Sunday, December 27, 2020

மகிழ்ச்சியுடன் ஒரு மாற்றம்

 



இன்று எங்கள் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வேலூர் கோட்டத்தின் முப்பத்தி மூன்றாவது மாநாடு வேலூரில் நடைபெற்றது. 

கள்ளக்குறிச்சியில் விமரிசையாக நடந்திருக்க வேண்டிய மாநாடு கொரோனா காரணமாக, வழக்கமான நிகழ்வுகளான பிரச்சாரம், பேரணி, கலை இரவு போன்றவை இல்லாமல் ஒரு நாள் நிகழ்வாக பிரதிநிதிகள் பங்கேற்கும் மாநாடாக நடந்தது.

ஆனாலும் மிகவும் முக்கியமான மாநாடு.

ஏனெனில்

இது நாள் வரை இணைச்செயலாளராக பணியாற்றி வந்த இளைய தோழர் எஸ்.குணாளன், புதிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். 



அடுத்த தலைமுறை வசம் சங்கத்தலைமை செல்வது என்பது ஆரோக்கியமான செயல்பாடுகள் நீடிக்க உதவும். அந்த முறையில் கோட்டத்தின் முதன்மைப் பொறுப்பிற்கு ஒரு இளைய தோழரை கொண்டு வர முடிந்தது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

அதே போல துணைப் பொருளாளர் பொறுப்பிற்கு இன்னொரு தோழர் பி.எஸ்.பாலாஜி வந்துள்ளார்.



புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொதுச்செயலாளர் தோழர் எஸ்.குணாளன், துணைப்பொருளாளர் தோழர் பி.எஸ்.பாலாஜி உள்ளிட்ட எங்களின் கோட்டச் செயலகத்தில் உள்ள அனைத்து தோழர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

எங்கள் கோட்டம் புதிய சிகரங்களை நோக்கி நிச்சயம் பயணிக்கும். 

பிகு: தமுஎகச துணைப் பொதுச்செயலாளர் மறைந்த தோழர் கருப்பு கருணா அவர்கள் குடும்ப நல நிதியாக உதவிடுமாறு மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்தோம். சில நிமிடங்களில் ரூபாய் 8,390 நிதி கிடைக்கப்பெற்றது மனதிற்கு நிறைவாக இருந்தது.

1 comment:

  1. தோள் மாற்றி இளைப்பாறி வழி நடத்துங்கள் தோழா! சாதாரணப் பணியா? கால் நூற்றாண்டு இருக்குமே??!!!கடுத்த கால்கள் சற்றே ஓய்வெடுத்து "தலை"யாய பணி சிறக்கட்டும்..வாழ்த்துகள்

    ReplyDelete