Sunday, August 10, 2014

ஒன்றரைக் கோடி ரூபாய் சட்டையும் அம்பானி கட்டிய வீடும்

இணையத்தில் ஒரு செய்தி படித்தேன். நீங்களும் படித்திருக்கலாம். மும்பையில் ஒரு பணக்காரர் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் சட்டை செய்து மாட்டி மகிழ்ந்திருக்கிறார். 
இதுதான் அந்த தங்கச்சட்டை

 
இந்த ஒரு மனிதர் மட்டும்தானா இல்லை இது போல இன்னும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தால் பூனாவில் இதற்கு முன்பே பூனாவில் இன்னொரு மனிதர் தங்கச்சட்டை போட்டிருக்கிறார். அது அவ்வளவு காஸ்ட்லி இல்லை. வெறும் பதினைந்து லட்சம் ரூபாய் மட்டுமே. அந்தச் சட்டையை கீழே பாருங்கள்.

இன்னும் கொஞ்சம் தேடிப்பார்த்தால் உடலெங்கும் தங்கமாக இங்கே ஒரு
மனிதன்.
இவர்களை எல்லாம் எந்த வரையறைக்குள் சேர்ப்பது. தங்கமான மனிதர்கள் என்று இப்படி தங்கத்தை அணிந்து கொண்டு பெயர் வாங்கப் பார்க்கிறார்கள் போலும்.

வளர்ப்பு மகன் திருமணத்தின் போது " Vulgar Expression of Wealth" என்று யாரோ விமரிசித்ததுதான் நினைவிற்கு வந்தது. 

பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான் என்று தயவு செய்து யாரும் பின்னூட்டம் போடாதீர்கள். இதெல்லாம் ஒரு வித திமிர். அம்பானி ஆறாயிரம் கோடி  ரூபாயில் கட்டிய வீட்டினைப் போல. 
 
 

 

16 comments:

 1. அம்பானியின் வீடு 8000 /- கோடி ரூ !.27 மாடி ! ஹெலிகாப்டர் இறங்கு தளத்தோடு !---காஸ்யபன்

  ReplyDelete
 2. பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான்

  ReplyDelete
 3. பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான். :) பல் இல்லாதவன் வலைப்பூ எழுதுரான் / வாசிக்கிறான்.

  ReplyDelete
 4. ஒன்றை சொல்லாதே என்ர பின்னும் அதையே சொல்வதும் ஒரு விதத் திமிர்தான் அனானி

  ReplyDelete
 5. உங்களைப் பார்த்தால் பார்ப்பனர் போல தெரிகிறது. அல்லது வேலூர் என்றால் அங்கே தெலுங்கர்கள் நிறைய இருப்பார்கள் இந்த கிருஷ்ணன்,ராமன் எல்லாம் இந்த ரெண்டு குழுவில் எதோ ஒன்றில் அடங்குகிறது.உங்களின் தொடர்வோர் பட்டியலிலும் காஷ்யபன் ஸ்வாமிநாதன் போன்றவர்களும் இருக்கிறார்கள். இது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான காலம் அல்ல என்று சிபிம் ரங்கராஜன் என்ற பார்ப்பனர் கூறியுள்ளார் தஞ்சைக்கு வந்த சீனிவாச ராவ் என்பவர் தனது சாதி பட்டத்தை ஏன் துறக்கவில்லை ? பார்ப்பனர்கள் தொழிற்சங்கம் கட்டினாலும் புரட்சி நடத்தினாலும் இப்படித்தான் இருக்கும்.வைதீககப் பார்ப்பனர்களை விட முற்போக்கு பார்ப்பனர்கள் ஆபத்தானவர்கள் என்பதே உண்மை. இந்தப் பின்னூட்டத்தை அனுமதிக்காவிட்டாலும் கவலை இல்லை.

  ReplyDelete
 6. திமிர்தான். அதனால் என்ன? இருந்து விட்டு போகட்டும். பொறாமையை குறையுங்கள் அய்யா.

  ReplyDelete
 7. பல் இல்லாதவன் வலைப்பூ எழுதுரான் / வாசிக்கிறான்.- anonyAugust 11, 2014 at 11:11 PM

  மறந்து விட்டேன். இங்கு பின்னூட்டியிருப்பது இரண்டு அனானிக்கள். நான் இரண்டாவது அனானி.
  Great anonies think alike. :-)

  ReplyDelete
 8. ஜாதியைப் பற்றி எழுதியுள்ள அனானி யாரென்று எனக்கு தெரியவில்லை. யாரென்று யூகிக்க முடிந்தாலும் எந்த முடிவிற்கும் வரவில்லை. ஆனால் ஜாதி மறந்து பணி செய்பவர்களை ஜாதியில் கொண்டு போய் திணிக்க முயலும் அவர் போன்றவர்கள் மிகவும் அபாயகரமானவர்கள். புரட்சிகர கருத்து உள்ளவர்கள் என்று தங்களைக் கருதிக் கொண்டிருக்கிற சில போலிகள் மற்றவர்களின் பணியை இவ்வாறு ஜாதியின் பெயரால் மட்டம் தட்டுவது அவர்களின் அல்பத்தனத்தின் அடையாளம். தோழர் சீனிவாசராவைப் பற்றி கீழத்தஞ்சை மாவட்டத்தில் அந்த அனானியார் இவ்வாறு சொல்லிப் பார்க்கட்டும். தொழிற்சங்க நடவடிக்கைககான காலம் இல்லை என்று தோழர் டி.கே.ஆர் எப்போது சொன்னார் என்பதை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? பின்னூட்டத்தில் தன் அடையாளத்தைக் காண்பிக்கக்கூட தயாரில்லாத அனானிக்கு அடுத்தவரை குறை கூற அருகதை கிடையாது. கோழைகள் வீரம் பேசக்கூடாது

  ReplyDelete
 9. இதில் பொறாமை என்ன இருக்கிறது அனானி? இந்த பணத்தை உருப்படியாக செலவழித்திருந்தால் பாராட்டியிருப்பேன்

  ReplyDelete
 10. Anoni-I The Great:

  http://www.vinavu.com/2014/07/23/tape-kaadar-a-voice-of-masses-2/

  இது வெறும் அனுமானமல்ல. “இது தொழிற்சங்க நடவடிக்கைக்கான காலம் அல்ல” என வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் டி.கே ரங்கராஜன் குறிப்பிட்டார்.

  Please go through the link and go to sleep upside down

  காஷ்யபன் நசிகேத வெண்பாவைத் தொடர்கிறார் அதாவது பூணூலை அணிந்து கொண்டே புரட்சியை முன்னெடுக்க முடியும் என்று நம்புகிறார் போலும் கீழத் தஞ்சை என்ன மேலத் தஞ்சையிலும் சென்று உண்மையை சொல்லலாம் அதற்கான உரிமை எமக்கு இருக்கிறது நவீன பண்ணையார்களாக மாறியுள்ள
  சிபிஎம் காலிகள் எம்மைத் தடுக்க முனையலாம் ஆனால் அது நிறைவேறாது நான் முதலில் பார்ப்பான் பின்னர்தான் கம்யுனிஸ்ட் என்று சொன்னாரே வங்கப் பார்ப்பான் சோம்நாத் "சட்டர்ஜி" நீங்கள் உங்களது பூணூலை கழட்டி எரிந்து விட்டீர்களா அல்லது பூணூலையே போர்க் கருவியாகப் பயன்படுத்தி புரட்சியை நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளீர்களா ? அடையாளத்துக்கும் வீரத்துக்கும் என்னய்யா தொடர்பு ? அடையாளம் காண்பித்தால் உங்கள் கட்சியின் குண்டர்களை ஆட்டோவில் அனுப்பி அடித்து நொறுக்கலாம் என்றா? மீசையை முர்க்குவது நெஞ்சை நிமிர்த்துவது இதெல்லாம் நிலப் பிரபுத்துவ கால "வீரம்" இன்னும் அங்கே இருந்து நீங்கள் நகரவே இல்லை என்பதைத் தான் காட்டுகிறது.

  ReplyDelete
 11. தன் அடையாளத்தை மறைத்து அனானியாக அதிலும் அனானி தி கிரேட் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் இணையதள புரட்சியாளர் கும்பலா நீங்கள்? மக்கள் மத்தியில் வராமல் ரகசியமாக மார்க்சிஸ்ட் கட்சியை திட்டுவதை மட்டுமே புரட்சிகர நடவடிக்கை என்று கொண்டுள்ள வீரராகிய உங்களுக்கு ஏன் சி.பிஎம் காலிகளை நினைத்து நடுக்கம் வருகிறது. உருப்படியாக எதுவும் செய்யாமல் வெட்டிக்கதை பேசிக்கொண்டிருக்கும் அனானியான நீங்கள் யார் என்றும் நீங்கள் என்ன புரட்சிகரமான நடவடிக்கைகள் செய்துள்ளீர்கள் என்றும் சொல்லுங்கள், பிறகு நான் பூணொல் போட்டுள்ளேனா, எரித்துள்ளேனா என்று சொல்கிறேன். ஆள் கடத்தல், கஞ்சா விற்பனை போன்ற கேடு கெட்ட நடவடிக்கைகளிலிருந்து நீங்கள் எப்போது வெளியே வரப்போகிறீர்கள். மாவோ வின் பெயருக்கே நீங்கள்தான் இழுக்கு.

  டேப் காதர் பற்றி தமுஎகச வெளியிட்ட அறிக்கை இந்த வலைப்பக்கத்திலேயே உள்ளது.

  அதை படித்து தெளிவு பெறவும்.

  மீண்டும் சொல்கிறேன்.

  You don't deserve to be a communist when you are not ready to show your identity.

  காவிக்கூட்டத்தை விட அதிக வன்மமும் வக்கிரமும் கொண்டவர்கள் "தாங்கள் மட்டுமே கம்யூனிஸ்ட்" என்று மூடத்தனமாக நினைக்கும் உங்களைப் போன்றவர்கள்தான்.

  அனானியாக வந்தால் உங்களுக்கு இனி இங்கே இடம் கிடையாது.

  தோழர் டி.கே.ஆர் பற்றி ஆதாரம் கொடுக்கவும். வினவு சொல்லியிருப்பது பொத்தாம்பொதுவானது. முழுமையாக சொல்லவும். இது அபத்தமானது. ஏனென்றால் கடந்த மாதம் வேலூரில் நடந்த ஒரு கூட்டத்திலேயே தொழிற்சங்க இயக்கம் இன்னும் வீரியத்துடன் போராட வேண்டிய காலம் இதுதான் என்று சொல்லியிருந்தார்.

  மோடியைப் போலவே நீங்களும் பொய்யர்கள்தான் என்பதற்கு இது ஒரு உதாரணம்

  ReplyDelete
 12. அனானி தி கிரேட் - உன் ஜாதி என்ன என்று கேட்பது பாட்டாளி வர்க்க குணாம்சமா இல்லை பண்ணையார் புத்தியா? திருத்தப்பட வேண்டியது நீங்கள்தான்

  ReplyDelete
 13. நான் எனது உண்மையான பெயரில் கருத்து சொல்லுகிறேன் முடிந்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் அய்யா லாகின் செய்ய நேரம் ஆகும் என்பதால் தான் அனானியாக வருகிறேனே தவிர வேறொன்றும் இல்லை

  ReplyDelete
 14. நான் எனது உண்மையான பெயரில் கருத்து சொல்லுகிறேன் முடிந்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் அய்யா லாகின் செய்ய நேரம் ஆகும் என்பதால் தான் அனானியாக வருகிறேனே தவிர வேறொன்றும் இல்லை

  ReplyDelete
 15. லாகின் செய்யாவிட்டாலும் அனானியாக எழுதுபவர்களில் பலர் தங்கள் பெயரை எழுதுவது உண்டு. சரி கடைசியாக நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அந்த அனானி நீங்கள் என்றால்.

  ReplyDelete
 16. பல் இருப்பவன் பக்கோடா சாப்பிடுகிறான். :) பல் இல்லாதவன் வலைப்பூ எழுதுரான். ///wonderful //

  ReplyDelete