Saturday, April 21, 2012

இறுதியில் வென்றது சோனியாவின் இத்தாலி

இந்திய கடல் எல்லையில் கேரள முதலாளிக்கு சொந்தமான
படகில் தமிழ் மீனவர்களை திமிரெடுத்துக் கொன்ற இத்தாலி
கப்பலை விடுவிக்கச் சொல்லி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு
விட்டது. 

அரசு வழக்கறிஞரின் குளறுபடிதான் இதற்குக் காரணம்.

அன்று போபோர்ஸ் வழக்கில் ஆயுதத் தரகர் இத்தாலிய
தரகர் ஓட்டோவியோ  கொட்ரோச்சியை  தப்பிக்க வைத்தார்கள்.

இன்று கொலைகாரக் கப்பலை தப்பிக்க வைத்துள்ளார்கள்.

நாளை யாரோ?

இத்தாலிய அன்னை சோனியாவின் கருணை இருந்தால்
எதுவும் செய்யலாம் போல!

3 comments:

  1. திரு ராமன் ஐயா அவர்களே,

    நீங்கள்" Trade Union Worker" என்று அறிகிறேன். இந்தியா ஜனநாயக நாடு என்றும் அறிகிறேன்.

    "இத்தாலிய அன்னை சோனியாவின் கருணை இருந்தால் எதுவும் செய்யலாம் போல" என்று நீங்கள் சொல்வதின் அர்த்தம் என்ன? அப்ப நம்ம நாட்டில் எப்படி நீதி வழங்குவது எனபதை அரசியல் வாதிகள் தான் தீர்மானிக்கிரார்கள் என்று நீங்கள் சொல்வது போல் இருக்கிறது. மேலும் அந்த அம்மா எந்த பதவியிலும் இல்லை. அப்புறம் எப்படி?

    நீங்கள் சொல்வதைப் பார்த்தல் இந்தியாவில் கோர்ட் தேவை இல்லை என்று சொல்வது மாதிரி இருக்கிறது. நீங்கள் தொழிற் சங்கத்தில் வேறு இருக்கிறீர்கள்; ஜனநாயகத்தை கொண்டுவர ஏதும் உங்களா செய்ய முடியாதா? நான் இந்தியாவை விட்டு வந்து வெகு நாட்களா வதால் இந்த கேள்வி!

    ReplyDelete
  2. //அரசியல் வாதிகள் தான் தீர்மானிக்கிரார்கள் என்று நீங்கள் சொல்வது போல் இருக்கிறது. மேலும் அந்த அம்மா எந்த பதவியிலும் இல்லை. அப்புறம் எப்படி?

    நீங்கள் எந்த உலகில் இருக்கிறீர்கள்?

    ReplyDelete
  3. Anand said...XXXX

    நீங்கள் சொல்வது உண்மை என்றால் அப்ப இந்தியாவில் கோர்ட் எதுக்கு? பணமும் நேரமும் மிச்சமாகுமே!

    ஆனந்த் சார், இங்கு அப்படியில்லை! அப்படி எவனாவது சொன்னால், சொன்னவனுக்கு களி; அந்த ஜட்ஜ் ஐயா ஒரு புத்தகம் போட்டு 50 கோடி வாங்கிடுவார்!

    ReplyDelete