Tuesday, August 26, 2014

கோர்ட்டாவது மண்ணாவது, மோடிதான் கோர்ட், நீதிபதி



காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் வாஜ்பாய் நியமித்த கவர்னர்களை மாற்றியது தவறு என்று  உச்சநீதிமன்றம் போய் தீர்ப்பு வாங்கி வந்த கட்சி பாஜக. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின்பு அந்த தீர்ப்பை உதாசீனம் செய்து விட்டு காங்கிரஸ் போட்ட பல கவர்னர்களை மாற்றி வருகிறது. பதவி விலகுமாறு மிரட்டுகிறது. சங்கராச்சாரியர்களுக்கு எதிராக அப்பீல் செய்ய அனுமதி கொடுத்ததால் புதுவை துணைநிலை ஆளுனர் கட்டாரியாவை கட் செய்து விட்டார்கள்.

ஆளுனராக இருக்கிற என்னை பதவி விலகிச் சொல்லி உள்துறைச் செயலாளர் மிரட்டுகிறார், அரசியல் சாசனப் பதவியில் உள்ள என்னை ஒரு அதிகாரி மிரட்டுவதா என்று ஒரு ஆளுனர் உச்சநீதி மன்றத்தில் முறையிட நீதிமன்றமும் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நோட்டீசை வாங்கிய மறுநாளே மகாராஷ்டிர மாநில கவர்னரை மிசோரத்திற்கு மாற்றி ராஜினாமா செய்ய வைத்து விட்ட்து மோடி அரசு.

கோர்ட்டாவது மண்ணாவது, நாங்கள் என்ன நினைக்கிறோமோ அதைத்தான் செய்வோம், அது ஜன்நாயகமா இல்லை நெறிமுறையா என்பது பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை என்று மிகவும் அராஜகமாக செயல்படுகிறது மோடி அரசு.

ஐந்தாண்டுகளுக்குள் என்ன கூத்தெல்லாம் நடக்கப் போகிறதோ?

5 comments:

  1. கடினம்தான்...
    இருந்தும் நாம் தான் எத்துனை அடித்தாலும் தாங்குவோமே..

    ReplyDelete
    Replies
    1. அந்த நம்பிக்கையில்தான் இவர்கள் பிழைப்பு நடக்கிறது

      Delete
  2. APPADIYE MOODIKINU PO

    ReplyDelete
    Replies
    1. இதுதான்பா காவிக்கலாச்சாரம்

      Delete