Wednesday, July 3, 2024

நீயும் பெயில்தான் மோடி . . .

 


தான் ஒரு அறிவில்லாத முட்டாள் என்று மோடி நேற்று நிரூபித்துக் கொண்டார். 543 க்கு 99 வாங்கி பாஸ் செய்ததாக ஒரு குழந்தை கொண்டாடுவதாக சொன்னார்.

273 மார்க் வாங்காவிட்டால் அனைவரும் பெயில்தான். அப்படிப்பார்த்தால் மோடியும் பெயில்தான். கூட்டணிக் கட்சிகள் வாங்கிய மார்க்குகளை கடன் வாங்கி பாஸானதாக காண்பிக்கிறார்.

தானே பெயிலான பின்பு அடுத்தவரை பெயில் என்று எகத்தாளம் பேசுவது முட்டாள்தனமா, அயோக்கியத்தனமா?

மோடியென்றால் இரண்டும்தானே என்று சொல்கிறீர்கள்.

ஆமாம்.

அதுவும் சரிதான் . . .

Tuesday, July 2, 2024

மோடியின் (ஆபாச ) ஆட்டம் இனிதான் . . .

 


நேற்று மக்களவை களை கட்டியது. ராகுல் காந்தி தொடங்கி தோழர் சு.வெ, ஆ.ராசா, மொஹுவா மொய்த்ரா என அனைவரும் அபூர்வப் பிறவியை பின்னி எடுத்து விட்டார்கள்.

இந்தியாவிலேயே மோடிக்கு பிடிக்கவே பிடிக்காத இடம், வாரத்துக்கு இரண்டு நாட்கள் அதுவும் பத்து நிமிடங்கள் மட்டுமே இருக்கிற இடம், அங்கே கிட்டத்தட்ட ஒரு நாள் முழுதும் உட்கார வைத்து விட்டார்கள்.

சிவந்த மண் படத்தில் "பட்டத்து ராணி' பாடலின் போது தன்னை கொலை செய்யத்தான் நிகழ்ச்சியே நடக்கிறது என்று தெரிந்து கொண்ட  திவான் நம்பியாரின் முகம் எப்படி இறுக்கமாக இருந்ததோ அது போலத்தான் ராகுல் பேசும் போது மோடியின் முகம் இருந்தது.


இதற்கெல்லாம் மோடியின் எதிர்வினை எப்படி இருக்கும்?

நாகரீகமாக பதில் அளிக்க அவர் என்ன நேருவா இல்லை சீத்தாராம் யெச்சூரியா?

கேடு கெட்ட, கேவலமான அரசியல்வாதிதானே!

ஏற்கனவே இந்துக்களை அவமதித்து விட்டார் என்று திசை திருப்ப முயற்சி செய்தார். இந்து என்று சொல்லிக்கொள்பவர்கள் வன்முறையை தூண்டுகிறார்கள் என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாகத்தான் சில்லறை சங்கிகளின் பதிவுகள் அமைந்துள்ளது.

மோடியின் பதில் எப்படி இருக்கும்?

கீழேயுள்ள படம் நினைவில் உள்ளதா?



 மக்களவையில் மோடி வெளிப்படுத்திய ஆபாச உடல் மொழியின் ஒரு பகுதி.

இப்போது இன்னும் அசிங்கமாக, கேவலமாக, தரக்குறைவாக, ஆபாசமாக, பொய் மூட்டைகளோடு விஷத்தைக் கக்குவார்.

ஆமாம்!

பரமாத்மா எதுக்கு இந்த மாதிரி பாவாத்மாக்களை படைச்சு அனுப்பி இந்தியாவை சீரழிக்குது?

Monday, July 1, 2024

இன்று 74 வது பிறந்த நாள்

 



இன்று எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பிறந்த நாள்.

240 தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் சில கம்பெனிகளில் தைரியம் கொண்ட ஊழியர்கள் உருவாக்கிய சங்கங்களின் பிரதிநிதிகள் அன்றைய பம்பாயில் ஒன்று கூடி ஒரு அகில இந்திய அமைப்பின் அவசியத்தை உணர்ந்து உருவாக்கிய அமைப்புதான் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம். அந்த நாள் 01.07.1951.

சங்கம் வந்த பின்புதான் எல்.ஐ.சி வந்தது. எல்.ஐ.சி இன்று வரை பாதுகாப்பாய் இருப்பதும் சங்கத்தால்தான்.பெருமைகளை எழுத பக்கங்கள் போதாது என்பதால் அந்த முயற்சியில் ஈடுபடவில்லை. 

போராட்டத்தீயில் புடம் போட்ட பொன்னாய் ஒளி வீசித் திகழும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் என்பதுதான் எனக்கான மிகப் பெரிய பெருமிதம்.

அனைவருக்கும் சங்கத்தின் உதய தின வாழ்த்துக்கள்.