Sunday, June 10, 2018

தின மலர் பார்க்க வைத்த "காலா"
ரஜனியின் தூத்துக்குடி விஜயத்திற்குப் பிறகு "காலா" படத்திற்கு செல்ல வேண்டாம் என்று எடுத்திருந்த முடிவை மாற்றியது தினமலர் வெளியிட்ட தலைப்புச் செய்திதான்.

வேலூரில் புதிதாக திறந்துள்ள பி.வி.ஆர் சினிமாஸ் அரங்கில்தான் "காலா" பார்க்கச் சென்றோம். விமான நிலைய செக்யூரிட்டி செக் எல்லாம் செய்தார்கள். ஸ்னாக்ஸ் எடுத்துச் செல்லக்கூடாதாம். அங்கே கொள்ளை விலை வைத்துள்ள பொருட்களை வாங்க வைப்பதற்கான ஏற்பாடு.

"நிலம் எப்படி ஆதிக்கக்காரர்களிடம் சிக்கிக் கொள்கிறது" என்ற அரசியல் வகுப்பு முதல் ஒரு நிமிடத்தில் வேகம் வேகமாக சொல்லி முடித்து விடுகிறார்கள், யாரும் நிதானமாக கவனித்து மனதில் வாங்கிக் கொள்வதற்கு முன்பே.

நிலத்தினை அரசோ, முதலாளிகளோ கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம் என்ற போராட்டம்தான் படத்தின் துவக்கத்திலிருந்து கடைசி வரை. அமைதியான போராட்டத்தை சீர்குலைக்க அரசும் முதலாளிகளும் எப்படி சமூக விரோதிகளை அனுப்புகிறார்கள் என்ற சதியும் காண்பிக்கப்படுகிறது.

மும்பை நகரெங்கும் காணும்  நானே படேகர் புகைப்படங்கள் அடங்கிய "தூய்மை மும்பை" பேனர்கள், மோடியின் ஸ்வச்ச பாரத்தை நினைவு படுத்தினால் நீங்களும் இந்திய அரசியலை அறிந்தவரே.

வெள்ளையையும் தூய்மையையும் அடையாளப்படுத்துகிற ஒருவர் மனதில் இருப்பதெல்லாம் அழுக்கும் ஆதிக்க வெறியும்தான் என்று சொல்கிற படம் தினமலருக்கு எரிச்சல் தருவது இயல்பானதுதான்.

புதிதான கதையோ, காட்சியமைப்புக்களோ கிடையாது. ரஜனியின் வயதைக் கணக்கில் கொண்டு அவருக்கான காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குனர்.

படத்தை தாங்கும் மூன்று தொழில் நுட்பத் தூண்கள்

ஒளிப்பதிவாளர்,
இசையமைப்பாளர்,
கலை இயக்குனர்.

முதல் பாதியில் ஈஸ்வரி ராவும் இரண்டாவது பாதியில் நானே படேகரும் படத்தைத் தாங்குகிறார்கள்.

தாராவி மக்களை அழிப்பதற்கு தாக்குதல்கள் நடக்கும் வேளையில் வில்லன் வகையறாக்கள் ராமாயண உபன்யாசம் கேட்டுக் கொண்டிருப்பது பொருத்தமான காட்சியமைப்பு.

"போராட்டம் என்பது தொடர்ச்சியானது. மக்களின் வாழ்வு போராட்டத்தில்தான் அடங்கியுள்ளது" 

என்ற செய்தியை சொல்வதாலும்

"கருப்பும் சிவப்பும் நீலமும் இணைய வேண்டியது இன்றைய அவசியம்"

என்பதை இறுதியில் வலியுறுத்தியுள்ளதாலும் "காலா" கவர்கிறது.

தூத்துக்குடி செல்வதற்கு முன்பாக ரஜனிகாந்த் ஒரு முறை இப்படத்தை பார்த்து விட்டுச் சென்றிருக்க வேண்டும். 

பி.கு

இத்திரைப்படம் பார்த்ததும் தோன்றிய  இரண்டு விஷயங்கள் பற்றி நாளைய பதிவில்

  

7 comments:

 1. Uncle: Good review!! Will be back soon!

  ReplyDelete
 2. அங்கிள்: நல்ல வேள பார்த்தீஙக சாமி. இந்தப் படம் உங்கள மாதிரி ஆட்களூக்குத்தான். ஒரு வேள நீங்க ரஜினி மேல உள்ள வெறூப்பில் இந்தப் படத்தை பார்க்காமல் விட்டுடுவீங்களோனு நினைத்தேன்.

  நீங்க சொன்னதுபோல் நானா படேகர், ஈஸ்வரி ராவ், ரஞ்சித், சந்தோஷ் நாராய்ன்னு பலர் உழைப்பில் வந்த படம் இது. ரஜினினு நினைக்காமல் காலா வாக நினைத்துப் பார்த்தால் எல்லாம் நல்லாத்தான் இருக்கும். ;)

  ReplyDelete
 3. காலா படத்த பாத்துட்டு தூத்துகுடி சம்பவம் அரங்கேறியதா (preview theaterla பாத்துட்டு) அல்லது துத்துகுடி சம்பவத்த பாத்துட்டு காலா எடுத்தாங்களா. காலாவுக்கும், துத்துகுடிக்கும சீன் பை சீன் தொடர்பு உள்ளது. ரஜீனி குடிபோதையில் அமைச்சரை பார்த்து ஆமா, யார் நீங்க? என்று மீண்டும் மீண்டும் கேட்பது, ரஜீனிய பார்த்து கல்லூரி மாணவன் கேட்டதை நினைவுபடுத்தியது. ரஜினிமட்டும் காலா ரிலீசுக்கு பத்துநாள் முன்னாடி தூத்துகுடிக்கு வந்து சாகும்வரை உண்ணாவிரதம்னு உட்கார்ந்து இருந்தால், நான் அடிச்சு சொல்லுறேன் அடுத்த தமிழக முதல்வர் ரஜினிதான். அனா படத்தில் ஒன்னும், நிஜத்தில் வேறொன்னும் வசனம் பேசி அரசியல் கூமுட்டை ஆகிவிட்டது. ஆமா ரஞ்சித் கம்மூனிஸ்டா, திராவிடஷ்டா, அம்பெத்காரிஷ்டா. யார் நீங்க!!!!

  ReplyDelete
  Replies
  1. அடுத்த பதிவில் இந்த காட்சியைப் பற்றித்தான் எழுதியுள்ளேன்

   Delete
 4. காவாலி படத்துக்கு தலையங்கம் எழுதி கரைசல் பண்னுன வைத்தி மாமா காலா படத்துக்கு இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி கம்முனுகீறார். மததவா தினமலத்த உருட்டிக்கினுகீரா. மத்த எடத்துல மதகலவரம்னா! தமிழ்நாட்டுல ஜாதி கலவரத்த தூண்ட எவ்வளவு TRY செஞ்சாலும் கருப்பு, செவப்பூ, நீலம், பச்சை எல்லாம் ஒன்னாகூடி நிக்கிது. வாழ்க தமிழக மணி திருநாடு.

  ReplyDelete
 5. ஒருவர் செயல் அவரின் தொடர்ச்சியான நிலையான உயர்வுக்கு வழீ, படம்ஓட வேடம் போடவில்லை ...

  ReplyDelete
 6. உண்மை... நல்ல விமர்சனம்

  ReplyDelete