Thursday, May 31, 2012

இப்போதாவது மனம் வந்ததே !



ஒரு வழியாக எல்.ஐ.சி நிறுவனத்திற்கு  இன்று சேர்மன்
நியமிக்கப் பட்டு விட்டார்.

இது நாள் வரை  தற்காலிக சேர்மனாக பொறுப்பேற்றிருந்த
திரு டி.கே.மெஹ்ரோத்ரா, இன்று எல்.ஐ.சி யின் நிரந்தர
சேர்மனாகி விட்டார்.

இதிலே என்ன விஷயம் என்கிறீர்களா?

இந்தியாவின் மிகப் பெரிய நிதி நிறுவனம்,
பதினைந்து லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்து
வைத்துள்ள மகத்தான நிறுவனம்,
இந்தியா முழுதும்  இரண்டாயிரம் கிளைகள்,
ஆயிரம் துணை அலுவலகங்கள், நூற்றுக்கும் 
மேற்பட்ட கோட்ட அலுவலகங்கள், என்று 
தேசம் முழுதும் விரிந்துள்ள ஒரு பிரம்மாண்டமான
நிறுவனம் எல்.ஐ.சி ஆப் இந்தியா.

மத்தியரசை பல முறை தாங்கிப் பிடிக்கும் 
சுமை தாங்கியாக எல்.ஐ.சி தான் உள்ளது.

ஆனால் இத்தனை சிறப்பு மிக்க எல்.ஐ.சி க்கு
பதிமூன்று மாதங்களாக சேர்மன் கிடையாது.

சேர்மனை நியமிப்பதில் மத்தியரசிற்கு அவ்வளவு
அலட்சியம்.

எல்.ஐ.சி என்று மட்டுமல்ல, ஏராளமான பொதுத்துறை
நிறுவனங்களுக்கு மத்தியரசு சேர்மனை நியமிப்பதில்
அலட்சியம் காண்பிக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களை சீரழிக்கும் கொள்கை
கொண்ட மன்மோகன்சிங்  அரசு, அவற்றுக்கு சரியான
தலைமையை அளிக்காமல், முடிவுகள் எடுக்க முடியாத
நிலையை உருவாக்கி அவற்றை நாசம் செய்கின்றன.


தனியார் கம்பெனிகளின் எடுபிடிகளாக விளங்கும்
மத்தியரசிற்கு இப்போது மனம் வந்து எல்.ஐ.சி க்கு
சேர்மனை நியமித்துள்ளது.


மற்ற பொதுத்துறை வங்கிகள் விஷயத்தில் 
என்று அதற்கு கருணை சுரக்குமோ?


அரசின் 

No comments:

Post a Comment