Monday, December 24, 2018

கனா (சினிமா) காணலாம் . . .



ஞாயிறன்று கனா பார்த்தோம்.

படத்தில் பிடித்திருந்த சில அம்சங்கள்.

"காக்கா முட்டை"யில் இரண்டு பசங்களுக்கு தாயாக நடித்தது எப்படி பொருத்தமாக இருந்ததோ, இப்படத்தில் ப்ளஸ் டூ மாணவியாக, கிரிக்கெட் வீராங்கணை பாத்திரமும் ஐஸ்வர்யா ராஜேஷிற்கு பொருத்தமாக உள்ளது. சிறப்பான நடிப்பு,

வழக்கம் போல கலக்கும் சத்யராஜ்,

பெண்களை வீட்டிலடைக்கக் கூடாது என்ற வலியுறுத்தல்,

விவசாயிகளின் வாழ்வாதாரச் சிக்கல், தற்கொலையை நாடும் நிலைமை.

பெரு முதலாளிகளின் வராக்கடனை கண்டு கொள்ளாமல் எளிய விவசாயிகளை சித்திரவதை செய்து அசிங்கப்படுத்தும் வங்கிகளை சாடுதல்,

கிரிக்கெட் உலக அரசியல்,

இறுதிப் போட்டியில் வெற்றி என்றில்லாமல் அரை இறுதியில் க்ளைமேக்ஸை வைத்தது,

காமெடியில்லாத சீரியஸான சிவ கார்த்திகேயன்.

முக்கியமாக முகத்தை சுளிக்க வைக்கும் காட்சிகளோ, வசனங்கள் இல்லாதது.

ஆகிய காரணங்களால்

நீங்களும் "கனா காணலாம்" 


2 comments:

  1. தங்களின் விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது
    நன்றி

    ReplyDelete
  2. பார்க்க வேண்டும்

    ReplyDelete