Saturday, May 16, 2015

நல்ல வேளை, நான் கலெக்டராகவில்லை!

 

என்னுடைய அப்பா பஞ்சாயத்து யூனியன் கமிஷனராக ( ப்ளாக டெவலப்மெண்ட் ஆபிசர்) இருந்து ஓய்வு பெற்றவர். நான் சிறுவனாக இருந்த காலத்தில் அப்பாவின் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் "அப்பா கமிஷனர், பையன் கலெக்டராகனும்என்று சொல்வார்கள். 

எனக்குக் கூட அந்த சபலம் இருந்தது உண்மை. கல்லூரி படித்து முடித்து எல்.ஐ.சி யில் சேர்ந்த பின்பு சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கு விண்ணப்பித்து பிரிலிமினரி தேர்வுக்கு கடுமையாக தயாரிக்கவும் செய்தேன். ஆனால் அந்த வருடம் ஜாண்டிஸ் வந்த காரணத்தால் தேர்வு எழுத முடியவில்லை. 

அதற்குப் பின்பு தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபாடு வந்து விட்டதால் அந்த கலெக்டர் ஆசை அப்போதே முடிந்து போய்விட்டது. 

இப்போது அது மிகவும் நல்ல விஷயம் என்றே தோன்றுகிறது. 

ஏனென்றால் நான் அணிவது போட்டோ கிரே கண்ணாடி. வெயிலில் அது தானாகவே கூலிங் களாசாக மாறி விடும்.

திருமணத்திற்குக் கூட கோட்டோ இல்லை சபாரியோ தைத்துக் கொள்ளாதவன். கலர் கலராகத்தான் சட்டை போடுகிறேன்.

ஆக எச்சரிக்கைக் கடிதம் பெறுவதிலிருந்து தப்பித்து விட்டேன்.

ஒரே ஒரு சந்தேகம் : பிரதமருக்கு ட்ரெஸ் கோட்  (Dress Code) எதுவும் கிடையாதா? அவரும் பல முறை கூலிங் களாஸோடு தரிசனம் தருகிறாரே?

கலர் கலராக குர்தா போடுகிறாரே!

3 comments:

  1. We missed one beautiful collector comrade. But I think we should not wear glasses and hat or cap while meeting elders and superiors. And you know, when we enter Taluk office everybody leave their chappel outside the room before entering into.

    ReplyDelete
  2. THOSE PROTOCOLS WERE OBSERVED DURING BRITISH ERA. NOW WE ARE AN INDEPENDENT
    COUNTRY. PROBABLY THE COLLECTOR LOOKED SMART WITH COOLERS THAT WOULD HAVE
    IRKED THE ADMINISTRATION. NOWA DAYS COLLECTORS ARE OPENING DOORS OF A CAR OF VIP.
    I PREFER BEING A EMPLOYEE OF A PUBLIC SECTOR THAN BEING A COLLECTOR FOR THAT REASON
    ALONE.

    ReplyDelete
  3. நல்ல வேளை, நான் கலெக்டராகவில்லை!

    yenga நல்ல வேளை கலெக்டராகவில்லை!

    ReplyDelete