Wednesday, April 4, 2012

கிரிஷ் ஹானியை கொன்றவர்கள் நோக்கம்...???

வரலாற்றுச் சுவடு:கிரிஷ் ஹானியை கொன்றவர்கள் நோக்கம்...???
லோபமுத்ரா

கிரிஷ் ஹானி 1993 ஏப் ரல் 10 ஆம் நாள் தன் னுடைய வீட்டருகே காரிலிருந்து இறங் கும்போது சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் கொலைக்குப் பின்னே மிகப் பெரும் சதி இருப்பதை தென்னாப் பிர
ிக்கா மட்டுமல்ல உலகமே அறியும். அவர் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடே கொந்தளித்தது. மக்களை அமைதிப்படுத்திட வேண்டி அப்போது பதவியில் இல்லாவிட் டாலும் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தொலைக்காட்சியில் தோன்றி ஆற்றிய உரை மிக முக்கிய மானது.

“தென்னாப்பிரிக்கா முழுவதும்- மூலை முடுக்குகள் உட்பட வாழ்கிற அனைவரின் ஆழ்ந்த வேதனையில் நானும் பங்கேற்கிறேன். வெறுப் போடும் அநீதியோடும்தான் வெள் ளையர் இங்கே வந்தார்கள். எனினும் இன்று தன் உயிரைப் பணயம் வைத்து நமது பாசத்துக்குரிய ஹானியை காப்பாற்ற முயன்றவரும் ஒரு ஆப்பிரிக்க வெள்ளைப் பெண் ணல்லவோ. அதனால்தானே நாம் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தமுடிகிறது. இந்தக் கொடூரக் கொலை நாடெங்கிலும் உலகெங்கி லும் அதிர்ச்சி அலைகளை ஏற்ப டுத்தி உள்ளது. தென்னாப்பிரிக் காவைச் சார்ந்தவர்கள் யாராக இருப் பினும் - எந்தப் பிரிவைச் சார்ந்தவர் ஆயினும் உறுதியுடன் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரம் இது.

நமது மரியாதைக்குரிய கிரிஷ் ஹானி எந்த லட்சியத்துக்காக நின்றாரோ-அதை சீர்குலைக்க முயல்பவர் யாராயினும் நாம் அவர்களை ஒற்றுமையுடன் எதிர்கொண்டாக வேண்டும். கறுப் பர் - வெள்ளையர் ரத்தக் களரியை தூண்டிவிடவே இக்கொலை அரங் கேற்றப்பட்டது.ஆனால் அவர்கள் நோக்கம் முறியடிக்கப்பட்டது”.யார் இந்த ஹனி? தென்னாப் பிரிக்க கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவர். உமகந்தோ என அழைக்கப் பட்ட தென்னாப்பிரிக்க காங்கிரசின் ஆயதப்படைப்பிரிவின் தலைவர். நிற வெறிக்கு எதிராக சமரசமின்றிப் போராடியவர்.

அதே சமயம் கறுப்பர் களும் வெள்ளையர்களும் இணைந்து வாழவேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியவர்.இவரின் தந்தை தென்னாப்பிரிக்க சுரங்கத்தில் கூலித்தொழிலாளியாக வந்தவர். தாயும் ஒரு கூலித்தொழி லாளியே. 1942 ஜூன் 28 ஆம் நாள் பிறந்த மார்ட்டின் தெம்பிசையில் கிரிஷ் ஹானி, படிக்கின்ற காலத் தில் கத்தோலிக்க மதநம்பிக்கை மிக்க வராக-மதபோதகராகும் நோக்கோடு இருந்தார்.ஆனால் கறுப்பர்களுக்கு கல்வியை மறுக்கும் சட்டம் 1959ல் வந்தது.அதன் விளைவுகள் இவரின் உள்ளத்தில் பெருந்தாக்கத்தை ஏற் படுத்தின.ஆப்பிரிக்க தேசிய காங்கிர சில் உறுப்பினர் ஆனார்.இவரது மாமா கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்.அவர் மூலம் மார்க்சி யத்தை அறிந்து அதில் இணைய விரும் பினார்.அப்போது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. அதில் சேர்ந்து தலைமறைவு கம்யூ னிஸ்ட் கட்சியைக் கட்டுவதில் முன் னின்றார்.1961ல் அதிகாரபூர்வமாக கட்சி ஊழியரானார். கட்சி தடை செய்யப்பட்ட சூழலில் கம்யூனிஸ்ட் கள் தென்னாப்பிரிக்க காங்கிரசில் சேர்ந்து செயல்பட்டனர்.

அதன் ஒரு முக்கிய பிரிவான உமகந்தோ ஆயுதப் பிரிவில் பொறுப்பேற்று செயல்பட் டார். 1963 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் தடைச் சட்டத்தின்கீழ் தனிமை தீவில் சிறைவைக்கப்பட்டார்.1990ல் கட்சி மீதான தடை நீக்கப் பட்ட பிறகு நாடு திரும்பினார்.1991ல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். தென்னாப்பிரிக்க காங்கிரஸ் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்பியதில் இவரின் பங்கு மகத்தானது.

வெறுப் பையும்பகைமையையும்அனைவரும் கைவிட்டு சுதந்திரமாகவும் சம உரிமையோடும் வாழ பெருமுயற்சி செய்தார்.இந்த முயற்சியை சீர் குலைக்கவே இவரை திட்டமிட்டுக் கொலைசெய்தனர்.கொலைகாரர்களை கையும் களவுமாகப் பிடிக்க அவரின் அண்டை வீட்டில் வாழ்ந்த வெள் ளைப் பெண்மணியே உதவினார். கொலைகாரர்கள் கன்சர்வேட்டிவ் கட்சியோடுதொடபுடையவர்கள்என் பது உறுதியானதால்; கலவர நோக் கம் அம்பலமாகி அந்த சதி முறிய டிக்கப்பட்டது. கொலைகாரர் களுக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டாலும்.பின்னர் மரணதண் டனையே அந்நாட்டில் ரத்து செய் யப்பட்டதால் ஆயுள் தண்டனை யாக மாற்றப்பட்டது.தென்னாப்பிரிக்க கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றிலும்-நிறவெறிக்கு எதிரான போராட்ட வரலாற்றிலும் என்றும் ஜொலிக்கும் சிகப்பு நட்சத் திரமாய் ஹானி திகழ்கிறார்.

----------------------------------------------

இந்தக் கொடூரக் கொலை நாடெங்கிலும் உலகெங்கிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவைச் சார்ந்தவர்கள் யாராக இருப்பினும் - எந்தப் பிரிவைச் சார்ந்தவர் ஆயினும் உறுதியுடன் ஒன்றுபட்டு நிற்க வேண்டிய நேரம் இது. நமது மரியாதைக்குரிய கிரிஷ் ஹானி எந்த லட்சியத்துக்காக நின்றாரோ-அதை சீர்குலைக்க முயல்பவர் யாராயினும் நாம் அவர்களை ஒற்றுமையுடன் எதிர்கொண்டாக வேண்டும். கறுப்பர் - வெள்ளையர் ரத்தக் களரியை தூண்டிவிடவே இக்கொலை அரங்கேற்றப்பட்டது.ஆனால் அவர்கள் நோக்கம் முறியடிக்கப்பட்டது.

-நெல்சன் மண்டேலா


நன்றி - தீக்கதிர்
 

1 comment:

  1. வணக்கம் நண்பரே

    அருமையான பகிர்வு.கிரிஷ் ஹானிக்கு நம் மரியாதை கலந்த அஞ்சலி!

    மிக்க நன்றி!!!!!!

    ReplyDelete