Wednesday, June 6, 2018

அவன் எப்படி இந்தியாவை நம்புவான்?


காஷ்மீர் இந்தியாவோடு இணைந்த போது அளிக்கப்பட்ட உறுதி மொழிகளை நிறைவேற்றுவதில் உண்மையாக இல்லை என்பதும் கொடுக்கப்பட்ட சிறப்பு உரிமைகளையும் காலப்போக்கில் நீர்த்துப் போகச் செய்து விட்டது என்பதும்தான் காஷ்மீர் பிரச்சினையின் அடிப்படை.  தீவிரவாதம், ராணுவத்தின் அத்துமீறல் என்பதெல்லாம் அதன் தொடர்ச்சியே.

காஷ்மீர் இந்தியாவோடு இணைந்த போது அளித்த உறுதி மொழிகளில் இன்று வரை உயிரோடு இருப்பது "காஷ்மீரைச் சேராத மக்கள் அங்கே நிலம் வாங்க முடியாது" என்பதுதான்.

அதானி, அம்பானி உள்ளிட்ட முதலாளிகளுக்கு உறுத்தலாக இருப்பது இந்த விதிதான். ரியல் எஸ்டேட் முதலைகள் ஊடுறுவ முடியாத பகுதியாகவும் காஷ்மீர் இருக்கிறது. காவிகளுக்கும் எரிச்சலூட்டும் விதி இது.

இப்போது அந்த விதியை நீக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கு போடப்பட்டுள்ளது. இதிலே என்ன பொது நலம் உள்ளது என்று தெரியவில்லை. சாமானியன் யாரும் அங்கே நிலம் வாங்கப் போவதில்லை. கார்ப்பரேட் நல வழக்கு என்பதுதான் சரியாக இருக்கும்.

இந்த வழக்கு தொடர்பாக மத்தியரசு எதிர் பிரமாண வாக்குமூலம் எதையும் தாக்கல் செய்யப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளது. 

அதன் அர்த்தம் புரிகிறதா?

வெளி மாநிலத்தவர் காஷ்மீர் மாநிலத்தில் நிலம் வாங்குவதில் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது என்பதே.

அரசியல் சாசனத்தில் கொடுக்கப்பட்ட உறுதிமொழியை நாங்கள் மதிக்கவில்லை என்பதே.

கார்ப்பரேட் முதலாளிகள் காஷ்மீரில் நிலம் வாங்கி அந்த இயற்கை எழிலை நாசம் செய்யலாம் என்பதே.

காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை என்பதே யதார்த்தம். நம்பிக்கையை உருவாக்குவதற்குப் பதிலாக நிலைமையை இன்னும் சிக்கலாக்குகிறது மோடி அரசு.

காஷ்மீரில் அமைதி திரும்புவது மோடி ஆட்சி இருக்கும் வரையில் வெறும் கானல் நீரே !

பிகு

காஷ்மீர் தால் ஏரியில் சுற்றுலாப்பயணிகள் வீசி எறிந்த பிளாஸ்டிக் குப்பைகள்தான் மேலே உள்ள படத்தில் இருப்பது. 

3 comments:

  1. வழக்கு வெல்ல போவதில்லை
    ஆனால் எனக்கு சில முரண்பாடுகள் உண்டு
    காஷ்மீர் பெண் வெளியாரை திருமணம் செய்தால் காஷ்மீர் குடியுரிமையை இழப்பாள்
    ஆனால் காஷ்மீரி ஆண் வெளியாரை திருமணம் செய்தால் குடியுரிமை இழக்க மாட் டான்
    எதுக்கு இந்த ஓரவஞ்சனை
    ஆணுக்கும் அந்த சட்டம் பிரயோகிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. ஆம். சட்டம் இரு பாலருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்

      Delete
    2. Same law exists in Nepal too, it's a cultural based laws, hope things change soon

      Delete