Tuesday, August 12, 2014

பிள்ளையாருக்கு சக்தி கொடுத்து பறிக்கும் மனிதர்கள்

 http://3.bp.blogspot.com/-2yPReqNCmdM/Tno7Z53J3nI/AAAAAAAABUE/_o2KE3-5cys/s1600/police.jpg

நேற்று விருத்தாச்சலம் போய் திரும்பி வந்து கொண்டிருந்தோம். நாங்கள் சென்ற வாகனத்திற்கு முன்பாக ஒரு குட்டி யானை லாரி  நான்கைந்து  பிள்ளையார் சிலைகளை ஏற்றிக் கொண்டு  போய்க்கொண்டிருந்தது. அதிலே இரண்டு பிள்ளையார்களை தலைகீழாக வேறு வைத்திருந்தார்கள். அடிமாடுகளை லாரியில் மூச்சுவிடக் முடியாமல் அவஸ்தை செய்து கூட்டிப் போவார்களே அது போன்ற நிலைதான் பிள்ளையார் சிலைகளுக்கும்.

விழுப்புரம் வெளியே ஒரு விடுதியில் உணவு எடுத்துக் கொள்ளச் சென்ற போது "பாவம் பிள்ளையார் இவங்க கிட்ட மாட்டிக்கிட்டு கஷ்டப் படறாரு, அவர்தான் சக்தியுள்ளவராச்சே. போக வேண்டிய இடத்திற்கு அவரே போயிடலாமே" என்றேன் நான்.

பக்கத்தில் நின்று கொன்டிருந்த ஒரு பெரியவர் " பந்தலுக்கு கொண்டு வந்து பூஜை செய்து கண் திறந்த பின்புதான் அவருக்கு சக்தி வரும்" என்றார்.

"சரி சார், அவ்வளவு சக்தியுள்ளவரை கட்டையால் அடிச்சு ஏன் கடலில் தள்ளனும்" என்ற கேள்விக்கும் அவரிடம் பதிலளித்தார்.

"விஸ்ர்ஜன பூஜை முடிந்ததும் அவருக்கு சக்தி இருக்காது. அதனால் தவறில்லை"

அதற்கு பிறகு நான் ஹோட்டலுக்கு  உள்ளே போய் விட்டேன். அவரும் கிளம்பி விட்டார்.

ஆனால் அவர் ஒரு உண்மையை அழகாக சொல்லி விட்டார்.

கடவுளை படைத்தது மனிதன்தான். கடவுளுக்கு சக்தி இருப்பதாய் கதை செய்வதும் மனிதன்தான். 


10 comments:

 1. பிள்ளையாருக்கே பால் புகட்டியதும் மனிதன் தானே ?

  ReplyDelete
  Replies
  1. அந்த காமெடியை மறக்க முடியுமா?

   Delete
 2. hotel-ku pogum mun pasi irunthathu
  hotel-la irundhu varumbodhu adhu yengey?

  adhu unvin sakthi-nu sonnal idhu kadavul(nambikkai) sakthi
  thinna pasi pogumunna, adhu thirumbi yen varudhu?

  adhu madiri visarjanam seidhal!
  adhavadhu unavu kaali aaanaal
  namma power over, andha silay power over!
  thirumba vayiru full seiyanum (pudhu food sappiitu)
  pudhu silai punar poojai podanum.

  hm! communisamum therindha mudhalalikku!
  hm! kadavula theriyaley!

  kadavul yengirathu or nambikkai!

  yeppadi "Tajmahal"-na "LOVE" symbol
  Russia (ippa yellay) - na communisam
  Silai(idol)-na power(manasu amaidhi)!!

  Communist-nu label potta kadavul nammbikkai
  illatti paravaa-illey, atleast yethayavadu nambunga (eg. communism, budhism,sikism..etc.)

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப நல்லா குழப்பறீங்க அனானி, பூஜை செய்தால் கடவுளுக்கு சக்தி வரும், போய் விடும் என்று உள்ளே வெளியே ஆட்டம் ஆடறீங்க. நான் சொன்னதை ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நன்றி

   Delete
  2. கடவுளை படைத்தது மனிதன்தான். கடவுளுக்கு சக்தி இருப்பதாய் கதை செய்வதும் IDHU THAVARU (Nambuvathum) மனிதன்தான்.

   Idhu yeppadi-na Communism vandhaal Indiyaaa-veyyy!! Rusya madhiri .........(note this point he!he!)?? Agividum-nu Neenga Nambavillaya? (nambikkai thaney sir vaalkai!!!)

   Latest example: China-maaadiri, innaikku original communisam angathaan irukku!!
   adhuvum "tion-nen-men" sadukkathula!!! WOW!!

   (yellaam communisa (bell-bottom) mudhalali sonnal sariya irukkum)

   ரொம்ப நல்லா குழப்பறீங்க அனானி, பூஜை செய்தால் கடவுளுக்கு சக்தி வரும், போய் விடும் என்று உள்ளே வெளியே ஆட்டம் ஆடறீங்க. நான் சொன்னதை ஒப்புக் கொண்டுள்ளீர்கள். நன்றி

   நான் சொன்னதை ஒப்புக் கொண்டுள்ளீர்கள்-- idhu sariyalla mudhalali!! mutrilum thavaru!!

   பூஜை செய்தால் கடவுளுக்கு சக்தி வரும், போய் விடும்- idhu Miga miga sari!

   Andha silai, silai aagum mun verum mannu allathu Plaster of Paris(POP),
   Adhey pola "manjal" pillayar kooda mudhalil Manjal.
   Aanaal "Aavahanam"(staabithal) seitha pinnarey adhu swami.


   (Paatu dedicate panren:

   yentha mannum verum mannu-thaan
   mannil pirakayiley!
   adhu "Saami" aavathum
   "Satti aavathum" Manithan seikayile!
   Naan "aaraaro" yendru "pinnootta"
   innum yaaar yaaaro vandhu "sandai pooda")


   Kal silai verum silayey (staaabi-kku mun)
   Adhuvey kovilil vaithu aagama muraipadi
   staabithaal adhu "shakthi" vaindha(sakthi udaya) swami(silai)!   adhukkaaka !!

   apple-la irundhu apple "Juice"
   Orange-la irundhu Orange"Juice"

   Appo!!!
   Mattula irundhu-nu ...
   keekapadaathu....avvv
   yellathukkum vera vera "per & sakti"
   purinja-thunnu ninai-kiren!!!
   (- thanks to "our" batman & vadivelu).

   Delete
  3. முடியல - இதையும் வடிவேலு பாணியிலேயே படித்து விடுங்கள்

   Delete
 3. முழுமுதற் கடவுளை மூழ்கடிக்கும் மூன்று பேர் , காப்பாற்று கடவுளே என கைதொழும் மூஞ்சுறு , எனக்கே இந்த நிலை இதுல உன்னை வேற காப்பாத்தவா போயா போ ....!

  ReplyDelete