Thursday, May 28, 2015

ஆர்.கே.நகர் வாக்காளர்களே, அடிக்க மாட்டீங்களே?


 
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று திமுக அறிவித்து விட்டது. விடுதலைச் சிறுத்தைகளும் அதே முடிவு எடுத்துள்ளனர். மற்ற கட்சிகளின் நிலையும் இன்னும் ஓரிரு நாளில் தெரிந்து விடும்.

இன்றைய சூழலில் இந்த இடைத் தேர்தல் ஒரு கேலிக் கூத்தாகத்தான் இருக்கப் போகிறது. நீதியை நிதியால் வென்றவர்கள், ஜனநாயகத்தை பண நாயகத்தால் வெல்லப் போகிறார்கள். சாதாரணமான இடைத் தேர்தல் என்றாலே ஆளும் கட்சியின் அத்தனை பரிவாரமும் அங்கே டேரா போட்டு எல்லா அதிகார இயந்திரங்களையும் தவறாக பயன்படுத்தும். 

இப்போது போட்டியிடப் போவதோ ஆளும் கட்சியின் தலைமை பீடம். அத்தனை அடிமைகளும் அங்கே சேவகம் செய்து வாக்கு வியாபாரம் செய்வார்கள். 

இப்படிப் பட்ட நிலைமையில் அத்தனை எதிர்க்கட்சிகளும் இடைத் தேர்தலை புறக்கணிப்பதுதான் சரியாக இருக்கும். 

போட்டியே இல்லாமல் மகா கனம் பொருந்திய அம்மையார் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்து விடலாம்.

என்ன இதனால் ஆர்.கே.நகர் வாக்காளர்களுக்குத்தான் பேரிழப்பு. 

திருமங்கலம் தொகுதியில் தொடங்கிய பார்முலா படி வாக்குகளை விற்பதற்கான வாய்ப்பு பறி போய் விடும். ஆயிரக் கணக்கில் பணம் வரும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்து விடும்.  திமுக போட்டியிடாத காரணத்தால் வாக்குக்கான ரூபாய் மதிப்பு குறைந்து விட்டதாய் ஏற்கனவே ஒரு தோழர் எழுதியிருந்தார்.

போட்டியே இல்லாமல் போய் விட்டால் கொஞ்ச நஞ்ச கவனிப்பு கூட இல்லாமல் போய் விடும்.

தேர்தலே அங்கே தேவையில்லை என்று சொன்னால் ஆர்.கே.நகர் வாக்காளர்கள் அடிக்க வருவார்களோ என்றுதான் அச்சமாக உள்ளது.
 

5 comments:

  1. அரசியல் கட்சிகளுக்கு லாபம்.
    பத்து பைசா செலவில்லை.

    பெரும்பான்மை வாக்காளர்களுக்கு
    பணம் இழப்பு.
    ஒரு சிலருக்கு நிம்மதி.. பணம் வாங்கவேண்டிய தர்மசங்கடம் இல்லாமல் போனதற்கு.
    மிகச்சிலருக்கு இளிச்சவாயன் பட்டம் கிடைக்காது என்று பெரு மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. சாதாரணமான இடைத் தேர்தல் என்றாலே ஆளும் கட்சியின் அத்தனை பரிவாரமும் அங்கே டேரா போட்டு எல்லா அதிகார இயந்திரங்களையும் தவறாக பயன்படுத்தும்.
    West Bengal & Kerala Anubhavamum idhudhaney... illaya thozhar!!

    தேர்தலே அங்கே தேவையில்லை என்று சொன்னால்...
    Adhu-vum-dhaney Communisathin kolgaigalil ondru?..

    Pin yen Communist-kal therthalil pootti idugirarkal..
    satru vilakavaum
    naan Ex(ited) communist..

    Y.Anna

    ReplyDelete
    Replies
    1. கம்யூனிஸ்டுகள் அதிகார துஷ்பிரயோகம் செய்திருந்தால் மேற்கு வங்கத்தை இழந்திருக்க மாட்டார்கள் என்பதை முன்னாள் கம்யூனிஸ்டுக்கு பணிவோடு சொல்லிக் கொள்கிறேன். பொதுத்தேர்தலுக்கும் இடைத் தேர்தலுக்கும் உள்ள வேறுபாடு என்ன என்று 71 வயதான் உங்களுக்கு தெரியாதா? அரசியல் பிரச்சாரம் என்ற முறையில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டார்கள். இப்போது ஆர்.கே.நகரில் அதுவும் அவசியம் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. பணம் புரளும் போது உண்மைகளை கேட்கும் மன நிலையில் மக்கள் இருப்பதில்லை. அப்படிப்பட்ட நிலைமைக்கு மக்களை முதலாளித்துவக் கட்சிகள் ட்யூன் செய்து வைத்துள்ளனர்

      Delete
    2. கம்யூனிஸ்டுகள் அதிகார துஷ்பிரயோகம் செய்திருந்தால் மேற்கு வங்கத்தை இழந்திருக்க மாட்டார்கள் என்பதை முன்னாள் கம்யூனிஸ்டுக்கு பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்.

      but previously they won several times!! then...??? your statement is somewhere wrong sir!

      Y.Anna

      Delete
  3. தேர்தலுக்கு வாக்க்காலர்களுக்கு பணம் கொடுக்கும் திருமங்கலம் பார்முலாவை
    அறிமுகப்படுத்தியதே கருணாநிதியின் மகன் அழகிரி தானே .இதற்குதான் தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள் மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பக் கூ டாது என்று இப்பொது எச்சில் விழுவது யாருடைய முகத்தில் ????????

    ReplyDelete