Tuesday, October 23, 2012

புரட்சித் தலைவரை எத்தனை தடவைடா கொல்லுவீங்க?



அமெரிக்க அரசிற்கும் அதன் முதலாளித்துவ ஊடகங்களுக்கும்
ஒரு மனிதனை பிடிக்கவில்லை என்றால் அவனை கொன்று
விடும். சிலி, பனாமா நாட்டு ஜனாதிபதிகள் தொடங்கி
சதாம் ஹூசைன், முகமது கடாபி வரை வரலாறு முழுக்க
ஏராளமான உதாரணங்கள் உள்ளது.

அமெரிக்கா ஆசைப்பட்டு கொல்லப்பட முடியாத ஒரு
உருக்கு மனிதன் பிடல் கேஸ்ட்ரோ. உண்மையான அந்த
புரட்சித் தலைவனை ( உலகில் லெனின், மாவோ, ஹோசீமின்,
கேஸ்ட்ரோ, சேகுவாரோ  ஆகியோர்  போன்ற சிலர் மட்டுமே
 புரட்சித் தலைவர்கள், தளபதிகள் . கண்டிப்பாக தமிழகத்தில்
 உள்ள யாரும் அல்ல)  கொல்ல அமெரிக்கா பல முறை முயன்றும்
அது நடக்கவில்லை.

அதனால் வக்கிர குணத்தோடு அவர் இறந்து விட்டார் என
அவ்வப்போது வதந்தியை கிளப்பி தனது வெறுப்பை
தீர்த்துக் கொள்ளும். கான்சரில் பாதிக்கப்பட்ட ஹூயுகோ
சாவேஸ் மரணத்தின் பிடியில் தவிக்கிறார் என்று 
அமெரிக்க ஊடகங்கள் நாள் குறித்தன. ஆனால் அவரோ
மீண்டும் ஜனாதிபத்யாகிவிட்டார்.

இரண்டு நாட்கள் முன்பாக எழுப்பிய வதந்திகளுக்கு 
கேஸ்ட்ரோ மக்கள் முன் நேரில் தோன்றி பதிலடி
கொடுத்து விட்டார்.

ஆனால் எத்தனை முறை பட்டாலும் அமெரிக்காவோ
அதன் ஊடகங்களோ திருந்தாது.

1 comment:

  1. இவரைக் கொல்றதுக்கு அமரிக்கா காரன் நானூறு அட்டம்ப்ட்டு பண்ணினானாம்........ அப்பாவும் ஒன்னும் புடுங்க முடியவில்லை. வெறி புடிச்ச நாதாரிகள்..........

    ReplyDelete