Sunday, August 9, 2015

வரதட்சணை எவ்வளவென்று கணக்கு போடுவோமா?




சில வாரங்களுக்கு முன்பாக விஜய் டி.வி நீயா நானா நிகழ்ச்சியில் வரதட்சணை பற்றிய விவாதம் நடந்த போது சிறப்பு விருந்தினராக வந்த ஒருவர் ஒரு தகவல் சொன்னார். 

எவ்வளவு ரூபாய் வரதட்சணைக்கு நீங்கள் தகுதியானவர் என்று கணக்கு போட்டு சொல்வதற்கான வசதியை Shaadi.com என்ற திருமண தகவல் இணைய தளம் கொடுக்கிறது என்பதுதான் அத்தகவல். 

வரதட்சணை கொடுப்பது சட்டப்படியான குற்றம் என்ற நிலையில் இப்படி வெளிப்படையாக கணக்கு போட்டு அதனை ஊக்குவிக்கிறார்களே என்று கொஞ்சம் கோபம் கூட வந்தது. 
 
அந்த இணைய தளத்திற்குச் செல்ல இன்றுதான் நேரம் கிடைத்தது.  உங்கள் வயது, படிப்பு, ஊதியம், எங்கே வசிக்கிறீர்கள், வீடு உள்ளதா, கார் உள்ளதா என்ற தகவலையெல்லாம் கேட்டு  பதில் சொல்கிறார்கள்.

இதோ இந்த இணைப்பின் வாயிலாக  நீங்கள் அந்த வரதட்சணை  கண்க்கு போடும்    தளத்திற்குப் போய் 

உங்களுக்கு எவ்வளவு வரதட்சணை கிடைக்கும் என்று கணக்கு போடுங்கள்.

எனக்கு எவ்வளவு ரூபாய் வந்தது தெரியுமா?

கொஞ்சம் கீழே வாருங்கள்

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*

*



இதுதான் எனக்கு அந்த தளம் கணக்கிட்டுச் சொன்னது.

இன்னொன்றும் சொன்னது





தங்களின் மார்க்கெட் நிலவரம் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வமாக செல்பவர்களுக்கு சவுக்கடி.

கோபத்தோடு சென்றேன். மனம் குளிர்ந்து போனேன்.
வாழ்க அந்த இணைய தளம்.
 

 


 

2 comments:

  1. ஹாஹா! செம! அந்த இணையத்திற்கு மட்டுமல்ல! உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சரியான பதிவு. வரதட்சணை- பெண்ணை திருமணம் செய்வதற்கு எந்த பெயரில்(எமது இனத்தில் காலம் காலமாக இருந்து வருகிற எம் முன்னேர்கள் முறை, எமது பாரம்பரியம் இப்படி பல) பெண்ணிடம் ரூபாய், பொருள் வாங்கினாலும் சரி,அல்லது ஆணை திருமணம் செய்வதற்கு எந்த பெயரில் ஆணிடம் ரூபாய், பொருள் வாங்கினாலும் சரி மோசடி குற்றவாளிகளே.

    ReplyDelete