Wednesday, August 5, 2015

குடியரசுத் தலைவரும் சந்திரபாபுவும்

 http://media.newindianexpress.com/article1273691.ece/alternates/w620/chandrababu-E-E.jpg

இன்று சந்திரபாபுவின் பிறந்தநாள் என்று முகநூல் மூலம் அறிந்து கொண்டேன். அப்போது சந்திரபாபு பற்றி படித்த இரண்டு செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

கவலை இல்லாத மனிதன் என்ற படத்தில் சந்திரபாபு பாடும் ஒரு பாடலின் ஒலிப்பதிவு முடிந்த நாளன்று இரவு, மெல்லிசை மன்னரின் வீட்டிற்கு இரவு சந்திரபாபு எதிர்பாராமல் வந்தாராம். அவரது கையில் ஒரு ஏர் கூலர். "விசு என்னம்மா பாட்டு போட்டிருக்கே. உன்னோட தலை எப்பவும் கூலாக இருக்கனும்" என்று சொல்லி பரிசளித்ததாக ஒரு செய்தியை  எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு படித்த நினைவிற்கு வருகிறது.

அதே போல கவியரசர் கண்ணதாசன் எழுதிய புத்தகத்தில் படித்த சம்பவம் இது.

இந்தியா பாகிஸ்தான் போரின் போது ராணுவ வீரர்களுக்கு உற்சாகமளிக்க தமிழக திரைப்படக் கலைஞர்கள் எல்லைக்குச் செல்கிறார்கள். அவர்களின் செயலைப் பாராட்டி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவர்களுக்கு ஒரு விருந்து நடக்கிறது. அப்போது குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன். 

அவர் நம் கலைஞர்களை பாடச் சொல்கிறார். யாரும் பாடாவிட்டால் நானே பாடி விடுவேன் என்று சொல்லி அவரே ஒரு பழைய பாட்டை பாட ஆரம்பித்து விடுகிறார். உடனே சந்திரபாபு அவர் மடியில் படுத்துக் கொண்டு "நீ ரசிகன்டா" என்று கன்னத்தை தடவிக் கொடுக்கிறார். எங்கே பிரச்சினை வந்து விடப் போகிறதோ என்று எல்லோரும் அஞ்சினாலும் சந்திரபாபுவின் செய்கையை  டாக்டர் ராதாகிருஷ்ணன் ரசித்ததால்  பிரச்சினை இல்லாமல் போய் விட்டது. 

எம்.எஸ்.வி க்கு சந்திரபாபு ஏர் கூலர் வாங்கிக் கொடுக்க காரணமாக இருந்த பாடலை பார்த்தும் கேட்டும் ரசியுங்கள், கண் கலங்காமல்

3 comments:

  1. சந்திரபாபு என்றால் நகைச்சுவைதான். இப்படி ஒரு சோகப்பாடலை போட்டு மனதை
    கஷ்டப்படுத்தி விட்டீர்கள். ஒரு நல்ல நகைச்சுவைக் காட்சியை போட்டு தவறை
    சரி செய்யுங்கள்

    ReplyDelete
  2. ஓர் தலைசிறந்த அற்புத மனிதர்
    நினைவினைப் போற்றுவோம்

    ReplyDelete
  3. பாடலை ரசித்தேன் .இந்த அனானி சொன்னது சரியாயாயிக்கும் போல தோணுதுங்க. இந்த பாடல் ரொம்ப சீரியஸ்சாக உள்ளது.

    ReplyDelete