Saturday, May 26, 2012

பெட்ரோல் விலை உயர்வு முதுகில் தெரியும் வரிகள்

பொருளியல் அரங்கம்
 
                                                         க.சுவாமிநாதன்,

                                                         பொதுச்செயலாளர்,
                                                         தென் மண்டல இன்சூரன்ஸ்
                                                         ஊழியர் கூட்டமைப்பு
 
பெட்ரோல் விலை உயர்வு
முதுகில் தெரியும் வரிகள்

சென்னையில் ஒரு லிட்டர் பெட் ரோல் ரூ.77.54 ஐ தொட்டுவிட்டது. இதில் வரிகள் மட்டும் ரூ.34.97 ஆகும்.பெட்ரோலின் அடக்க விலை பங்க்கிற்கு வரும்போது ரூ.42.57 மட்டுமே ஆகும். இந்த வரிகளில் மத்திய அரசும், மாநில அரசும் ஆள்மாற்றி மாற்றி அடிக்கிற கஸ்டம்ஸ், எக்ஸைஸ், வாட் ஆகியன அடங்கும். தமிழக அரசின் விற்பனை வரி 27 சதவீதம் மூலம் நுகர்வோரிடமிருந்து கிடைப்பது ரூ.16.56 ஆகும். வரிகள் தவிர டீலர் கமிசன் ரூ.1.50ம் இதற்குள் இருக் கிறது.

என்னிடம் பிடுங்கிஎனக்கே தானமா

அரசு எண்ணெய் வணிக நிறுவ னங்களுக்கு 2010-11ல் குறை வசூ லாக (ருசூனுநுசு சுநுஊடீஏநுசுலு) ஆன தொகை ரூ.72000 கோடிகள். இது தான் அமைச்சர் ஜெயபால் ரெட்டி தொடுக்கிற வாதம் ஆகும். ஆனால் இன்னொரு தகவலை அவர் தருவ தில்லை. 2010-11 ல் பெட்ரோல் மீதான கஸ்டம்ஸ், எக்சைஸ் மூலம் மத் திய அரசுக்கு கிடைத்தது எவ்வளவு ? ரூ.92000 கோடிகள். அதே வருடம் மாநில அரசுக்கு பெட்ரோல் விற்பனை வரிகள் வாயிலாகக் கிடைத்தது எவ் வளவு? ரூ.78000 கோடிகள். நாய் எலும்பை எடுத்து நாய்க்கும் போட்டு மீதத்தை விருந்தும் வைக்கிறார்.


அரசாங்கமாஆலமர ஜோஸ்யமா

அடுத்த மாதம் விலை குறையலாம் என ஆலமரத்தடி ஜோசியர் போல ஆரூடம் சொல்கிறது மத்திய அரசு. சர்வதேசக் கச்சா எண்ணெய் விலை கள் குறைவதால் ரூ.1.50 லிருந்து ரூ.1.80 வரை குறையலாமாம். ஆனால் வணிக இதழ்கள் இன்னொரு குண் டைப் போடுகின்றன. ரூபாய் மதிப்பு சரிவது பெட்ரோல் விலை உயர்வதற் கான அழுத்தத்தைத் தரும் என்பதே. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 100 பைசா விழுந்தால் பெட்ரோல் ஒரு லிட்டர் 77 பைசா கூடுமாம். உலகச் சந் தையின் கருணைதான் என கை விரிக் கிறது மத்திய அரசு. ஆண்டவன் சொல் றான்…. அருணாச்சலம் செய்றான்கிற மாதிரி.


ஈரத் துணியும், சொகுசு காரும்


பெட்ரோல் விலை கூடினால் பல சரக்கு, காய்கறி விலையெல்லாம் கூடி விடுமே என வயிற்றில் கட்டுவதற்கு ஈரத் துணியைத் தேடிக் கொண்டிருக் கிறார்கள் சாமானிய மக்கள். ஆனால் பெட்ரோல் விலை கூடியதால் உடனடி யாக விலைக் குறைப்பிற்கு ஆளாகி யுள்ள சரக்கு எது தெரியுமா? மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மோட்டார் ஆகியன ரூ.50000 வரை பெட்ரோல் மாடல் கார்களுக்கு தள் ளுபடி அறிவித்திருக்கின்றன. பொரு ளாதாரப் பாதையின் சூட்சுமம் பாருங் கள்.

மால்களுக்கும்’ மானியம்

அடுத்து டீசலைக் குறி வைக்கி றார்கள். இந்தியாவில் நுகரப்படும் 6.5 கோடி மெட்ரிக் டன் டீசலில் 65 சதவீதம் கார்கள் உள்ளிட்ட சொகுசு வாகனங் களால் நுகரப்படுவதேயாகும். பெரிய பெரிய மால்களில்- தொலைத் தொடர் பிற்கான கோபுரங்களில் பயன்படுத்தப் படும் டவர்களிலும் டீசல் பயன்படுத் தப்படுகிறது.இப்பயன்பாட்டிற்கும் ஒரு லிட் டருக்கு ரூ.15.35 மானியம் தரப்படு கிறது. பாரதி ஏர்டெல் நிறுவனம் ரூ.922 கோடிகளுக்கு குவால்காம் ஏசியா பசிபிக் நிறுவனத்தின் 49 சதவீதப் பங்குகளை வாங்கி தில்லி, மும்பை, அரியானா, கேரளாவிற்கான 4ஜி தக வல் சேவையைக் கைப்பற்றியுள்ளது என்பது இன்றைய ’சூடான செய்தி’.


பற்றாக்குறைக்குஎங்கே போவது?

பெட்ரோல் விலையை உயர்த்தா விட்டால் நிதிப்பற்றாக்குறையைக் கட் டுப்படுத்த முடியாது என கண்ணீர் வடிக் கிறார்கள். ஆனால் 2012-13 ல் வரிச்சலுகைகளால் அரசுக்கு ஏற்படுகிற இழப்பு ரூ.5 லட்சம் கோடிகள் ஆகும். அதில் விலை மதிப்பற்ற ஆபரணங்கள், தங்கத்திற்கு தரப்பட்டுள்ள சலுகை மட் டுமே ரூ.57000 கோடிகள்.


கொசுறு


சிரிப்பதா? அழுவதா? தெரிய வில்லை. ஒரு ஆங்கில நாளிதழ் இரண்டு பத்திச் செய்தியொன்றை அரைக்கால் பக்கத்திற்குப் போட்டு ’இரக்கமற்ற ஆட்டோ டிரைவர்கள்’ என்று தலைப்பு போட்டுள்ளது. சென்னை நங்கநல்லுhரில் குறைந்த பட்சக் கட்டணத்தை ரூ.40லிருந்து 50 ஆக ஏற்றிவிட்டார்களாம்.


நன்றி - தீக்கதிர் நாளிதழ்

No comments:

Post a Comment