Tuesday, August 19, 2014

இந்து நாடென்றால் இது என் நாடல்ல

நச்சுப் பாம்புகள் விஷம் கக்க ஆரம்பித்து விட்டன. பரமசிவன் கழுத்து பாம்பே கருடா சௌக்கியமா என்று கேட்குமாம். இவர்களோ ஆட்சியில் இருக்கும்  ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷப் பாம்பு. ஆணவம் தலைக்கேறி  இது இந்து நாடு என்று பிரகடனப்படுத்துகின்றனர்.

பல்வேறு ஜாதி, மதம், இனம், மொழி இதையெல்லாம் கடந்து இந்தியன் என்ற உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களை பிளவுபடுத்தி வெறுப்பெனும் நெருப்பை மூட்டி அதிலே குளிர் காய நினைக்கிற கொடூர மனிதர்கள் கையில் கிடைத்துள்ள ஆட்சியதிகாரத்தை கொள்ளிக் கட்டையாகவே பயன்படுத்துகிறார்கள்.

அனைத்து மதத்தினரும் கொண்ட, மதங்களை நம்பாதவர்களும் கொண்ட நாடுதான் என் நாடு. மதச் சார்பின்மை என்பதுதான் என்  மக்களை இணைக்கும்  அன்புக் கயிறு.

இந்தியா இந்துக்களின் நாடாகத்தான் இருக்கும் என்றும், இந்துக்கள் மட்டும் தான் இங்கே இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு வெறி பிடித்த சங் பரிவாரக் கூட்டத்திற்கு உரிமை உண்டென்றால், அப்படிப்பட்ட நாடு என்னுடைய நாடு கிடையாது என்று சொல்ல எனக்கு உரிமை உண்டு.

அதற்காக நான் பாகிஸ்தான் போக வேண்டிய அவசியமும் கிடையாது.

இன்னும் ஒரு முக்கியமான செய்தி : இந்துக்களின் பிரதிநிதிகளும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போ, பாஜக வோ கிடையாது. இந்து என்ற பெயரில் பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாதம் கூட்டம் அது. அவ்வளவுதான்.

5 comments:

 1. CLICK AND READ.


  >>>1.இந்து மதம் எங்கிருந்து வந்தது? <<<<


  >>>>2.இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? <<<

  >>>>3.
  இந்து மதம் என்பது பிராமண மதம். பிராமணர்கள் இந்தியர்கள் இல்லை.
  இந்தியர்கள் இல்லாதவர்களின் மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை!
  இந்துக்களின் நாடு, இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில் இருக்கின்றது? எந்த புராணத்தில் இருக்கின்றது? எந்த சட்டத்தில் இருக்கின்றது?
  இந்து என்பது ஒரு பாரசீக சொல்லாகும். அதற்கு அதிகாரப் பொருள், திருடன், வழிப்பறிக் கொள்ளையன், கொள்ளையன் என்பதாகும்.
  <<<


  >>> 4. ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான். <<<<

  ReplyDelete
 2. இந்து மதத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களை முட்டாள்களாக்கவேண்டாம்: ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு திக் விஜய் சிங் கண்டனம்!

  ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று பேசும் போது போது இந்தியா ஒரு இந்து நாடு இந்துத்துவம் இந்தியாவின் அடையாளம் என்று அறிவீனமாக பேசினார்.

  இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இதுபோன்று அரசியலில் மதத்தை பயன்படுத்தி மக்களை முட்டாளாக்க வேண்டாம், சனாதன் தர்மா மற்றும் சகிப்புத்தன்மை நமது பெருமையாகும். இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டம் தெரிவித்துள்ள திக்விஜய் சிங் மத வேதங்களில் எங்காவது இந்து இந்துத்துவா என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

  http://news.vikatan.com/article.php?module=news&aid=31433

  http://www.dinamani.com/latest_news/2014/08/18/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-/article2385591.ece

  ReplyDelete
 3. தான் ஒரு இந்து என்று சொல்கிறவர். சொல்லத்துணிகிறவர். இந்துவாக
  அடையாளம் இல்லாத எந்த ஒரு உயிரையும் நேசிப்பவராக் இருத்தல் வேண்டும்.

  தான் ஒரு முஸ்லிம் என்று சொல்கிறவர் சொல்லத்துணிகிறவர். முஸ்லிமாக
  அடையாளம் இல்லாத எந்த ஒரு உயிரையும் நேசிப்பவராக இருத்தல் வேண்டும்.

  தான் ஒரு தான் ஒரு கிருத்துவர் என்று சொல்கிறவர். சொல்லத்துணிகிறவர். கிருத்துவனாக அடையாளம் இல்லாத எந்த ஒரு உயிரையும் நேசிப்பவராக இருத்தல் வேண்டும்.

  தான் ஒரு நாத்திகர் என்று சொல்கிறவர். சொல்லத்துணிறவர் நாத்திகராக அடையாளம் இல்லாத எந்த ஒரு உயிரையும் நேசிப்பவனாக இருத்தல் வேண்டும்.

  தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்கிறவர். சொல்லத்துணிகிறவர்.கம்யூனிஸ அடையாளம் இல்லாத எந்த ஒரு உயிரையும் நேசிப்பவனாக இருத்தல் வேண்டும்.

  இறுதியாக

  தான் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்கிறவன். சொல்லத்துனிகிறவன்.கம்யூனிஸ அடையாளம் இல்லாத எந்த ஒரு உயிரையும் நேசிப்பவனாக இருத்தல் வேண்டும்.

  தான் ஒரு மனிதர் என்று சொல்கிறவர். சொல்லத்துணிகிறவர்.மனித அடையாளம் இல்லாத எந்த ஒரு உயிரையும் நேசிப்பவனாக இருத்தல் வேண்டும்.
  ReplyDelete
 4. http://velvetri.blogspot.in/2014/02/blog-post_17.html

  ReplyDelete