Tuesday, December 13, 2016

ஆசான் அமைதியின் மர்மம் என்ன?



எனக்கு ஒரு பெருத்த சந்தேகம்.

ஜெ இறந்து ஒரு வாரத்திற்கு மேலாகி விட்டது. அவரது மரணத்தில் ஏராளமான மர்மங்கள். அதன் பின்பு சின்னம்மா, சின்னம்மா என்று குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. சசிகலா காலில் பலர் விழும் கீழ்மையான செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

இத்தனை சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் இது பற்றி ஆசான் வாய் திறக்கவே இல்லை. சரி ஊரில் இல்லை, அவரது எழுத்துக்களுக்கு விடுமுறை கொடுத்து விட்டார் என்று பார்த்தால் வழக்கம் போல பக்கம் பக்கமாக புரியாத வார்த்தைகளில் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்.

ஜெ வின் இறப்பு பற்றி ஆசானின் மௌனத்தின் பின்னே உள்ள மர்மம் என்ன?

சமகால பிரச்சினைகள் குறித்து ஆசான் எதுவும் எழுதுவது கிடையாது என்று அவரது அடிப்பொடிகள் பின்னூட்டம் போட நினைத்தால் அவர்களுக்கு ஒரே ஒரு கேள்வி.

சமகாலப் பிரச்சினைகளைப் பற்றி ஜெமோ வாய் திறக்க மாட்டார் என்றால் கருப்புப் பண செல்லா நோட்டு விவகாரத்தைப் பற்றி மட்டும் என்ன எழவுக்காக மோடியை ஆதரித்து வரிந்து கட்டிக் கொண்டு எழுதினார்?

3 comments:

  1. ஆசானை விடுங்கள்
    நல்ல கண்ணு சசிகலாவிடம் ஆசி வாங்கிய சம்பவம் நடந்திருக்கு
    ஆதாரம் தரட்டுமா ?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் என்ன ஆதாரம் தருவது? அதுதான் ஊடகங்களில் வந்து கொண்டே இருக்கிறதே! ஆசி என்ற வார்த்தைதான் சரியில்லை. சந்திப்பு அவசியமில்லை என்பதுதான் என் கருத்து. முந்தைய பதிவை படிக்கவும். நிற்க தோழர் நல்லக்கண்ணு பார்த்ததனால் ஆசானை ஏன் விட்டு விட வேண்டும்?

      Delete
  2. ஆசான் நாக்பூரில் இருந்து வழிகாட்டுதல்கள் வந்த பின்புதான் அதன் அடிப்படையில் தனது கொண்டையை மறைத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு தனது மேலான கருத்துக்களை அளிப்பார்.

    ReplyDelete