Thursday, December 8, 2016

முதல்வர் வாய்ப்பை மறுத்த . . . .

தமுஎகச வின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருப்பு கருணா அவர்களின் முக நூல் பதிவும் அதற்கு வந்த சில பின்னூட்டங்களும். 
கொஞ்ச நாட்கள் முன்னாடி.ஒரு காலைப்பொழுதில் செல்போன் ஒலித்தது.புதிய எண்ணாக இருந்தது.எடுக்கவில்லை.கொஞ்சநேரம் கழித்து மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு.யாரோ என்னமோ என்று போனை தடவி ஹலோ...வணக்கம்...சொல்லுங்க என்றேன்.சார் ஒங்ககிட்ட பேசணும்னு விரும்புறார்..கருப்பு கருணாதானே நீங்க..என்று மறுமுனையில் இருந்தவர் கேட்டார்.ஆமாம்..கருணாதான்..பேச விரும்புவது யார்ன்னு கேட்டேன்.இருங்க..இணைப்பு கொடுக்கிறேன்னு இணைப்பு கொடுத்தார்.

சில ட்ரிங்குகளுக்கு பிறகு..வணக்கம் தம்பி..கருப்புதானே..என்றது ஒரு முதிர்ந்த குரல்.எங்கேயோ கேட்டகுரலாகவும் இருந்தது.சார்...என்று இழுத்தேன்.

ஹாஹா என சிரித்துவிட்டு..நான் சோ பேசுகிறேன்..துக்ளக் சோ..என்றார்.ஒரு கணம் பக் என்று ஆனது.ஆங்..வணக்கம் சொல்லுங்க சார் என்றேன் கொஞ்சம் உதறலுடன்...எம்மாம் பெரிய ஆளுன்னு பதட்டம் வேறு. ஒன்னுமில்லே தம்பி..பேஸ்புக்குல ஒங்க பதிவுகள்லாம் தொடர்ந்து பார்க்கிறேன். ரொம்ப நல்லாருக்கு.அடிக்கடி பல பத்திரிகைகள்ல எடுத்தும் போடுறாங்க..சபாஷ்..என்றார்.ரொம்ப நன்றிங்க சார் என்றேன்.

அவரே தொடர்ந்து...அப்புறம் தம்பி.ஒங்கள உத்தர்கண்ட்டுக்கு முதல்வர் ஆக்கிடலாம்ன்னு நினைக்கிறேன்...என்ன சொல்றீங்க.. ஆயிடறீங்களா ...என்றார். நான் யோசிச்சி சொல்றேன் சார்..ந்னு போனை வச்சிட்டேன்..

இதை ஏன் இவ்ளோ நாளா வெளிய சொல்லலன்னு நீங்க கேட்கலாம்.அவர் இருக்கும்போதே சொல்றது அவ்ளோ மரியாதையா இருக்காதுன்னுதான் இப்ப சொல்றேன்.

 Aadhavan Dheetchanya ஓ, நான் மாட்டேன்னதும் அந்தாளு உங்கிட்டயும் வந்து கெஞ்சினாரா? என்னமோ போகருப்பு கருணா இவ்ளோ நாளா மனசிலிருந்த ரகசியத்தை இப்பவாச்சும் சொல்ல மிடிஞ்சதே...
கருப்பு கருணா
கருப்பு கருணா அப்ப ஒங்கிட்ட கேட்டுட்டுதான் எங்கிட்ட வந்தாரா...அடப்பாவி
Aadhavan Dheetchanya
Aadhavan Dheetchanya இதே வேலையா இருந்திருப்பார் போல. சரிவிடு, ஏதாவது ஒரு பள்ளிக்கூடம் இல்லேன்னா காலேஜுக்காவது முதல்வராகியே தீர்வேன்னு இருக்குற திண்டிவனம் பக்கத்து ஆளுங்களுக்காவது உபகாரம் செய்திருக்கலாம்.
Like · Reply · 8 · 23 hrs
கருப்பு கருணா
கருப்பு கருணா அட...ஆமாம்பா...
Like · Reply · 4 · 23 hrs
Bala Bharathi
Bala Bharathi அட! எங்கிட்டக்கூட பேசினாரே! நாந்தான் டேக் டைவர்ஷன் குடுத்தேன்
Like · Reply · 1 · 23 hrs
கருப்பு கருணா
கருப்பு கருணா அது நீங்கதானா...ஒரு கவிஞர்ன்னு சொன்னாரு அப்பவே!
Like · Reply · 3 · 23 hrs
Bala Bharathi
Bala Bharathi அட!அதை சொல்லக் கூடாதுனு நடு மண்டையில "நங்குனு"கொட்டில அனுப்புனேன்.
Like · Reply · 3 · 23 hrs
கருப்பு கருணா
கருப்பு கருணா என்னாது...கொட்டினீங்களா...யப்பாவ்வ்வ்வ்
 
Like · Reply · 2 · 23 hrs
 
 இரா எட்வின் எனக்கு வேணாம்னு நான் சொன்னதுக்கப்புறம்தான் அப்ப Aadhavan Dheetchanya நம்பரையாவது கொடுன்னு கேட்டு வாங்கினார் கருப்பு கருணா
Like · Reply · 1 · 19 hrs
கருப்பு கருணா
கருப்பு கருணா இரா எட்வின் Aadhavan Dheetchanya லாம் மறுத்துட்ட பின்னே நாம் ஏத்துக்கிட்டா நாகரீகமா இருக்காதுன்னுதான் வேணாம்ன்னு சொல்லிட்டேன்
 
 
 
இதைப் படித்து விட்டு உங்களுக்கு  சோவை தமிழக முதல்வராக்குவதாக இந்திராவும் மொரார்ஜியும் சொன்னார்கள் என்று சிவகுமார் சொன்னது நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. 

3 comments:

  1. சிவகுமாரிடம் , கேட்டு சொல்லசொளிருப்பார்கள்

    ReplyDelete
  2. Does this in anyway relates to making shri JYOthi Basu as PM of India ?

    ReplyDelete
  3. ஒன்று வன்மத்தோடு எழுதுவீர்கள் அல்லது பதிவுக்கு தொடர்பில்லாமல் அபத்தமாக எழுதுவீர்கள். என்ன செய்ய? நீங்களே கன்ஃப்யூஸ் ஆகிட்டீங்க

    ReplyDelete