Friday, November 27, 2020

மாலனின் மனுதர்ம கான்ஸ்டிடியூஷன்

 


அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தின் மீது எந்த மரியாதையோ, மதிப்போ இல்லாதவர்கள்தான் சங்கி கும்பல். 

கடந்த சில வருடங்களாக இவர்கள் அரசியல் சாசன தினம் என்ற ஒன்றை அனுசரிக்கத் தொடங்கியுள்ளார்கள். நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு கூட்டத் தொடர் ஒன்றையும் நடத்தினார்கள்.

அந்த காலகட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு  தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு பிரத்யேகமான நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. இயக்கம் நடத்தியது. அக்கோரிக்கை விவாதப் பொருளாக மாறிய நிலையில் அதனை திசை திருப்ப "அண்ணல் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாக அரசியல் சாசன தினம் கொண்டாடப் படும் என்று மடை மாற்றியது மோடி அரசு.

அந்த கூட்டத்தொடரின் முதல் பேச்சாளரான ராஜ்நாத் சிங்கே "மனு தர்மத்தின் அடிப்படையில் இந்திய அரசியல் சாசனம் அமைந்திருக்க வேண்டும்" என்று தன் வருத்தத்தை தெரிவித்தார். அப்போதே அரசியல் சாசனத்திற்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் இவர்கள் காண்பித்த மரியாதை பல்லிளித்துப் போய் விட்டது.

நேற்றும் அரசியல் சாசன தினம். சங்கிகளின் தமிழ் வார்த்தை வணிகர்களின் மூத்த தரகு எழுத்தாளர் மாலன், அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று எழுத ஆரம்பித்துள்ளார். பழைய சட்டை, ஒட்டு போட்ட சட்டை என்றெல்லாம் சொல்லி வாஜ்பாய் காலத்தில் நடக்காமல் போன அரசியல் சாசன மாற்றத்தை இப்போதாவது மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்.

இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை என்ன?


இதுதான் நம் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு. இதனை ஏற்று அமலாக்கத் தொடங்கியதைத்தான் நாம் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.


அரசியல் சாசனம் அடிப்படையாக சொல்வது என்ன தெரியுமல்லவா?

இந்தியர்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மை உள்ள, சோஷலிஸ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக உருவாக்கவும்

இந்திய மக்கள் அனைவருக்கும்

அரசியல், பொருளாதார, சமூக நீதி கிடைக்கவும்

கருத்துரிமை, அதை வெளிப்படுத்தும் உரிமை, நம்பிக்கை மற்றும் வழிபாட்டுரிமை கிட்டவும்

சம வாய்ப்பும் சம மதிப்பும் கிடைக்கவும்

அனைத்து மக்கள் மத்தியிலும் சகோதரத்துவத்தை வளர்த்திடவும்

தனி நபரின் கண்ணியத்தையும்
தேசத்தின் ஒற்றுமையையும்  

பாதுகாப்போம்  என்று 

உளப்பூர்வமாக உறுதியேற்கிறோம். 

மோடி வகையறாக்கள் இந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையைத்தான் மனுதர்மத்தின் அடிப்படையில் மாற்ற விழைகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக மாலன் எனும் முதிய குரங்கை (மூத்தவரை குரங்குக் குட்டி என்று சொல்ல முடியுமா?)  விட்டு ஆழம் பார்க்கிறார்கள். 

அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்பு நீரைக் குடிக்க முடியுமா என்று கேள்வி கேட்கிறார்.

கோமியத்தை மட்டுமே குடித்துக் கொண்டிருக்கிற மாலன் வகையறாக்களுக்கு சுவையான குடி நீர் கூட உப்பு நீராக தெரிவதில் வியப்பில்லை. ஏனென்றால் அவர்கள் மூளை எப்போதோ விஷமாகி விட்டது. 



No comments:

Post a Comment