Sunday, August 30, 2015

சைலண்ட் மோடில் சமைத்தால் சாதனையில்லை – முந்திரி உருண்டை





மேலே படத்தில் உள்ள முந்திரி உருண்டை பார்க்க அழகாக இருக்கிறதல்லவா? சுவையும் கூட சூப்பராகத்தான் இருக்கும். எப்படி செய்வது என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.

முதலில் முந்திரி பருப்பை வாணலியில் வறுத்துக் கொள்ளவும். பின்பு அதை மிக்ஸியில் கரகரவென்று பொடி செய்து கொள்ளவும். பிறகு வாணலியில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சர்க்கரை போட்டு பாகு வைக்கவும். பாகில் முந்திரி பொடியை போட்டு கிளறவும். சிறிது நேரம் கிளறிய பிறகு கலவை உதிர் உதிராக கெட்டியாகி விடும்.

அதை ஏலக்காய் பொடி சேர்த்து மீண்டும் மிக்ஸியில் போட்டு அடித்து மாவாக்கிக் கொள்ளவும். நெய்யை சூடு செய்து மாவில் கலந்து சூடாக இருக்கும் போதே உருண்டையாக பிடித்துக் கொள்ளவும்.

சுவையான முந்திரி உருண்டை தயார்.

சரி, இப்போது நடந்து என்ன?

நீண்ட நாட்களாக சமையல் அறை பக்கம் செல்லவில்லையே, முந்திரி கேக் செய்வோம் என்று முயற்சித்தேன். பாகில் முந்திரி பொடியைப் போட்டு கிளறும் போது கேக்கிற்கான பக்குவத்தில் அடுப்பை அணைக்க வேண்டிய நேரத்தில் ஒரு தொலைபேசி வந்து விட்டது. போனை எடுத்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் பக்குவம் தவறிப் போய் கேக்காக வர வேண்டியது கெட்டித்தட்டிப் போய் உதிர்ந்தும் போய் விட்டது.

அதற்காக அதை அப்படியே விட்டு விட முடியுமா?

கொஞ்சம் யோசித்து பார்த்ததில் கிடைத்ததுதான் உருண்டை ஐடியா.

போனை சைலண்ட் மோடில் வைத்திருந்தால் ஒரு புதிய ஸ்வீட் கிடைத்திருக்குமா?

ஆகவே சமைக்கும் போது போனை சைலண்ட் மோடில் வைக்காதீர். பேசிக் கொண்டே சமையுங்கள். சொதப்பல் சாத்தியம். அப்போது சாதனை நிச்சயம்.


5 comments:

  1. அது சமையல்கலையில் வல்லவங்க போனை பேசி கொண்டு செய்ததால் புதிய சாதனைகள் பிறந்தது.நாங்கள் அப்படி செய்தால் குப்பை தொட்டிக்குள் கொட்ட வேண்டியது தான்.

    ReplyDelete
    Replies
    1. அட நீங்க வேற, ஒரு சொதப்பலை எவ்வளவு பில்ட் அப் கொடுத்து எழுதியிருக்கேன் என்று எனக்குத்தான தெரியும்

      Delete
  2. உங்கள் முந்திரி உருண்டைகளைப் பார்த்தால், முந்திரியோடு, ரவா போட்டுச் செய்ததுபோல் தெரிகிறதே... நெய் ஜாஸ்தி விட்டதனால், அட்ஜஸ்ட் செய்ய ஏதாகிலும் பண்ணியிருந்தீர்களா?

    ReplyDelete
  3. சர்க்கரை பாகு கெட்டி தட்டிப் போனதை மிக்சியில் அடித்ததில் ரவா போல தோற்றம் கிடைத்தது .

    ReplyDelete