தஞ்சையில் உள்ள சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் தன் வளாகத்திற்கு அருகாமையில் உள்ள 31 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து எண்ணற்ற கட்டுமானங்களை செய்து விட்டது.
திறந்த வெளி சிறைச்சாலைக்காக அரசு முடிவெடுத்திருந்த இடம் அது. அங்கே அத்து மீறி நுழைந்து ஆக்கிரமித்தது சாஸ்த்ரா.
அந்த இடத்தை மீட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் போராட்டங்கள் நடத்துகின்றன.
அரசு நீதிமன்றம் செல்கிறது. இருபதாண்டுகள் நடந்த சட்டப் போராட்டத்தின் விளைவாக அந்த இடத்தை மாநில அரசு கையகப் படுத்திக் கொள்ளச் சொல்லி சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளிக்கிறது.
நாங்கள் ஆக்கிரமித்த இடத்திற்கு பதிலாக அதே நெடுஞ்சாலையில் வேறு இடத்தை தருகிறோம்.
அந்த இடத்திற்கான விலையை கொடுத்து விடுகிறோம்.
வேறு ஏதாவது இடத்தைக் கூட தர தயாராக இருக்கிறோம்
என்று மூன்று ஆப்ஷன் இருப்பதாக சாஸ்த்ரா சொல்ல சட்ட விரோத செயலை செய்த உனக்கு ஆப்ஷன் கொடுக்க எல்லாம் உரிமை கிடையாது. முதலில் அங்கிருந்து வெளியேறு என்று சொன்னது உயர் நீதிமன்றம்.
ஆஹா, அதிசயம் நடந்துள்ளதே என்று ஆச்சர்யப்பட வேண்டாம்.
வழக்கு உச்ச நீதிமன்றம் சொன்னது.
"அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்கிறார்கள். அரசால் அவர்கள் போல செயல்பட முடியுமா? அவர்கள்தான் மூன்று ஆப்ஷன் அளிக்கிறார்களே, அதை ஆய்வு செய்வதில் அரசுக்கு என்ன கேடு? இந்த மூன்றில் எதை ஏற்கிறார்கள் என்று சொல்லுங்கள். அவர்கள் தொழிற்சாலை நடத்தி லாபம் சம்பாதிக்கவில்லை. பல்கலைக்கழகம் நடத்தி கல்வியை பரப்புகிறார்கள். அவர்களை ஊக்குவிக்க வேண்டும்?
இதெல்லாம் நம் தற்போதைய தலைமை நீதிபதி உதிர்த்த முத்து.
அவர்கள் செய்தது சட்ட விரோத ஆக்கிரமிப்பு என்பதை நீங்கள் உணரவே இல்லையா? தொழிற்சாலை மூலம் வரும் லாபத்தை விட பல மடங்கு லாபல் கல்வி வணிகம் மூலம்தான் வருகிறது என்பது கூட தெரியாத அப்பாவியா நீங்கள்? அவர்கள் கல்வி வள்ளல்கள் அல்ல, கல்விக் கொள்ளையர்கள். அவர்களுக்கு ஆதரவான கருத்துக்களை நீங்கள் சொல்வது துரதிர்ஷ்டவசமானது யுவர் ஆனர்.
பிகு: மேலே உள்ள படங்களை தஞ்சை வழக்கறிஞரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவருமான தோழர் வெ.ஜீவக்குமார் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து எடுத்து பகிர்ந்து கொண்டுள்ளேன்.








அந்த இடத்தை அரசு சிறைத்துறையிடம் தந்ததாக க் கேள்விப் பட்டேன்!
ReplyDeleteஅவைநாயகன்
ஆமாம். அதை மீண்டும் கொடுக்க மனமில்லாமல் சாஸ்த்ரா உச்ச நீதிமன்றத்திடம் சென்று விட்டது
ReplyDelete