Friday, December 7, 2018

சீ.சீ.சாமியார் என்னய்யா ஸ்பெசலு?






தஞ்சைக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் அடையாளமாக இருக்கிற பிரகதீஸ்வரர் கோயிலிற்குள் அந்த பிரம்மாண்டமான கோயிலை உருவாக்கிய ராஜராஜசோழனின் சிலையை வைக்கவே தொல்லியல் துறை மறுத்து விட்டது.

யுனெஸ்கோ அங்கீகரித்த மரபுச்சின்னத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டுமாம். 

கோயிலைக் கட்டிய ராஜராஜசோழனுக்கே அனுமதி கிடையாது என்று சட்டத்தை கறாராக பின்பற்றிய தொல்லியல் துறை,

சீ.சீ.ரவிசங்கர் சாமியார், அதே தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் பிரகாரத்திற்குள் அடைத்து வைத்த பந்தல் போட்டு ஆளுக்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்து ஆன்மீக உபன்யாசம்(!) செய்து கல்லா கட்ட எப்படி அனுமதி அளித்தது?

கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனை விடவும் சீ.சீ.சாமியார் அப்படி என்ன ஸ்பெசல்?

நான்கு கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கும் அளவிற்கு முன்பு யமுனையை நாசமாக்கவும் அந்த கலை விழாவுக்கு தற்காலிக பாலம் அமைக்க ராணுவத்தை கூலிப்படையாக மாற்றிய அவலமும் முன்பு நடந்தது. 

சீ.சீ.சாமியாரிடம் ஏன் அனைத்து அதிகார அமைப்புக்களும் வாலை குழைத்துக் கொண்டு அடி பணிகிறார்கள்?

ஊழலை ஒழிப்பேன் என்று கொஞ்ச வருடம் முன்பு கிளம்பி இப்போது ஆழ்துயிலில் இருக்கும் அன்னா ஹசாரே மாதிரியான ஆசாமிகளுக்கு இதெல்லாமும் ஊழல் என்று புரியுமா?

பிகு:

படங்கள் உதவி:  எங்கள் தஞ்சைத் தோழர் களப்பிரன்

3 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. நீ எதுக்குமே லாயக்கில்லாத வெட்டி முண்டம்.
    தற்கொலை செஞ்சுக்கிட்டு செத்து போயேண்டா

    ReplyDelete