Friday, December 2, 2016

டாக்டரிடம் செல்லுங்கள் ஜெயமோகன்

வாழ்க்கை முழுவதையிலும் சர்ச்சையிலேயே கழிப்பதென்று ஜெயமோகன் முடிவெடுத்து விட்டார் போல.

சுஜாதா மனைவி குமுதம் லைப் இதழில் அளித்த பேட்டி தொடர்பாக அவரே கேள்வி கேட்டு பதில் சொன்ன பதிவில் சில பகுதிகள்.


நீங்கள் எந்திரன்2 படத்தில் பணியாற்றியதை அறிந்ததனால் இதை எழுதுகிறேன். எந்திரன் 1 உட்பட நிறையபடங்களில் பணியாற்றிய சுஜாதா போதிய பணம் இல்லாமல் வறுமையில் இருந்ததாக இணையத்தில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

சுஜாதாவின் மனைவி அளித்த பேட்டிகளில் இறுதித்தருவாயில் நான் உனக்கு ஒன்றுமே சேர்த்துவைக்காமல் போகிறேன்என்று வருந்தியதாகவும் அவரது இறுதிக்கால மருத்துவச்செலவுக்குக்கூட கமல்ஹாசனும் மணிரத்தினமும்தான் சிறிய தொகை கொடுத்து உதவினார்கள் என்றும் சொல்கிறார்.
 
உங்கள் அனுபவம் என்ன? உங்களுக்கு அங்கே போதிய பணம் அளிக்கப்படுகிறதா?கண்டிப்பாக ரஜினிகாந்தோ கமலஹாசனோ வாங்கும் பணம் அல்ல அது. ஆனால் அது குறைவான பணமும் அல்ல. இப்படிச்சொல்கிறேன். அவர் உயரதிகாரியாக ஒருவருடம் முழுக்க ஈட்டிய ஊதியத்தைவிட அதிகமாக ஒரு படத்திற்கு வாங்கிக்கொண்டிருந்தார். வருடம் மூன்று படம் செய்தார், கடைசிநாள்வரை. அவருக்கு என்ன அளிக்கப்பட்டது என்று எனக்குத்தெரியும். சொல்லப்போனால் நான் என்ன வாங்கவேண்டுமென்று அவர் எனக்கு அறிவுரையும் சொன்னார்.

சுஜாதா பணத்தை விட்டுக்கொடுப்பவர் அல்ல. நின்றுபோன படங்களுக்கான ஊதியத்தைக்கூட அவர் பலமுறை கேட்டு வாங்கிக்கொண்டது எனக்குத்தெரியும். என்னிடம் அப்படித்தான் செய்யவேண்டும் என சொன்னார். நான் அப்படி எவரிடமும் கேட்பதில்லை. ஆனால் இன்றுவரை சினிமாவில் எனக்கு வராதபணம் என ஏதுமில்லை. வரவேண்டிய பணத்தை நான் நினைவுகொள்வதே இல்லை. படநிறுவனமே என்னைக்கூப்பிட்டு பணம் கொடுப்பதே வழக்கம்.


சுஜாதா எதையும் கோட்டைவிட்டவர் அல்ல. நன்றாக பணம் ஈட்டினார். சுஜாதாவின் இரு மகன்களும் மிகவசதியான பதவிகளில் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். இத்தனைக்கும் பிறகு அவர் வறுமையில் இறந்தார், மனைவி நிராதரவாக இருக்கிறார்கள் என்றால் அவரது மகன்களிடம்தான் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றுதான் அர்த்தம் வரும். அந்த அம்மாள் ஒன்றும் புரியாமல் பேசுகிறார்கள். அவர்களை எனக்கு ஓரளவு தெரியும். அவர்களால் அவர்களின் சொற்கள் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என ஊகிக்கமுடியல்லை 


அவர்களை பேசவிட்டு அந்தச் சொற்களைக்கொண்டு சுஜாதாவின் ஆளுமையை கீழிறக்க ஊடகவியலாளர் முயல்கிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது

_______________________________________________________________

இப்பதிவின் மூலம் ஜெமோ ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து விட்டார். முதலில் ஜெமோ தானே கேட்டுக் கொண்ட கேள்வி போல எல்லாம் சுஜாதாவின் மனைவி சொல்லவில்லை. நாங்கள் ஒன்றும் அவ்வளவு வசதியானவர்கள் அல்ல என்று துவக்க காலத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். பணம் வாங்குவதை அவ்வளவு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்றும் எழுதி இருந்தார்.

அப்படி எல்லாம் கிடையாது காசு விஷயத்தில் சுஜாதா கறாராகத்தான் இருந்தார் என்று இப்போது ஆசான் நிலை நாட்டி விட்டார், அதற்காகத்தான் தானே கேள்வி எழுப்பி பதிலும் சொன்னது. இது முதல் மாங்காய்.

ஊடகவியாளர் முயல்கிறாரோ என்று கேட்ட பின்பு அப்பேட்டியை எடுத்துப் படித்தேன். பேட்டி எடுத்தவர் பெயர் ஆர்.ஹைதர்கான். ஆசான் கக்கும் நச்சு என்னவென்று புரிகிறதா? இது இரண்டாவது மாங்காய். 

சுஜாதாவின் ஆளுமையை இப்பதிவின் மூலம் கீழிறக்க முயற்சி செய்தது ஜெயமோகனைத் தவிர வேறு யார்?

சுஜாதா புத்தகங்கள் இன்றும் விற்கப்படுகிற அளவிற்கு ஜெமோ நூல்களுக்கு விற்பனை கிடையாதே. பொறாமை இருக்காதா?

அடுத்தது இந்த விளம்பரம்எவ்வளவு அடி வாங்கினாலும் நான் பெண்களை படைப்பாளிகளாக ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று மீண்டும் மீண்டும் சொல்வதைப் பார்க்கையில் ஏதோ மன நோயால் ஜெயமோகன் பாதிக்கப்பட்டது போலவே தோன்றுகிறது.

வசை பாடுவதையும் வசை வாங்குவதையும் பெருமையாகவே கருதுகிறது என்ன போக்கு என்று தெரியவில்லை.

மன நல மருத்துவரிடம் உடனடியாகச் செல்வது அவருக்கு நல்லது.  

No comments:

Post a Comment