Tuesday, June 26, 2018

வி.பி.சிங் களைந்த முரண்பாடு

இது ஒரு மீள் பதிவு

திரு வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மீண்டும் பகிர்ந்து கொண்டுள்ளேன். 

கீழே இரண்டாவது உள்ள படத்தில் உள்ள திரு வி.பி,சிங், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய தலைவராக இருந்த தோழர் ஆர்.பி,மான்சந்தா, பொதுச்செயலாளர் தோழர் என்.எம்.சுந்தரம், இணைச்செயலாளர் தோழர் ஆர்.கோவிந்தராஜன் ஆகிய நால்வருமே இப்போது இல்லை என்பது துயரமளிக்கிறது. இந்தியப் பிரதமர்களிலேயே சிறிது காலமே பதவியில் இருந்தாலும் அழுத்தமான தடத்தை பதித்தவர் நிச்சயமாக திரு வி.பி.சிங் மட்டுமே.

ஊழலுக்கு எதிராக உண்மையான நடவடிக்கைகள் எடுத்தவர் அவர் மட்டுமே. சமூக நீதியையும் மதச் சார்பின்மையையும் நேர்மையாக கடைபிடித்தவர். அந்த இரு காரணங்களுக்காகவே பதவி இழந்தவர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவு படுத்தாதே என்று தேர்தல் நேரத்தில் மாய்மாலம் செய்த மோடியின் கட்சியினர்தான், மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கியதால் போராட்டம் நடத்தி வட இந்தியா முழுதும் கலவரம் செய்தார்கள். அத்வானியின் ரத்த யாத்திரையை உறுதியாக தடுத்தவரும் அவர்தான்.

இரண்டு முறை அவரது பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஒரு முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு நெய்வேலி வந்துள்ளார். 

2003 ல் சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டை அவர்தான் துவக்கி வைத்தார். மக்கள் மீதான அக்கறையும் இந்தியா அன்னிய நாடுகளின் அடிமையாகி விடக்கூடாது என்ற உணர்வும் அந்த இரு உரைகளின்போதும் காண முடிந்தது.

பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்கிறவராகவும் உடனடியாக முடிவு எடுக்கிறவராகவும் அவர் இருந்தார் என்பது எல்.ஐ.சி ஊழியர்களின் சொந்த அனுபவம்.

எங்களுடைய ஊதியத்தில் மிகப் பெரிய முரண்பாடு இருந்தது. விலைவாசிப் புள்ளிகளின் அடிப்படையில் பஞ்சப் படி வழங்கப்படும். அதில் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு 100 % பஞ்சப்படியும் மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கு 75 % பஞ்சப்படியும் வழங்கப்பட்டது. 

இதனால் ஒரு நான்காம் பிரிவு ஊழியர் மூன்றாம் பிரிவு பணியான பதிவு எழுத்தராக பதவி உயர்வு பெறும்போது அவரது பஞ்சப்படி விகிதம் 75 % ஆக குறைந்து ஊதியமும் குறைந்து விடும். பதவி உயர்வு பெற்றால் ஊதியம் குறைந்து போகும் விசித்திரம் இங்கேதான் நிகழ்ந்தது.

இந்த முரண்பாட்டை களைய எல்.ஐ.சி நிர்வாகம் தயாராக இல்லை. வி.பி.சிங்கிற்கு முந்தைய எந்த ஒரு நிதியமைச்சரும் கூட தயாராக இல்லை. எங்கள் சங்கத் தலைவர்கள் வி.பி.சிங்கை சென்று சந்தித்து இப்பிரச்சினையை விவரித்தவுடன் அதற்கான தீர்வு என்னவென்று கேட்டார்.மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கும் 100 % பஞ்சப்படி வழங்க வேண்டும் என்று கோரினார்கள்.

பதிவு எழுத்தர் பதவியின் அதிகப்பட்ச அடிப்படை ஊதியமான 790 ரூபாய் (இது 1987 நிலவரம்) வரை 100 %  பஞ்சப்படி வழங்குவதற்கான அரசாணையை முதலில் பிறப்பித்தார். பதிவு எழுத்தர் தொடங்கி உயர்நிலை உதவியாளர் வரை அனைத்து மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கும் 790 ரூபாய் வரை 100 % பஞ்சப்படி கிடைத்தது.

காலப்போக்கில் அனைவருக்குமே 100 % பஞ்சப்படி என்பது கிடைத்தது. இந்த பஞ்சப்படி உயர்வின் மூலமாக ஒரு ஆறு மாத அரியர்ஸாக 500 ரூபாய் கிடைத்தது. அந்தப் பணம் கொண்டுதான் என்னுடைய முதல் கைக்கடிகாரத்தை வாங்கினேன். அந்த ஆல்வின் கைக்கடிகாரம் ஒரு எட்டு வருடங்கள் வரை நன்றாகவே உழைத்தது. 

10 comments:

 1. விபி சிங்கை காங்கிரஸ் கும்பல் இழிவுபடுத்தியது உன்னோட குருட்டு கண்ணுக்கு தெரியலையா ?

  ReplyDelete
  Replies
  1. மாற்றுத் திறனாளிகள், மாற்றுப் பாலினத்தவர்கள் என்றெல்லாம் சொல்லாடல்களை நாகரீகமாக மாற்றி அமைக்கும் காலத்தில்
   நீ பயன்படுத்தியுள்ள வார்த்தை கேவலமாக உள்ளது உன் கேவலமான புத்தியின் வெளிப்பாடு. இதிலே சூப்பர் என்று நீயே வேறு அழைத்துக் கொள்கிறாய்.

   Delete
 2. விபி சிங்கை காங்கிரஸ் கும்பல் இழிவு படுத்தியது உன்னோட குருட்டு கண்ணுக்கு தெரியலையா ?

  சூப்பர் அனானி

  ReplyDelete
  Replies
  1. குருடு என்று சொல்வது உன் மன ஊனத்தைக் குறிக்கிறது சூப்பர் அனானி. உன் எரிச்சலை இப்படித்தான் வெளிப்படுத்த முடியும்

   Delete
  2. சரிங்க சகுனி
   (இது நான் சொல்லவில்லை .. உன்னோட சகாக்கள் உனக்கு வைச்ச பெயர் )

   Delete
  3. நீயும் அந்த கயவர் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதும் எனக்கு தெரிகிறது.

   Delete
 3. பஞ்சபடியை வைச்சுத்தான் நீ முதன் முதலாக ஜட்டியே வாங்கினாய்( அதுவரை கோமணம் தான் கட்டிக்கிட்டு இருந்தாய் )
  அதையேன் சொல்ல மறுக்கிறாய் ?

  ReplyDelete
  Replies
  1. நான் வாட்ச் வாங்கியதில் உனக்கென்ன வயிற்றெரிச்சல்?

   Delete
  2. திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக சிலர் எரிச்சலில் தவிப்பது தெரிகிறது. அந்த தடுமாற்றம் எனக்கு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் அளிக்கிறது.

   Delete
 4. I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
  Nice One...
  Tamil News | Latest Tamil News | Tamil Newspaper

  ReplyDelete