Saturday, October 27, 2012

மக்களை முட்டாளாக்கிய விஜய் டிவி - சூப்பர் சிங்கர் ஜூனியர் லைவ் நிகழ்ச்சி


நேற்று விஜய் டி.வி யின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின்
இறுதிப் போட்டிகள். நேரடி ஒளி பரப்பு என்று சொல்லப் பட்டது.

நிஜமாகவே அது நேரடி ஒளிபரப்புதானா என்பது சந்தேகமே.

அதைப் பற்றி பின்னர் வருகிறேன்.

நேரடி ஆர்க்கெஸ்ட்ராவுடன்  இசை நிகழ்ச்சிகள் என்று
சொன்னார்கள். 

இளையராஜாவின் இசையில் உருவான அஞ்சலி படப்
பாடல்களை குழந்தைகள் பாடி ஆடுவது  போல 
காண்பித்தார்கள். குழந்தைகள் கழுத்தில் காலர்
மைக் பொருத்திக் கொண்டு வாயசைத்தார்கள்.

கீபோர்ட் அல்லது ட்ரம்ஸ் வாசிப்பவர்களை காண்பிக்கவே
இல்லை. 

சற்று கவனமாக கேட்ட பின்புதான் சூட்சுமம் புரிந்தது.
யாரும் பாடவில்லை, இசைக்கவில்லை. 
இளையராஜாவின் பாடல் அப்படியே ஒலித்துக் 
கொண்டிருந்தது.

இதை விட பெரிய மோசடி வேலை லைப் டெலிகாஸ்ட்
என்றதுதான்.

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இப்போது நேரு ஸ்டேடியத்தில்
என்ற புகைப்படம் பத்து மணிக்கெல்லாம் 
முக நூலில் பதிவிடப்படுகின்றது.

ஆனால் லைவ் டெலிகாஸ்ட்டிலோ ஏ.ஆர்.ரஹ்மான்,
இரவு பத்து மணி ஐம்பது நிமிஷத்திற்குத்தான்
உள்ளே நுழைகிறார்கள்.


எல்லா போட்டியாளர்களும் பாடி முடித்த பின்பு வெகு நேரம் 
முடிவுகள் அறிவிக்கவில்லை. முந்தைய வாக்குச்சீட்டு 
காலத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை போல இழுத்துக்
கொண்டே போனது. 

முகநூலில் மூன்றாம் பரிசு யார், இரண்டாவது யார்,
சூப்பர் சிங்கர் ஜூனியர் யார் என்று  அரங்கத்தில்
அமர்ந்திருந்த சிலர் பதிவிட்டு விட்டார்கள்.

ஆனால் இங்கே லைவ் டெலிகாஸ்ட்டிலோ, வாக்கு எண்ணும்
பணி நடந்து கொண்டிருக்கிறது, இன்னும் கொஞ்சம் 
பொறுமையாக இருங்கள் என்று சொல்லிக் கொண்டே 
இருந்தார்கள்.

என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

இது லைவ் டெலிகாஸ்ட் இல்லை, கொஞ்ச நேரம் முன்பாக
பதிவு செய்து போடப்பட்டது. 

இதை நேர்மையாக ஒப்புக் கொள்ளாமல் நேரடி ஒளிபரப்பு என்று
ஏமாற்றுவது ஏன்?

இவர்கள் சொல்வதை இனி எப்படி நம்புவது?

பின் குறிப்பு :  ஒரு கருத்து ஒரு கேள்வி

இரண்டாவது இடம் வந்த பிரகதி என்ற பெண்தான் என்னைப் 
பொறுத்தவரை முதலிடத்திற்கு தகுதியானவர்,

நள்ளிரவிற்கும் மேல்தான் நிகழ்ச்சி முடிந்தது. சொந்த
வாகனம் இல்லாவ்ர்கள் வீடு திரும்ப பேருந்துகள் 
கிடைத்திருக்குமா?

4 comments:

 1. இறுதிப் போட்டியை நானும் பார்த்தேன். கௌதமனும்,அந்த பாலக்காட்டுப்பெண்ணும் சரியான பாடல்களை இறுதிப் போட்டியில் தேர்ந்தெடுக்கவில்லை.சிறுமியின் வயதுக்கு மீறிய பாடும் திறமை சிறுவனின் பாடல் தேர்வு, inherent strength ஆகியவை அவர்களை உச்சத்திற்கு கொண்டு போயிற்று. பிரகதியின் consistency அவரை இரண்டாமிடத்திற்கு கொண்டு வந்தது. பொதுவாக இத்தகைய முடிவுகளில் கருத்து மாறுபாடு வரலாம்தானே! prerecorded நடன நிகழ்ச்சிகள் இருந்திருக்கலா என்பது சரியாக இருக்கலாம்.( அத்தகைய நிகழ்சுசியின் போது பார்வையாளர்களை காட்டவில்லை) இரவு ஒரு மணிக்கு மேல் இழுத்தது எரிச்சலைத்தான் கொடுத்தது.வழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

  ReplyDelete
 2. எல்லாரும் தான் ஏமாற்றுகிறார்கள். நீங்கள் சொன்னதை விசாரித்து உறுதி படுத்தி அடுத்த பதிவில் சொல்லுங்கள் நண்பரே.

  ReplyDelete
 3. we live in a society of people with mean minded...sad part is even arts which are sold for money is kalathin kolam...pragathi is real winner...ajith can be a bath room singer...i dont understand whether the title is bought with money power...

  ReplyDelete
 4. தங்கள் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை வேலை செய்யவில்லை போல!! இதை தீர்க்க இந்தச் சுட்டியைப் பார்க்கவும்..........

  http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html

  ReplyDelete