Thursday, June 22, 2017

பத்து லட்சத்தோடு தொடரும் பயணம்
கோபத்தோடு முந்தைய பதிவை எழுதி விட்டு பின்னூட்டம் இருக்கிறதா, எவ்வளவு பார்வைகள் முந்தைய நாளில் இருந்தது என்ற விபரங்களைப் பார்த்தால் ஒரு இனிய தகவல் காத்துக் கொண்டிருந்தது.

ஆம்.

வலைப்பக்கத்தின் பார்வைகள், அதாவது Hits பத்து லட்சம்  என்ற எண்ணிக்கையை கடந்துள்ளது. மனதிற்கு மகிழ்ச்சியும் அளிக்கிறது.

2009 ல் வலைப்பக்கம் துவங்கினாலும்  2010 மத்தியிலிருந்துதான் தீவிரமாக இயங்கத் தொடங்கினேன்.  அப்போது தொடங்கிய பயணம் இதுவரை நிற்காமல் தொடர்கிறது. வெளியூர் பயணங்களின் போது பதிவுகள் எழுதியிருந்தாலும் வெளியிட முடியாத நிலை இருந்தது. ஸ்மார்ட் போன் வந்த பின்பு அந்த பிரச்சினை தீர்ந்து விட்டது. அந்த மாதிரி சமயங்களுக்காக சில புகைப்படங்கள், புத்தக விமர்சனங்கள் ஆகியவை ட்ராப்டில் தயாராகவே இருக்கும்.

இத்தனை நாள் வலைப்பக்க அனுபவத்தில் கற்றுக் கொண்ட ஒரு முக்கியமான ரகசியம் ஒன்றை பகிர்ந்து கொள்கிறேன். நீங்கள் வைக்கும் தலைப்புதான் உங்கள் பதிவை படிக்க தூண்டுகிறது. ஈர்க்கும் தலைப்பு இல்லாவிடில் முக்கியமான விஷயங்கள் எழுதியிருந்தாலும் அவை கண்டுகொள்ளப்படாத அபாயம் உண்டு.

ஆயிரம் பதிவுகளை எழுதிய போது இரண்டு லட்சம் என்ற எண்ணிக்கையில் பார்வைகள் இருந்தது. பதிவுகள் இரண்டாயிரத்தைத் தொட்ட போது ஐந்து லட்சம் என்று பார்வைகள் அதிகரித்தது. மூவாயிரமாவது பதிவை நெருங்குகையில் பத்து லட்சம் என்ற மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

அன்றாட நிகழ்வுகளை இடதுசாரிப் பார்வையுடன் எழுதுவது என்பது முன்னுரிமையாக இருந்தது. அவ்வப்போது சற்று இளைப்பாற இசை, சமையல் என்றும் செல்வேன்.  இன்றைக்கு மதவெறி மூலம் நாட்டை நாசமாக்கும் சங் பரிவாரக் கும்பலின் மோசடிகளை, பொய்களை அம்பலப்படுத்துவதே பிரதான பணியாக இருக்கிறது.

அந்த பணியை மேலும் வேகப்படுத்த “பத்து லட்சம் பார்வைகள்” என்ற எண்ணிக்கை உண்மையிலேயே உற்சாகப்படுத்துகிறது. ஒரு சில அனானிகளின் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. கரப்பான்பூச்சி, கொசுக்களோடுதானே வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது.

ஆதரவளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.

சரியான பாதை எது என்பதை வழி காட்டிய எங்கள் அகில இந்திய  இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இல்லாவிடில் நானும் இல்லை, என் எழுத்துக்களும் இல்லை என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாக பதிவு செய்யும் தருணம் இதுதான்.

21 comments:

 1. வாழ்த்துகள் தோழரே! மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், ஊழல் அரசியல்-தேசவிரோத சக்திகளை அம்பலப் படுத்தியும் கூர்மையாகவும் நேர்மையாகவும் வெளிப்பட்ட உங்கள் பதிவுகள் இணையத் தமிழ் வரலாற்றில் என்றும் புகழோடு நிலைத்திருக்கும் தொடரட்டும் பணிகள்!

  ReplyDelete
  Replies
  1. உற்சாகமளிக்கும் உங்களுக்கு மிகவும் நன்றி தோழரே

   Delete
 2. பத்து இலட்சம் அதுவும் மிகக் குறுகிய
  காலத்தில்..பயனுள்ள விசாலமான
  சமூகப்பார்வையுடன் என்பது
  வலையுலகில்ஒரு இமாலயச்சாதனையே

  சாதனைகள் மென்மேலும் தொடர
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நெஞ்சம் நிறைந்த நன்றிகள் பல

   Delete
 3. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மனமார்ந்த நன்றி தோழரே

   Delete
 4. வாழ்த்துக்கள் நண்பரே
  தங்களின் எழுத்துக்களைத் தொடர்ந்து வாசித்து வருகின்றேன்
  தங்களின் கோபப் பார்வையும், எவர்க்கும் அஞ்சாது கருத்துக்களை
  முன் வைக்கும் குணமும் என்னைப் பெரிதும் கவர்ந்தவை
  தொடருங்கள் நண்பரே
  மீண்டும் மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உத்வேகமளிக்கும் உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி நண்பரே

   Delete
  2. 10 latchatulaa
   ungakitta
   thittu
   vaangina number?

   Delete
  3. பொறாமையில் உடல் முழுதும் எரிகிறதா?

   Delete
  4. Namma oor
   bus standlajee
   daily
   3000 visitors
   oruthar
   vanguraar!

   yenna seiyaa!

   avara paarthaa
   udal yerivadillay!


   paavam
   paithiyam nu
   nenaichukuven!!!


   dhairiyam irundhaal
   appadiya podunga sir!

   Delete
  5. உன் பின்னூட்டத்தை நான் பிரசுரித்து விட்டேன்.
   உனக்கு தைரியமிருந்தால் உன் அடையாளத்தை
   வெளிப்படுத்து.
   உன்னால் முடியாது. நீ ஒரு மோசடிப் பேர்வழி

   Delete
 5. வாழ்த்துகள் காம்ரேட், உங்கள் எழுத்துப் பணி சிறக்க மீண்டும் வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. I read your post - it is hilarious - comedy piece

   Delete
  2. It is a old dirty trick of ridiculing. Try some thing New, Mr Coward

   Delete
  3. It is a old dirty trick of ridiculing. Try some thing New, Mr Coward

   Delete