Tuesday, May 16, 2017

ரஜனியும் மதனின் பழைய கார்ட்டூனும்





ஆனந்த விகடனில் மதன் வரைந்திருந்த ஒரு பழைய கார்ட்டூன் நினைவுக்கு வந்தது.

ஒரு குடிசையில் ஒரு சிறுவன் தூங்கிக் கொண்டிருப்பான். “யார் வந்திருக்கா பாரு” என்று அவன் தந்தை எழுப்பிக் கொண்டிருப்பார். பக்கத்தில் ஒரு வயதானவர் (அவர்தான் அந்த வீட்டிற்கு வந்த விருந்தாளி)  நின்று கொண்டிருப்பார்.

பையனின் பதில்

“போப்பா, ராஜீவ் காந்திதானே, நான் தூங்கனும்”

குடிசை வீடுகளுக்கு செல்லும் நாடகத்தை ராஜீவ் காந்தி நடத்திக் கொண்டிருந்த போது வெளி வந்த கார்ட்டூன் அது.

ரஜனிகாந்தின் அரசியல் பிரவேச வசனங்க:ளைக் கேட்கிற போது

“போப்பா, ஒவ்வொரு பட ரிலீசின் போதும் இவருக்கு இதுவே பொழப்பா போச்சு”

என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

4 comments:

  1. ஆமா. ரஜினி நல்ல அரசியல்வாதியா இல்லியான்னு தெரியாது. ஆனா, நல்ல வியாபாரி

    ReplyDelete
  2. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் வாழ்வார்கள்.

    ReplyDelete
  3. ரஜினிக்கும் சோக்கும் வேற வேலை இல்லை..சாரி ஒரே ஒரு வேலை இருக்கு...அதான் அவர்கள் சுயநலவேலை..

    இதுல ஒருத்தர் அரசியலுக்கு வருவாராம்; ஒருத்தர் செத்த பின்பும் ஏதோ அவர் தான்...அகில உலக ஆன்மிக பிஸ்தா மாதிரி அவர் எழுதிய [சோ] ” தர்மத்தின் சாரம் ” …. எவன் எவனெல்லாம் தர்மத்தைப் பற்றி ..அதுவும் இவன் ....பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலே பிழைத்து...பிழைத்து பிறகு பொய்யிலே மண்டையைப் போட்டவன்....நமக்கு தர்மத்தைப் பற்றி புழுத்தறான். தூத்த்ரி...

    நடிக கோமாளியை லூஸ்ல விடுங்க....இவர் வேலை...இன்றைக்கு அகத்துங்க!

    ReplyDelete