெதிராக, நாட்டில் உள்ள 
எட்டு பெரிய தொழில்துறைகளில் வேலை உருவாக்கம் என்பது கடந்த எட்டாண்டுகளில் 
மிகவும் கீழ்நிலைக்குச் சென்றுவிட்டது. 2015இல் 1.35 லட்சம் வேலைகள் 
இந்தத்துறைகளில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. 2016இல் லேபர் பீரோவின் 
அறிக்கைகளின்படி 2.31 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் 
நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கை என்ன தெரியுமா? ஒவ்வோராண்டும் 1.5 கோடி 
இளைஞர்கள் வேலைக்கான சந்தையில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். 
சர்வதேச
 தொழிலாளர் ஸ்தாபனத்தின் அறிக்கைகளின்படி, இந்தியாவில் வேலை 
பார்ப்பவர்களில் 35 சதவீதத்தினர் ‘சொற்ப ஊதியத்திற்கு’ வேலை 
பார்ப்பவர்களாவார்கள்.மிகவும் தம்பட்டம் அடித்துக் கொள்ளப் படும் தகவல் 
தொழில்நுட்பத் துறையும்கூட வேலை உருவாக்கம் சம்பந்தமாக மிகவும் சோகம் 
நிறைந்த சித்திரத்தையே தருகிறது.  சர்வதேச ஏஜென்சியான மெக்கின்சி 
(ஆஉமுiளேநல) நிறுவனம் தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் 40 லட்சம் 
ஊழியர்களில்  சுமார் 50 முதல் 60 சதவீதம் பேர் தேவைக்கு அதிகமாக மிகுதியாக 
இருப்பதாக மதிப்பிட்டிருக்கிறது. 
இன்போசிஸ், விப்ரோ, 
காக்னிசண்ட் என்கிற மூன்று பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 56 ஆயிரம் 
ஊழியர்களை பணிநீக்கம் செய்திட பரிசீலனை செய்துகொண்டிருப்பதாகத் தகவல்கள் 
வந்துகொண்டிருக்கின்றன. நாடுமுழுதும் உள்ள ஐஐடி-களிலிருந்து இறுதியாண்டு 
பயிலும் மாணவர்களை வேலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொத்திக்கொண்டு 
சென்றுகொண்டிருந்தன அல்லவா? இப்போது அப்படிப்பட்ட நிலை இல்லை என்றும் இதில்
 மிகப்பெரிய அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்றும் ஐஐடி-கள் 
தெரிவித்திருக்கின்றன.
பாஜக அரசாங்கம், மகாத்மாகாந்தி தேசிய 
கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் சட்டப்படி ஒதுக்கவேண்டிய 
தொகையைக்கூட ஒதுக்க மறுப்பதன் காரணமாக, கிராமப்புற வேலைவாய்ப்புகளும் 
மிகவும் மோசமான முறையில் வெட்டிச் சுருக்கப்பட்டிருக்கின்றன. கடந்த 
மூன்றாண்டுகளில், ஒவ்வோராண்டும், இந்தத்திட்டத் தின்கீழ் 20 ஆயிரத்திற்கும்
 மேற்பட்ட கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு ஊதியம் மறுக்கப்பட்டிருக்கிறது 
என்று செய்திகள் தெரிவிக்கின்றன. திரிபுராவை எடுத்துக் கொள்வோம். அதிக 
அளவிற்கு உழைப்பாளி மக்களுக்கு வேலை அளித்த மாநிலம் இதுவாகும். சராசரியாக 
ஆண்டுக்கு 94 நாட்களுக்கு வேலை அளித்தது. 
ஆனால் மத்தியஅரசு 
அளித்த நிதியோ மிகவும் குறைவாகும். மத்திய அரசு ஒதுக்கிய நிதியைக் கொண்டு 
42 நாட்களுக்கான கூலியைத்தான் கொடுக்க முடிந்துள்ளது. அதாவது கடந்த 
மூன்றாண்டுகளில் கொடுத்ததில் பாதியைவிடக் குறைவான அளவேயாகும்.வேலைவாய்ப்பு 
மற்றும் தொழில்துறை முன்னணியிலும் எதிர்கால நிலைமைகள் மிகவும் மந்தமாகவே 
இருக்கின்றன. தொழில்துறையில் வளர்ச்சி விகிதம் சென்ற ஆண்டு 5.5 சதவீதமாக 
இருந்தது இந்த ஆண்டு 2.7 சதவீதமாக வீழ்ந்திருக்கிறது. வங்கிகள் கடன் 
கொடுப்பது என்பதும் கடந்த 63 ஆண்டுகளில் மிகவும் மோசமான நிலைக்கு 
வீழ்ந்துவிட்டது. 
இவற்றிலிருந்து உற்பத்தி நடவடிக்கைகள் 
என்பவை கணிசமான அளவிற்கு வீழ்ச்சி அடைந்திருக்கின்றன என்பது 
தெளிவாகும்.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதத்திற்கும் மேல் பங்கு 
செலுத்தி வந்ததோடு வேலைவாய்ப்பில் நான்கில் மூன்று பங்கு வேலைவாய்ப்பையும் 
அளித்துவந்தது முறைசாராத் தொழில்களாகும். முறைசாராத் தொழில்கள் ரூபாய் 
நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் காரணமாகக் கடுமையாகப் பாதித்தன.கடந்த
 மூன்றாண்டுகளில் கிராமப்புற இந்தியாவின் நிலைமை மிகவும் 
மோசமாகியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசாங்கம், கடந்த 
மூன்றாண்டுகளில் ஒவ்வோராண்டும் சராசரியாக 12 ஆயிரம் விவசாயிகள் 
துன்பதுயரங்களின் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள் என்று 
தெரிவித்திருக்கிறது.
 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதற்கு 
மிக முக்கிய காரணம், வாங்கிய கடன்களைத் திரும்பக் கட்டமுடியாத நிலை 
ஏற்படுவதேயாகும். மூன்றாண்டுகளுக்கு முன்பு, விளை பொருளுக்கு குறைந்தபட்ச 
ஆதார விலையை, அவர்களின் உற்பத்திச் செலவினத்தைவிட ஒன்றரை மடங்காக 
உயர்த்தித்தரப்படும் என்று பாஜக உறுதி அளித்திருந்தது. ஆனால் பாஜக 
அரசாங்கம் இந்த உறுதிமொழியையும் நிறைவேற்றாது விவசாயிகளுக்குத் துரோகம் 
இழைத்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கோதுமை மீதிருந்த இறக்குமதி வரி 
ரத்து செய்யப்பட்டு விட்டது.
 இதன் விளைவாக, சந்தைக்கு 
ஏராளமாக கோதுமை வரத் தொடங்கியது. இதன் காரணமாக நம் நாட்டின் கோதுமை 
விவசாயிகளுக்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதாரவிலையைவிடக் 
குறைவான விலையில் சந்தையில் கோதுமை கிடைக்கிறது. இதனால் நம் நாட்டு கோதுமை 
விவசாயிகள் மிகவும் குறைந்த விலைக்கு தங்கள் கோதுமையைத் தள்ளிவிட வேண்டிய 
துர்பாக்கிய நிலைமை. இதன் காரணமாக இவர்களின் கடன் சுமை மேலும் மோசமானது.  
அதுமட்டுமல்ல, தற்போது பருத்தி உட்பட பல பயிர்களுக்கு, குறைந்தபட்ச ஆதார 
விலையைக் கூட இந்த அரசு தர மறுக்கிறது.  கடந்த மூன்றாண்டுகளாக, அன்னதானம் 
செய்வோர் என்று தங்களைத்தாங்களே தம்பட்டம் அடித்துக்கொண்டவர்களின் 
ஆட்சியின் உண்மை நிலை இதுவேயாகும்.
இந்த அரசாங்கமானது, தேசிய 
வங்கி களிலிருந்து அபரிமிதமாகக் கடன் பெற்ற இந்தியக் கார்ப்பரேட்டுகளின் 
கடன்களை ரத்து செய்திட பரிசீலித்திடும் அதே சமயத்தில், நம் விவசாயிகள் 
வாங்கிய கடன்களை மட்டும் ரத்து செய்ய மறுக்கிறது. நம்முடைய வங்கிகளில்,  
கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன் தொகை, அவர்கள் அளிக்க வேண்டிய வட்டியையும் 
சேர்த்து 11 லட்சம் கோடி ரூபாய்களாகும்.  ஏழை விவசாயிகள் தாங்கள் வாங்கிய 
கடனுக்காக  உடைமைகளையும், கால்நடைகளையும் பறித்திடும் வங்கிகள், அதன்மூலம் 
அவர்களைத் தற்கொலைப் பாதைக்குத் தள்ளிவிடும் அதே சமயத்தில், 
கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடன்களை வசூலித்திட எவ்விதமான நடவடிக்கையும் 
எடுப்பதில்லை.   இவ்வாறு இந்த அரசாங்கத் தின் உண்மையான கோரமுகம் கடந்த 
மூன்றாண்டுகளில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வு
நாட்டின்
 பெரும்பான்மை மக்களின் மனித வள வளர்ச்சிக் குறியீடுகள் மிகவும் கடுமையாக 
வீழ்ச்சியடைந்து விட்டன. உலகப்புகழ்பெற்ற சர்வதேச மருத்துவ இதழான லான்சட். 
‘வியாதியின் சுமை’யின் உலக அட்டவணையின்படி உலகில் உள்ள195 நாடுகளில் 
154ஆவது இடத்தில் இந்தியாஇருப்பதாகக் காட்டி இருக்கிறது. கடந்த ஓராண்டில் 
இந்தியா 11 இடங்கள் தரம் குறைந்துவிட்டது. 
இன்றையதினம் 
இந்திய மக்கள் நம் அண்டை நாடுகளான இலங்கை,நேபாளம், பூட்டான் மற்றும் வங்க 
தேசத்தைவிட பின்தங்கிய நிலையிலேயே இருக் கிறார்கள்.இவ்வாறு பணக்காரர்களை 
மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகளை மேலும் வறிய நிலைக்குத் தள்ளக்கூடிய 
விதத்திலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மக்கள் விரோதக் கொள்கைகள், 
பொருளாதார சமத்துவமின்மையை மிகப் பெரிய அளவில் ஏற்படுத்தி இருக்கின்றன. 
2014க்கும் 2016க்கும் இடையே இந்தியாவில் ஒரு சதவீதம் இருக்கும் 
பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை 49 சதவீதத்திலிருந்து 58.4 சதவீதமாக 
அதிகரித்துள்ளனர். 
இது, 2000 ஆண்டில் 36.8 சதவீதமாக 
இருந்தது. அதேசமயத்தில் இந்த விவரத்தை அளித்திடும் ரொக்க சூசே அறிக்கையானது
 நாட்டில் அடித்தட்டில் உள்ள 70 சதவீத மக்களின் செல்வ நிலை என்பது வெறும் 7
 சதவீதம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.  2014இல் இது 14 சதவீதமாக 
இருந்தது என்பதைப் பார்த்தோமானால் கடந்த மூன்றாண்டுகளில் அடித்தட்டு மக்கள்
 எந்த அளவிற்கு மேலும் கீழே தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதை 
உணரமுடியும்.சமீபத்திய தேசிய மாதிரி சர்வேயின் அறிக்கையின்படி இந்தியாவில் 
குடும்ப செலவினத்தில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும்  இடையே மிகப்பெரிய 
இடைவெளி ஏற்பட்டுள்ளதாகக் காட்டுகிறது. இந்தியக் குடும்பங்களில் உச்சத்தில்
 இருக்கின்ற 10 சதவீதக் குடும்பத்தினர் சராசரியாக 1.5 கோடி ரூபாய் 
மதிப்பிலான சொத்துக்களை வைத்திருக்கிறார்கள். 
இது நம் 
நாட்டில் அடித்தட்டில் இருக்கின்ற நகரக் குடும்பத்தினர் 10 சதவீதத்தினரின் 
சொத்துக்களின் சராசரி மதிப்பைவிட 50,034 மடங்காகும்.இந்தியாவில் உள்ள 
ஏழைகளின் செலவினங்கள் என்பவை மிகவும் குறை வாகும். இதனை மொத்த உள்நாட்டு 
உற்பத்தியின் அடிப்படையில் கணக்கிடும் எவ்விதமான புள்ளிவிவரமும்  அல்லது 
வரி வசூல் செய்திடும் அமைப்புகளும் வெளிக்கொணர்ந்திடவில்லை. உண்மையில், 
இந்திய மக்கள் தொகையில் கீழ்நிலையில் உள்ள பாதிக்கும் மேலானவர்கள், தாங்கள்
 உயிர்வாழ்வதற்குத் தேவையானதைவிட கூடுதலாக எதுவும் செலவு செய்திடவில்லை.
மதவெறி கூர்மைப்படுத்தப்படுதல்
அநேகமாக
 பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் பசுப் பாதுகாப்புக்குழு என்ற பெயரில் 
தனியார் ராணுவங்கள் தலித்துகள் மீதும், முஸ்லிம் சிறுபான்மையினர் மீதும் 
கொலைவெறித்தாக்குதல்கள் நடத்துவது அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.  
உத்தரப்பிரதேசத்தில் ‘ரோமியோ எதிர்ப்புக் குழு’ மற்றும் கர்நாடகாவில் 
ஸ்ரீராம் சேனா போன்ற ‘அறநெறிக் காவலர்கள்’ (‘அடிசயட யீடிடiஉiபே’) இளைஞர்கள்
 மத்தியில் அவர்கள் என்ன உண்ண வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எவரிடம்
 நட்புடன் இருந்திட வேண்டும் போன்றவற்றை புகுத்தி அவர்களை துன்புறுத்திக் 
கொண்டிருக்கிறார்கள்.   இத்தகைய தனியார் ராணுவங்கள் தடை செய்யப் படவில்லை 
என்றால் தலித்துகள் மற்றும் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாது காப்பதை 
உத்தரவாதப்படுத்திட முடியாது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 
நிலைமை மோசமாக இருப்பது தொடர்கிறது. பாஜக அரசாங்கத்தின் காஷ்மீர் கொள்கை 
முழுமையாக தோல்வியடைந்துவிட்டது என்பது நிரூபணமாகிவிட்டது.ஜம்மு-காஷ்மீர் 
மக்களிடம் நம்பிக்கையளிக்கும் விதத்தில் அது அளித்திட்ட உறுதி 
மொழிகளிலிருந்தும், மாநிலத்தில் இயங்கிடும் அனைத்து அரசியல்சக்திகளுடனும் 
பேச்சுவார்த்தைகள் நடத்திடுவதிலிருந்தும் அது பின்வாங்கிவிட்டது. நாட்டின் 
கல்விக்கொள்கையை மாற்றியமைத்திட திட்டமிட்டமுறையில் உக்கிரத்து டன் 
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் 
கற்பிக்கப்படும் பாடங்களில் மதவெறிக் கருத்துக்கள் மிகவும் வேகமானமுறையில் 
திணிக்கப்பட்டு வருகின்றன. 
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், 
ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகம் போன்ற ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி 
மத்தியப் பல்கலைக் கழகங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் 
என்பதற்காக, அங்குள்ள முற்போக்கு மற்றும் மதச்சார்பற்ற சாராம்சங்களை 
அழித்திட தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும், தற்போதுள்ள
 மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை மாற்றி, ஆர்எஸ்எஸ் விரும்பும் வெறிபிடித்த
 சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ கொண்டுவரப்பட வேண்டும் 
என்ற நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.நாடாளுமன்ற அமைப்புகளும் 
தாக்குதல்களுக்கு ஆளாகியுள்ளன. மாநிலங் களவையில் ஆட்சியாளர்களுக்குப் 
பெரும்பான்மை இல்லை என்பதால், மாநிலங்களவையையே தவிர்க்க வேண்டும் 
என்பதற்காக பல சட்ட முன்வடிவுகளை ‘நிதிச் சட்டமுன் வடிவுகளாக’ அறிவித்து 
நிறைவேற்றி வருகின்றது. இவற்றில் பெரும்பாலானவை மக்களவையில் எவ்வித 
விவாதமுமின்றி பாஜக தன் பெரும்பான்மையை பயன்படுத்தி கொடுங்கோன்மையாக 
நிறைவேற்றிக் கொண்டுள்ளது. சமீபத்தில், அரசியல் கட்சிகளுக்கு 
கார்ப்பரேட்டுகள் அளித்திடும் நன்கொடைகளை சட்டரீதியாக்குவதற்கேற்ற விதத்தில்
 சட்டங்கள் திருத்தி அமைக் கப்பட்டிருக்கின்றன. கார்ப்பரேட்டுகள் அரசியல் 
கட்சிகளுக்கு அளித்திடும் நன்கொடைகளின் உச்சவரம்பு நீக்கப்பட்டுவிட்டது. 
தேர்தல்
 பத்திரங்கள் வெளியிட்டிருப்பதன் மூலம் எந்தெந்த கார்ப்பரேட்டுகள் யார் 
யாருக்கு நிதி அளித்தார்கள் என்கிற வெளிப்படைத்தன்மையைப் பாதிக்கக்கூடிய 
விதத்தில் சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. எனவே, அரசியல் கட்சிகளுக்கு 
நிதி அளிப்பதில் இனி வெளிப்படைத்தன்மை இருக்காது. எனவே எந்த அரசியல் 
கட்சியும்கணக்கு காட்ட வேண்டியதும் இல்லை. அதேபோன்று  தேர்தலில் செலவு 
செய்வதற்கு உச்சவரம்பு நிர்ணயித்திடவும், அரசியல் கட்சி களுக்கு 
கார்ப்பரேட்டுகள் நிதி அளிப்பதற்கு தடை விதித்திடவும் இந்த அரசாங்கம் 
மறுத்து வருகிறது. 
இவற்றின் விளைவாக மக்களின் ஜனநாயகத் 
தேர்வை சீர்குலைக்கும் விதத்தில் பணபலத்தின் பங்கு அதிகரிக்கப் 
பட்டிருக்கிறது.இந்தியாவில் தற்போது பொருளா தாரத்தின் அனைத்து முனைகளிலும் 
அந்நிய நிதி ஊடுருவுவதற்கு வழி திறந்து விடப்பட்டிருக்கிறது. இதில் ராணுவ 
உற்பத்திபோன்ற கேந்திரமான துறைகளும் அடங்கும். இவற்றின் மூலமாக இந்தியாவின் 
பொருளாதாரம் மற்றும் மக்களைக் காவு கொடுத்து பன்னாட்டு நிறுவனங்கள் 
கொள்ளைலாபம் ஈட்டுவதற்குப் பெரிய அளவில் வசதி செய்துதரப்பட்டிருக்கிறது. 
பொதுத்துறை
 நிறுவனங் களைப் பெரிய அளவில் தனியாரிடம் தாரை வார்த்திட நடவடிக்கைகள் 
எடுக்கப்பட்டு வருகின்றன.இந்திய – அமெரிக்க ஒப்பந்தங்களில் 
கையெழுத்திட்டிருப்பதன் மூலம், இந்தியா அமெரிக்காவுடன் கடல்வழி மற்றும் 
வான்வழி போக்குவரத்தில் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது. இதன்மூலம் 
இந்தியா,  அமெரிக்காவின் ‘ராணுவக் கூட்டாளி’ என்னும் அந்தஸ்தைப் பெற்றி 
ருக்கிறது. இது, இந்தியாவின் சுயேச்சையான அயல்துறைக் கொள்கையின் 
நலன்களுக்கும் உலகத்தின் நிலைப்பாட்டிற்கும் ஏற்புடைய ஒன்று அல்ல.எனவே, 
கடந்த மூன்றாண்டுகளும், நாட்டு மக்களில் பெரும்பான்மையானவர்கள் மீது 
அனைத்து முனைகளிலும் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். 
இதன்மூலம்
 மத்திய மற்றும் மாநில பாஜக அரசாங்கங்கள் மற்றும் அதன் கொள்கைகளுக்கு 
எதிராக மக்கள் மத்தியில்  ஏற்படும் விரக்தியைத் திசைதிருப்பும் வண்ணம் 
இந்துத்துவா பாணி பிராந்திய வெறி, மதவெறி, சாதி வெறி கிளப்பப்பட்டு 
வருகின்றன. இந்துத்துவா தேசிய வெறி கிளறிவிடப்படுவதற்கு எதிராக 
நாட்டுப்பற்று என்னும் பதாகையை அனைத்து மக்களும் உயர்த்திப்பிடிக்க 
வேண்டியிருக்கிறது.  இம்மூன்று ஆண்டு காலம் நமக்குக் காட்டி யிருப்பது 
என்னவெனில், ஆட்சியாளர்கள் தங்கள் கொள்கைத் திசைவழியை மக்களின் 
வாழ்வாதாரங்களை மேம்படுத்திடும் விதத்தில் மாற்றுவதற்கு நிர்ப்பந்தம் 
அளித்திடும் விதத்திலும், நம் நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை 
பாதுகாத்திடும் விதத்திலும் ஒரு வலுவான ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்களை 
முன்னெடுத்துச் சென்றிட வேண்டும் என்பதேயாகும். 
தமிழில்: ச. வீரமணி
நன்றி தீக்கதிர் 29.05.2017 


 
 
No comments:
Post a Comment