Tuesday, September 15, 2020

மூடத்தனத்திற்கு மோடியே உதாரணம்.

தான் அமர்ந்துள்ள் மரக் கிளையையே வெட்டும் மூடனைப் பற்றி படித்துள்ளோம். 

அப்படிப்பட்ட மூடத்தனத்திற்கு மோடியைத் தவிர வேறு உதாரணம் எதுவும் அவசியமில்லை.

கீழே உள்ள செய்தியை படியுங்கள். புரியும். இந்த மனிதரை உயர்த்திப் பிடிப்பவர்கள் எவ்வளவு பெரிய மூடர்கள் என்று யோசித்துப் பாருங்கள். கொலுகை என்றால் தலை சுற்றிப் போன ஒரு மனிதரை விட அதிகமாகவே சுற்றும்




 "இதோ அரசின் வாக்குமூலம்!"

"எல்.ஐ.சி ஓர் நிதிமூலம்!"

சு. வெங்கடேசன் எம்.பி (சி.பி.எம்) கேள்விக்கு அமைச்சர் பதில்


LIC has contributed Rs 33000 cr in the last 4 years for Bharat Mala & Highway projects. Fin Minister of state Shri Anuragh Thakur reply to Q in parliament raised by S Venkatesan MP (CPI-M).


Proof for LICs contribution to Nation building. Withdraw moves for disinvestment in LIC. - S Venkatesan MP


புது டெல்லி செப் 14: இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் கடந்த 4 ஆண்டுகளில் ரூ 33000 கோடிகளை நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக தந்துள்ளது என நாடாளுமன்றத்தில் நிதி இணையமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார்.


"பாரத்மாலா"

மத்திய அரசு அறிவித்த பாரத் மாலா பரியோஜனா திட்டத்திற்கான நிதியாதாரத் திரட்டலில் எல். ஐ.சி மிகப் பெரும் பங்கினைத் தருகிற நிறுவனமாக இருக்கிறது. இது குறித்த கேள்வி ஒன்றை சு. வெங்கடேசன் எம். பி (சி.பி.எம்) நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வில் எழுப்பியிருந்தார்.


அதற்கு பதில் அளித்த நிதி இணையமைச்சர் அனுராக் தாகூர் " தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தகவலின்படி 2016-17, 2017-18, 2018-19 ஆண்டுகளில் ரூ 25000 கோடிகளை 30 ஆண்டுகளுக்கும், 2019-20 ல் ரூ 7904 கோடிகளையும் எல்.ஐ.சி நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார். இம் முதலீடுகள் பாரத் மாலா மற்றும் பல நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கானவை என்றும் அப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எல்.ஐ.சியின் பலம்

இது குறித்து சு.வெங்கடேசன் தெரிவிக்கையில்,


இந்தியாவின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு எல்.ஐ.சி அளித்து வரும் அளப்பரிய பங்களிப்பிற்கு இது சாட்சியம்.


மேலும், 30 ஆண்டுகளுக்கான நீண்ட கால முதலீடுகளுக்கு உள் நாட்டு சேமிப்புகளைத் திரட்டித் தருகிற சீரிய பணியை ஆற்றி வரும் எல்.ஐ.சி அரசின் இயல்பான ஏகபோகமாக, முழுமையான அரசு நிறுவனமாகத் திகழ வேண்டிய முக்கியத்துவத்தையும் இது உணர்த்துகிறது.


ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு அன்னிய முதலீடுகள், தனியார் முதலீடுகளே வழி வகுக்குமென்ற அரசின் நவீன தாராளமயப் பாதைக்கு எதிர் மாறான அனுபவத்தை எல்.ஐ.சி தந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.


பங்கு விற்பனையை கைவிடு


இந்திய நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் அரசின் பொது முதலீடுகள் அதிகரிக்க வேண்டிய அவசியமும் அதன் மூலம் வேலை உருவாக்கம் நிகழ வேண்டிய தேவையும் உள்ள நேரத்தில் அதற்கான பெரும் பங்களிப்பை வழங்கி வரும் எல்.ஐ.சி முழுக்க முழுக்க அரசின் கைகளிலேயே நீடிக்க வேண்டும்; பங்கு விற்பனை முயற்சிகளை கைவிட வேண்டும்.


இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment