Saturday, October 2, 2021

உமக்கு சாத்தியமா அண்ணாமலை?


 

மாண்புமிகு பாரதப் பிரதமர் மகாத்மா காந்தி அறிவுறுத்தல் படி இன்று காதி கிராப்ட் கடைகளுக்குப் போய் கதர் சட்டை வாங்கி மகாத்மா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடப் போவதாக 

சொன்ன

மிஸ்டர் ஆட்டுக்கார அண்ணாமலை,

இன்று எங்கள் சங்கம் சார்பில் பல மையங்களில் மகாத்மா காந்தி அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தோம். 

வேலூர், கடலூர், சிதம்பரம், புதுச்சேரி, விழுப்புரம் மையங்கள் மற்றும் திண்டிவனம் கிளை அலுவலக புகைப்படங்களை பாருங்கள். 

பிறகு அந்த கேள்வியைக் கேட்கிறேன்.














மாலை அணிவித்தது மட்டுமல்ல, அதைத் தாண்டி ஒரு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டோம்.

அந்த உறுதிமொழி இங்கே

இந்தியாவின் சிறப்பாக இருக்கிற
அதன் பன்முகத் தன்மையை,

 

இந்திய அரசியல் சாசனத்தின்
அடிப்படை கோட்பாடான
மதச் சார்பின்மையை,

 

வேற்றுமையில் ஒற்றுமை
என்பதன் அடையாளமான
மத நல்லிணக்கத்தை,

 மக்கள் ஒற்றுமையை

 பாதுகாக்க எந்நாளும் பாடுபடுவோம் என்று

 அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின்
உறுப்பினர்களான நாங்கள் உறுதியேற்கிறோம்.

இப்படி ஒரு உறுதிமொழியை உளப்பூர்வமாக உங்களால் எடுக்க முடியுமா? உறுதிமொழி எடுக்கச் சொல்லி உங்கள் கட்சி உறுப்பினர்களிடம் சொல்ல முடியுமா?

நாக்பூர் ஆட்கள் உங்கள் பின்னங்கழுத்தில் அடித்து வெளியே தள்ளி விடுவார்கள் என்று எனக்கு தெரியும் உண்மை உங்களுக்கு மட்டும் தெரியாதா என்ன!

 

No comments:

Post a Comment