Thursday, December 20, 2018

அடுத்தவனைக் கெடுத்து எனக்கு வாழ்க்கை வேண்டாம் . . .

நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.

எங்கள் கூட்டம் முடிந்த பின்பு எங்களோடு பேசிக் கொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கனகராஜ்,  யமஹா போராட்டம் தொடர்பாக கூறிய ஒரு தகவல் மெய்சிலிர்க்க வைத்தது என்று  நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

அத்தகவல் கீழே

"யமஹா தொழிற்சாலையில் போராட்டம் தொடங்கும் முன்பாக ஒரு இயந்திரத்தின் பாகம் ஒன்று எதிர்பாராமல் உடைந்து போயிருந்தது. அது ஒரு சாதாரணமான விஷயம்.

ஆனால் போராட்டம் தொடங்கிய பின்பு யமஹா நிர்வாகம், ஒரு ஒப்பந்த ஊழியரை அழைத்து அந்த பாகத்தை பணி நீக்கம் செய்யப்பட்ட  தொழிலாளர்கள்தான் வேண்டுமென்றே உடைத்தார்கள் என்று பொய் சாட்சியம் கூறுமாறு வலியுறுத்தி உள்ளது.  

நீ அப்படி சொன்னால் உன் வேலையை நிரந்தரம் செய்கிறோம், பணம் தருகிறோம் என்றெல்லாம் ஆசை காட்டியுள்ளார்கள். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் மிரட்டவும் செய்துள்ளார்கள்.

கடைசியில் அந்த ஒப்பந்தத் தொழிலாளி "அடுத்தவன் வாழ்க்கையைக் கெடுத்துட்டு அப்படி ஒரு வாழ்க்கை எனக்கு அவசியமில்லை. உன் கம்பெனியில் எனக்கு ஒப்பந்த ஊழியர் வேலை கூட எனக்கு தேவையில்லை"

என்று சொல்லி ராஜினாமா கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு வெளியே வந்து போராட்டப் பந்தலில் நடந்ததை சொல்லி விட்டு போய் விட்டார்."

இதை கேட்கையில் அப்படியே மெய் சிலிர்த்துப் போய் விட்டது. 

பெயர் அறியா, முகம் அறியா தோழனே,

உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான அடையாளம் நீதான். தியாகத்தின் அர்த்தமும் நீதான். உன்னை வணங்குகிறேன். வாழ்த்துகிறேன்.  வளமான எதிர்காலத்தை விட நேர்மைதான் முக்கியம் என்ற உன்னை பாராட்ட வார்த்தைகள் போதவில்லை.

தொழிலாளி வர்க்கம் உன்னைப் போன்றவர்களால்தான் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.

யமஹா நிர்வாகம் போல எல்லா நிர்வாகங்களுமே உழைக்கும் வர்க்க ஒற்றுமையை குலைக்க சில புல்லுருவிகளை பயன்படுத்தத்தான் செய்கிறது. போராட்டத்தை சீர்குலைக்க கருங்காலிகளை ஏவி விடத்தான் செய்கிறது. 

ஆனால் அதையும் தாண்டி உழைக்கும் வர்க்கம் என்றும் நிலைத்திருக்கும், நீடித்திருக்கும், வெற்றி பெறும் என்ற நம்பிக்கை மீண்டும் உறுதியாகி உள்ளது. 


8 comments:

 1. வாழ்த்துகள் முகமறியாவிட்டாலும்...
  உள்ளத்து உணர்வால் தொழிலாளர் வர்க்கம் பல்வேறு வகையினிலே உயிர்ப்புடன் உள்ளதை நினைத்தாலே உள்ளபடியே உன்னால் நாங்களும் பெருமிதங்கொள்கிறோம்

  ReplyDelete
 2. உங்களுக்கு வேண்டுமானால் அந்த தொழிலாளி முகமறியாதவனாக இருக்கலாம். யமஹா தொழிற்சங்கத்திற்கு தெரிந்திருக்கும் அல்லவா? அந்த தொழிலாளிக்கு ஒரு நல்ல வேலை வாங்கித் தர வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. அதை அவர்கள் செய்ய வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. உண்மை. நிச்சயம் செய்வார்கள் என்று நம்புகிறேன்.

   Delete
  2. கலெக்டர் வேலை ஓகே யா?

   Delete
  3. தொழில் சங்கத்தில் இருப்பவனே வேலை கிடைக்காமல் தான் யமகாவில் குப்பை கொட்டிக்கிட்டு இருக்கான்
   அவன் எப்படி இனொருவருக்கு வேறு இடத்தில் வேலை வாங்கி தர முடியும்

   Delete
  4. சக தொழிலாளி மீது அபாண்டமான பழி போட்டு அவன் வாழ்வை கெடுக்கிற, நிர்வாகம் போடும் எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டுகிற, நாய்ப்பிழைப்பு நடத்தும் கருங்காலிக் கூட்டத்தைச் சேர்ந்த இழிபிறவிகளில் ஒருவன் நீ என்பது நன்றாக தெரிகிறது

   Delete
 3. நல்ல பதிவு

  ReplyDelete
 4. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete