Monday, May 11, 2015

இருபது சதவிகித ஊழல் நீதியே!





நீதிமான் குமாரசாமி வழங்கியுள்ள 919 பக்க தீர்ப்பை படித்துக் கொண்டிருக்கிறேன். இடைக்கால தீர்ப்பைப் போல ஒரு இடைக்கால பதிவு இது.

ஜெ வகையறாக்களின் சொத்து மதிப்பு, வருமானம், செலவின்ங்கள் குறித்து இவர் ஒரு மதிப்பீட்டிற்கு வந்துள்ளார். அந்த மதிப்பீட்டிற்கு இவர் எப்படி வந்தார், அல்லது எப்படி வரவழைக்கப்பட்டார் என்பதை தீர்ப்பை முழுமையாக படித்த பின்புதான் சொல்ல முடியும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பட்டியல்களும் தீர்ப்பில் உள்ளதுதான்.





வருமானத்திற்கு மீறிய கணக்கில் வராத சொத்து ரூபாய் இரண்டு கோடியே எண்பத்தி இரண்டு லட்சத்து முப்பத்தி ஆறாயிரத்து எண்ணூற்றி பனிரெண்டு இருப்பதாக இவரே கணக்கிட்டுள்ளார்.

அதற்குப் பிறகு சொல்கிறார் பாருங்கள் அதுதான் மிகவும் முக்கியம்.

கிருஷ்ணான்ந்த் அக்னிஹோத்ரி VS மத்தியப் பிரதேச அரசு என்ற வழக்கில் 1977 ம் ஆண்டு கொடுக்கப்பட்ட தீர்ப்பின் படி வருமானத்திற்கு மேலே உள்ள கணக்கில் வராத சொத்து இருபது சதவிகிதம் இருக்கலாம்.

இந்த வழக்கில் அது வெறும் 8.12 % மட்டுமே இருப்பதால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதால் ஜெ வகையறாக்கள் மீதான புகாரை தள்ளுபடி செய்த்தாக சொல்லி முடித்து விட்டார்.

ஆகவே இந்திய குடிமக்களே, நீங்கள் என்ன வேண்டுமானால் ஊழல் செய்யுங்கள், லஞ்சம் வாங்குங்கள். ஆனால் அந்த லஞ்சப்பணம் உங்கள் வருமானத்தில் இருபது சதவிகித்த்தை மிஞ்சக் கூடாது.

அப்படி யாராவது அது தவறு, நாணயமற்ற செயல், ஊழல் என்று சொன்னால் அவர்களின் முகத்தின் மீது நீதிமான் குமாரசாமி அவர்கள் அளித்த இத்தீர்ப்பை வீசியெறியுங்கள்.

வாழ்க ஜன்நாயகம், வாழ்க பண நாயகம், வெல்லட்டும் நிதி, வீழட்டும் நீதி.

6 comments:

  1. கொடுமைடா சாமி, இருபது சதவிகிதம் வரைக்கும் முறைகேடாக சம்பாதிக்கலாம்.

    ReplyDelete
  2. THE FAMILY WHICH SWINDLED RS 175000 CRORES IS ROAMING FREE AND A LEADER WHO HAS
    EARNED LOT OF MONEY IN HER FILMLIFE IS SLAPPED A CASE ON HER INCOME OF 66 CRORES.
    WHAT AN IRONY? NO WONDER SHE HAS BEEN RELEASED. NOW A DAYS JUDGES ARE VERY
    CLEVER. THEY KNOW POLITICIANS AMASS WEALTH, EVEN A MUNICIPALITY COUNSILOR HAS 1000
    CRORES AS ASSETS. CORRUPTION IS ORDER OF THE DAY, ONLY DEGREE OF CORRUPTION VARIES.

    ReplyDelete
  3. அப்போ 2016ல் தமிழகத்தில் பாசக அட்சி இல்லையா, அட பாவமே அப்போ அம்மா ஆட்சி பாசக வெறும் எதிர்கட்சி தானா இப்போதைக்கு..............இனி எந்த ஊழல் வழக்காக இருந்தாலும் இவரை தான் விசாரிக்க சொல்லனும். இலங்கையில் இருந்து அரசாங்க சார்பாக இந்த நீதிபதிய போர் குற்றங்கள் சமாச்சாரமா விசாரிக்க கூப்பிட்டாலும் கூப்பிடுவாங்க போல..... நீதி வாங்கலையோ நீதி தாயே நீதி வாங்கலயோ நீதி....................

    ReplyDelete
  4. ஊரை கொள்ளையடிக்கும் போது அது வருமானத்தில் இருபது சதவிகிதத்தை மிஞ்சாமல் பார்த்துக்கணும்.

    ReplyDelete
  5. அந்த மதிப்பீட்டிற்கு இவர் எப்படி வந்தார், அல்லது எப்படி


    வரவழைக்கப்பட்டார்---sir, it seems you have some proof.

    என்பதை தீர்ப்பை முழுமையாக படித்த பின்புதான் சொல்ல முடியும்.
    so, now you read fully?

    regards,
    Y.Anna

    ReplyDelete
  6. வாழ்க பண நாயகம், வெல்லட்டும் நிதி

    ReplyDelete