Wednesday, August 6, 2014

மனிதர்கள் மீது நம்பிக்கை வைக்கலாம்

இன்று இணையத்தில் உலவிக்கொண்டிருந்த போது கண்ணில் பட்ட இரண்டு  செய்திகள் உற்சாகம் அளிப்பதாக இருந்தது.

போட்டியும் பொறாமையும் வன்மமும் குரோதமமும் நிறைந்த இந்த உலகில் மனிதம் என்பது மறைந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்ச உணர்வு ஏற்பட்டாலும் அப்படியெல்லாம் நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை என்று உற்சாகமூட்டக் கூடிய விதத்திலும் சில சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

இதோ இன்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம். ரயில் ஏறப் போன ஒரு பயணி ரயிலுக்கும் பிளாட்பாரத்திற்கும் இடையே விழுந்து கால் மாட்டிக் கொண்டு விட்டது. அவரை மீட்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக பயணிகள் ஒன்றாக சேர்ந்து அவ்வளவு பெரிய கனமான ரயிலை அப்படியே சாய்த்து அந்த பயணிகளை மீட்டுள்ளார்கள்.

ஒரு மனிதர் சூப்பர் மேனாக பதினைந்தாயிரம் பேரைக் காப்பாற்றிய கற்பனைக் கதை இல்லை இது.

பல மனிதர்கள் ஒன்றாக சேர்ந்து ஒரு மனிதரைக் காப்பாற்றிய உண்மைச் சம்பவம் இது.

இந்த படம் அந்த உண்மையை உங்களுக்கு உணர்த்தும்.


இன்னொரு செய்தி உடல் ஊனத்தை உள்ளத்து உறுதியால் வென்ற ஒரு வாகையாளர் பற்றியது. அது அடுத்த பதிவில்

2 comments:

  1. excellent job by co passengers.

    seshan/dubai

    ReplyDelete
  2. good article! keep writing such things

    ReplyDelete