Saturday, April 28, 2012

மதுரை ஆதீனமாக நித்தி - தவறே கிடையாது. பொருத்தமான நபர்தான்மதுரை ஆதீனத்தின் புதிய ஆதினகர்த்தராக ரஞ்சிதா புகழ்
நித்தி சுவாமிகள் பதவி  ஏற்றது  அதிர்ச்சி அலைகளை
உருவாக்கியுள்ளது. 

இதிலே அதிர்ச்சி அடைய எதுவும் இல்லை.

மதுரை ஆதீனம் ஞானசம்பந்தரால் துவக்கப்பட்டது என்று
சொல்கிறார்கள். யார் ஞான சம்பந்தர்?

பார்வதியிடம் ஞானப்பால் குடித்து இளம் வயதில் 
இறைவனோடு ஐக்கியமானவர், கூன் பாண்டியனை
சைவ சமயத்தில் மீண்டும் கொண்டு வந்தவர் என்ற
பெருமையெல்லாம் இருக்கட்டும்.

அனல் வாதம், புனல் வாதம் என்று வாது என்ற சூது
செய்து எட்டாயிரம் சமணர்களை கழுமரம் ஏற்றி
கொடூரமாக கொலை செய்த ரத்த சரித்திரம் கொண்டவர்
ஞான சம்பந்தர்.             

இவர் துவக்கிய ஆதினத்தில் நித்தி இருப்பது ஒன்றும்
தவறில்லை. இப்போதைய ஆதினமும் ஒரு காமெடி
பீஸ்தான். 

ஆகவே சரியான இடத்திற்குத்தான் நித்தி வந்துள்ளார்.

நித்திக்கு மட்டும் மூன்று கேள்விகள்.

உங்கள் மடம் தலைமை பீடமா இல்லை மதுரை 
ஆதீனமா? எது தலைமை அலுவலகம் ? எது கிளை?

மதுரை ஆதீனத்தில் வீடியோ காமெராக்கள் இல்லை
என்பதை உறுதி செய்து விடடீர்களா?

மதுரை ஆதீனத்தில் ரஞ்சிதாவிற்கு என்ன பொறுப்பு?

9 comments:

 1. nt gold crown.beat this dogs with torned chappel

  uma trivandrum

  ReplyDelete
 2. மதுரை ஆதீனம் ஞானசம்பந்தரால் துவக்கப்பட்டது என்று "சொல்லப்படுகிறது." இது வடிகட்டின பொய். இடைச்செருகல் செய்வது இப்படித்தான். ஒரே பொய்யை திரும்ப சொன்னால் கடைசியில் அது உண்மை ஆகி விடும்.

  மதுரை ஆதீனம் ஞானசம்பந்தரால் துவக்கப்பட்டது அல்ல. அவர் ஒரு பிராமணர். அப்படி அவர் துவங்கி இருந்தால், அந்த இடத்திற்கு ஒரு பிராமணர் தான் வர முடியும்....

  எக்காலத்திலேயும் அருணகிரிநாதர் அல்லது நித்யானந்தா மாதிரி சூத்திர சாமியார்கள் வர முடியாது. வரவே முடியாது. இந்த உண்மை எல்லா சரித்திர ஆராய்ச்சியாளர்ரகளுக்கும் தெரியும்.

  ஆகவே மதுரை ஆதீனம் ஞானசம்பந்தரால் துவக்கப்பட்டது என்று கூறுவது பொய் தான்.

  ReplyDelete
 3. அய்யா அவர்களே! எனக்கு ஞானசம்பந்தர் பற்றி தெரியாது.
  ஆனால், அந்த மதுரை ஆதீனம் என்பவர் அடிக்கடி அரசியல் வெட்டி பேச்சுகளில் அடிபடுவது கேள்விபட்டுள்ளேன் - a nonsense fellow, that's all.
  நித்யானந்தாவை பொறுத்த வரையில் நாம் அவரை ஒரு பொருட்டாகவே நினைக்க தேவையில்லை.
  நித்யாவை நாடும் பக்தர்கள்(?) யாரும் அறியாமைனால் அவரிடம் செல்வதில்லை - மாறாக Vitamin M & LDL அதிகமாக இருக்கிறவங்க அவைகளை கரைத்துக்கொள்ள தான் இது போன்ற (ஆ)சாமிகளிடம் போகிறார்கள்.
  இவர் எமற்றுவதுமில்லை; அவர்கள் எமாருவதுமில்லை!
  நாம் தான் லூசுங்க - இதெல்லாம் ஒரு நியூஸ்-ன்னு படிச்சி, ப்ளாக் எழுதி, அதுக்கொரு தண்ட கமெண்ட் போட்டுண்டு!
  இதைவிட நிஜமாக கதி இல்லாமல் பசியிலும், வறுமையில் வாடும் ஏழை பெண் பிள்ளைகளை, இரண்டு வேளை சோறு போட்டு exploit செய்யும், வெளிநாட்டவரிடம் டாலர் டாலர்களாக வாங்கி - இங்க பிள்ளைகளை பிச்சக்கரதனமாக நடத்தி -சமுதாயத்தையும, அரசையும் ஏமாற்றும் பாதரியார்களையும் கொஞ்சம் கண்டுகொள்ளுன்களேன், புண்ணியமா போகும்!
  ஞான சம்பந்தர் பாவம்; இன்னிக்கி தேதியில் நம்ம சுற்றி யுள்ளவையே நமக்கு நிறைய தெரிவதில்லை.
  இந்திய வரலாற்றில் நிறைய பகுதிகள் ஆங்கிலேயர்களால் திருத்தப்பட்டு எழுதப்பட்டதுதான். இதை நம்பி, போய் சேர்ந்தவர்களை ஆராய்வதைவிட நாம் நிறையவே நல்ல வேலைகளை செய்ய முடியும்.
  கம்யூனிஸ்ட்-ன்னா எந்த மதத்திலும் உள்ள தவறுகளை அவற்றிற்கான நிவர்த்திகளை சொல்லணும்; நித்தியா மாதிரி ஆளுங்கள் செம் வேஸ்ட் சப்ப சுப்ஜெக்ட்.
  தோன்றியதை எழுதினேன் - பிழைகளை (கறுத்தில்-அல்ல) பொறுத்துக்கொள்ளவும்.

  ReplyDelete
 4. அய்யா அவர்களே! எனக்கு ஞானசம்பந்தர் பற்றி தெரியாது.

 5. சாந்த லட்சுமி அம்மா சொல்வதில் நாயம் இல்லாமல் இல்லை. சாமியார்கள் எல்லாம் நம்ப முடியாது. மாடிக்காத வரிக்கும் னால் சாமியார். மாட்டிக்கிட்டா...

  ஆமாம், சாந்த லட்சுமி அம்மா, இப்ப இருக்கிற இந்த இரண்டு சங்கராசாரிகளைப் பற்றி உங்க அபிப்ராயம் என்ன?

  ReplyDelete
 6. ஐயா நம்பள்கி, நான் போட்ட பதிவுக்கும் உங்க கமெண்டுக்கும் சம்பந்தமே இல்லையே! நீங்க சம்பந்தர்லயே நின்னுட்டீங்க. ஆனா சாமியார்களை நம்ப முடியாதுன்னு கரெக்டாவே சொல்லிட்டீங்க

  ReplyDelete
 7. தோழர் சாந்தா, ஊடகங்கள் சில அபத்தமானவற்றை பரபரப்பாக்கும் போது உண்மைகளை வெளியே சொல்லிட வேண்டியுள்ளது. மற்ற மதத்தவர்கள் செய்யும் தவறுகளை கம்யூனிஸ்டுகள் கண்டிக்காமலோ, அம்பலப்படுத்தாமலோ இருந்ததில்லை. ஒரு சமீபத்திய உதாரணம், காஞ்சி மாவட்டம் தச்சூர் என்ற கிராமத்தில் தலித் கிறிஸ்துவரின் சடலத்தை சர்ச் கல்லறையில் புதைக்க அனுமதிக்க மறுத்த போது போராடியது மார்க்சிஸ்ட் கட்சி. நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் பெல்லார்மினுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று சர்ச்சுகளில் பிரச்சாரம் செய்தார்கள் என்றால், அக்கட்சி அனைவரிடமும் கறாராக இருக்கிறது என்றுதானே பொருள். கேரளாவிலும் சட்டமன்றத் தேர்தலில் இது நடந்தது.

  சரி, இந்த நம்பள்கி ஐயா, உங்களை ஜெ போல
  அம்மா என்று அழைத்து மிகவும் வயதானவராக மாற்றி விட்டாரே!

  ReplyDelete
 8. நம்பள்கி அவர்களே, இப்போ இருக்கிற எந்த ஆச்சர்யரும் ஆதி காலத்து ஆச்சர்யர்களல்ல
  மிஞ்சிபோனால் 1 % உண்மையானவர்கள் இருக்கலாம்.இது என் தனிப்பட்ட கருத்துதான். உண்மை இதைவிட குறைவாகவும் இருக்கலாம்.கடவுள் என்பது மனிதனுக்கு தைரியமும், நம்பிக்கையும் கொடுப்பதற்கு; மதம் என்பது தனி மனிதனுக்கும், சமுதாயத்துக்கும் ஒழுக்கத்தை சொல்லிதருவதற்கும் தான் -ன்னு நான் நம்பறேன் - சக மனிதனை நேசிப்பது தான் எல்லா மதம்களின் சாராம்சம். எல்லா மதங்களும் இதையேதான் சொல்கின்றன. எற்றதாழுகள், வேறுபாடுகள் எல்லா மதம்களிலும் உள்ளவை. பொருளாதார முனேற்றம் தான் சமத்துவத்திற்கு வழி காட்டும்.

  Raman Sir, addressing a women 'Amma' is really a good practice, this not necessarily lead to JJ. Thanks to நம்பள்கி ஐயா!
  And I really appreciate the efforts by CPI(M) as narrated by you. Thanks, these things need to be spread among people. Many a time, our news papers do not report such things. They make every church activity dalit-friendly, where as in reality, the sub sect dalit christians - itself exposes the discrimination. Thanks for sharing.

  ReplyDelete
 9. நம்பள்கி அவர்களே, இப்போ இருக்கிற எந்த ஆச்சர்யரும் ஆதி காலத்து ஆச்சர்யர்களல்ல