Sunday, August 23, 2015

பாகுபலி – பழங்கஞ்சி விமர்சனம்



http://www.boxofficecapsule.com/imgbig/3rd-weekend-box-office-collection-of-bahubali.jpg

படம் வெளிவந்து கிட்டத்தட்ட நாற்பது நாட்களுக்கு மேல் ஆன பிறகு நிதானமாக சனிக்கிழமையன்றுதான் பாகுபலி படத்திற்குப் போனேன். என்ன செய்வது? நேரம் கிடைக்க வேண்டுமே!

போனதும் கூட படம் ஒரு பதினைந்து நிமிடம் ஓடிய பிறகுதான். அதனால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எல்லோரும் அடித்து துவைத்து நிமிடம் நிமிடமாக அலசிய ஒரு படத்திற்கு நான் என்ன விமர்சனம் எழுதுவது?

என் மனதில் பட்ட விஷயங்கள்.

தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறந்த படம். 
கிராபிக்ஸ் எது, மினியேச்சர் எது? நிஜம் எது என்று என்னைப் போன்ற சாமானியர்கள் பிரித்தறிய முடியாத அளவிற்கு மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள படம்.
ஒளிப்பதிவும் ஒலிப்பதிவும் அபாரம்.
கதாநாயகனும் வில்லனும் செய்யும் சாகஸங்களை நம்புமளவிற்கு அவர்களின் உடல்வாகு உள்ளது.
தமன்னாவை புரட்சிப் பெண்ணாக முதலில் காண்பித்தாலும் கடைசியில் வழக்கமான தெலுங்கு கதாநாயகியை பயன்படுத்துவது போலத்தான் காண்பித்துள்ளார்கள்.
தமன்னாவால் அனுஷ்காவும் ரம்யா கிருஷ்ணனும் தப்பித்தார்கள்.
கலை - பிரமாதம்.
பின்னணி இசை நன்று. ஆனால் பாடல்கள் ஒட்டவில்லை. 
சத்யராஜை ப்யன்படுத்திய அளவிற்கு நாசருக்கு பங்கு குறைவு.

இவ்வளவு கடினமான உழைப்பு இருந்தாலும் பழைய அம்புலிமாமா கதைதான் என்பது ஏமாற்றம்.
காகில்யர்கள் பேசுவதற்காக புதிய மொழி கண்டுபிடிக்கப்பட்டு பேடண்ட் உரிமையெல்லாம் வாங்கப்பட்டதாக பில்ட் அப் செய்திகள் வந்தன. இந்த மொழியை விட விக்ரம் திரைப்படத்தின் சலாமியா மொழி மேல் என்று தோன்றியது. 

இந்த படத்தை பார்த்தவர்கள் அடுத்த பகுதியை பார்த்தேயாக வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது ஒரு சாமர்த்தியம்.

கடினமான உழைப்பிற்கேற்ற கதை இல்லை.
பார்ப்போம் அடுத்த பகுதியிலாவது அது உள்ளதா என்று!
 

1 comment:

  1. //என் மனதில் பட்ட விஷயங்கள்.//
    அவை தான் முக்கியமானவை.

    ReplyDelete