Monday, December 12, 2016

தாபா - ரொம்ப தப்பப்பா




இன்று முகநூலில் பார்த்த ஒரு பதிவு. வாட்ஸப்பிலும் சிலர் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

 அது கீழே நீல நிறத்தில் உள்ளது. 
 
இன்று கேட்ட ஒரு சுவாரஸ்யமான நல்ல தகவல்: 

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்த மருத்துவர் ஒருவருடன் உரையாடிக் கொண்டிருந்திருக்கிறார்.

புத்தகங்கள் வாசிப்பதைப் பற்றிய அந்த பேச்சின் ஊடாக, ஜெயலலிதா அந்த மருத்துவரிடம், "நீங்கள் உடலை குணப்படுத்தும் மருத்துவம் செய்கிறீர்கள். சமுதாய நோய்களை குணப்படுத்த சில புத்தகங்களைப் படிக்க வேண்டும்." 

"சீன புரட்சியை நிகழ்த்திய மாசேதுங் தனி வாழ்க்கையைப் பற்றி லியூசோஷி எழுதிய புத்தகத்தைப் படியுங்கள்" என்று சொன்னாராம்! 

இதை அந்த மருத்துவர், தனது நண்பரான தா.பாண்டியனிடம் சொல்லி வியந்திருக்கிறார்.

இந்த தகவலை திருப்பூரில் நவம்பர் புரட்சிதின கருத்தரங்கில் தா.பாண்டியன் தெரிவித்தார். அதைக் கேட்டபோது வியப்பாக இருந்தது. மறைந்த ஜெயலலிதா அவர்கள் மீதி மதிப்பு ஏற்பட்டது.

எள் எண்ணெய்க்குக் காயுது.எலிப்புழுக்கை எதுக்கு காயுது என்பார்கள்.

தனது மருத்துவமனைக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்க ஏதாவது செய்ய வேண்டிய அவசியம் பிரதாப் ரெட்டிக்கு உள்ளது. ஜெ விற்கு நிகழ்ந்தது இயற்கை மரணம் என்று நிரூபிக்க வேண்டிய தேவை சசிகலாவுக்கும் உள்ளது.

அவர்களின் கட்டுக்கதைகளை மெய்ப்பிக்க வேண்டிய அவசியம் தாபா விற்கு ஏன் வந்தது?

அப்பல்லோ நர்ஸ்கள் அவர்கள் ரேஞ்சிற்கு உப்புமா, கொடநாட்டு டீ, சிகை அலங்காரம் என்று சொன்னால் தாபா தன் ரேஞ்சிற்கு மாவோ, லியுசோஷி என்று அளக்கிறார். மூலதனத்தின் ஐந்து பாகங்களையும் மூன்று முறை மருத்துவமனையில் படித்த ஜெ அதன் படியே இனி ஆட்சி நடத்தப் போகிறார் என்று சொல்லாதவரை மகிழ்ச்சி.

தாபா சொன்னதை அப்படியே நம்பி பதிவிட்டவர்களும் பகிர்ந்து கொண்டவர்களும்தான் பரிதாபத்திற்குரியவர்கள்.

 

6 comments:

  1. மன்னிக்கணும் தோழரே.. கம்யூனிசம் செத்துப்போய் பல வருஷம் ஆச்சு..

    ReplyDelete
    Replies
    1. கம்யூனிசம் என்பது ஒரு தத்துவம், ஒரு கொள்கை, ஒரு லட்சியம். உழைப்பாளி மக்களின் மனதில் கனன்று கொண்டிருக்கும் தீக்கங்கு. அதற்கு காலாவதி தேதியை நிர்ணயித்தவர்கள்தான் காணாமல் போயுள்ளார்கள் திருவாளர் கருத்து கந்தசாமி

      Delete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. I don't need. You can take it yourself and enjoy it with your lunch

    ReplyDelete
  4. அப்போல்லோவிடம் இருந்து இன்னும் அதிகம் கதைகளை எதிர்பார்க்கிறோம்.....!

    ReplyDelete
  5. தாபா ஏற்கெனவே ஜெயலலிதாவின் ஜல்ரா என்பது யாவரும் அறிந்தது. இப்போது ஜெயலலிதா இரும்பு பெண், ஆளுமை கொண்ட தலைவி என்று அடித்து விட பலர் வெளிப்பட்டுள்ள நிலைமையில் தாபாவும் தனது பங்கிற்கு அப்படி தான் சொல்வார் :)
    //ஜெயலலிதா அந்த மருத்துவரிடம் "நீங்கள் உடலை குணப்படுத்தும் மருத்துவம் செய்கிறீர்கள். சமுதாய நோய்களை குணப்படுத்த சில புத்தகங்களைப் படிக்க வேண்டும்."
    "சீன புரட்சியை நிகழ்த்திய மாசேதுங் தனி வாழ்க்கையைப் பற்றி லியூசோஷி எழுதிய புத்தகத்தைப் படியுங்கள்" என்று சொன்னாராம்!
    இதை அந்த மருத்துவர் தனது நண்பரான தா.பாண்டியனிடம் சொல்லி வியந்திருக்கிறார்.
    இந்த தகவலை திருப்பூரில் நவம்பர் புரட்சிதின கருத்தரங்கில் தா.பாண்டியன் தெரிவித்தார். அதைக் கேட்டபோது வியப்பாக இருந்தது. மறைந்த ஜெயலலிதா அவர்கள் மீதி மதிப்பு ஏற்பட்டது.//
    ஒரு மேற்கோழுக்காக, நான் ஒரு கம்யூனிஸ்ட் கொள்கையில் நம்பிக்கை கொண்டவனாக இருந்திருந்தால் ராமன் சார் மதிரியே இது ஒரு பொய்யான மோசடி தகவல் என்ற முடிவுக்கு வந்திருப்பேன், அல்லது
    நான் பின்பற்றிய கொள்கை தவறானது என்ற முடிவுக்கு வந்திருப்பேன்.
    இது தான் எனக்கு புரியவேயில்லை!!!
    //தாபா சொன்னதை அப்படியே நம்பி பதிவிட்டவர்களும் பகிர்ந்து கொண்டவர்களும்//
    எப்படிங்க நம்ப முடியுது?

    ReplyDelete