Tuesday, June 5, 2018

அனிதாவோடு நிற்காத "நீட்" துயரம்



பனிரெண்டாம் வகுப்பில் 1125 மதிப்பெண்கள் வாங்கியும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாமல் மருத்துவராகும் கனவு கருகி தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் பிரதீபா என்றொரு மாணவி.

தற்கொலை தீர்வில்லை என்று உபதேசம் சொல்வது எளிது. அந்த மாணவியின் வலி நமக்கு புரியாது. 

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் கடுமையான முயற்சிகளால் பொதுத்தேர்வுகளில் சாதிக்க முடிபவர்களால் நீட் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை என்றால் நீட் தேர்வில் ஏதோ மிகப் பெரிய மோசடி இருக்கிறது.

லட்சக்கணக்கில் செலவு செய்பவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்றால் அப்படிப்பட்ட தேர்வு அவசியமா?

பணம் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலை நாட்டை உண்மையிலேயே சுடுகாடாக்கி விடும்.

"நீட்' டை ரத்து செய் என்ற குரல் முன்னெப்போதையும் விட வேகமாக ஒலிக்க வேண்டிய தருணம் இதுதான். 

3 comments:

  1. கடந்த நான்குவருட மோடி ஆட்சியில் வாழ வழியில்லாமல் மரணமடைவோர் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ரேசன் கடைகளில் இலவச/குறைந்தவிலை அரிசி அளவு குறைப்பு/நிறுத்தம். உளுந்தம்பருப்பு விநியோக நிறுத்தம். சீனி விலை அதிகரிப்பு. போன்ற காரணங்களால் வாழ வழியில்லாமல் செத்துக்கொண்டிருக்கின்றனர். ரேசன் கடை பிரச்சினைக்கு முழுக்க முழுக்க மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம்தான் காரணம். உணவு பாதுகாப்பு சட்டம் உண்மையில் ஏழைகளிடமிருந்து உணவை பறித்து, பாதுகாத்து பணக்காரர்களுக்கு அளிக்கும் திட்டம். இதுதவிற மருத்துவமனைகளில் குழந்தைகள் சாவு, மருத்துவ கல்லுரிகளில் முதுகலை மருத்துவ கல்லூரி மாணவர்கள் விஷ ஊசி போட்டு கொலை. மருத்துவம் படிக்க ஆசைபடும் மாணவர்கள் சாவு. போலிஸ் உதைத்து கர்ப்பிணி கொலை. போலிஸ் சுட்டு இளைஞர்கள் கொலை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் விழுந்த பிணங்கள் ஏராளம். GST வரியால் தொழில் நசிந்து நான்டுக்கிட்டு செத்தவர்கள் பல ஆயிரம். மத்க்கலவரத்திலும் மாட்டுக்கறி சாப்பிடுறானு சொல்லி (தாழ்த்தப்பட்ட) இனகலவரத்திலும் கொல்லப்பட்டவர்கள் எண்ணிலடங்கா. பேய் அரசாண்டால் பிணம்திண்னும் சாத்திரங்கள் என்ற முதுமொழிக்கு 'வாழும்' உதாரணம்தான் நான்காண்டு மோடி அரசின் சாதனை.

    ReplyDelete
  2. How many lives, It is getting worse in every aspect not only in education. Sad.

    ReplyDelete
  3. பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கவியரசன் என்ற மாணவன் தனியார் அறக்கட்டளை ஒன்றினால் நடத்தபட்ட இலவச நீட் தேர்வு நிலையத்தில் கற்று நீட் தேர்வில் சாதித்து காட்டியுள்ளார்.தமிழக மாணவி ஒருவர் நீட் தேர்வில் இந்திய அளவில் 12ம் இடத்தை பெற்று சாதித்துள்ளார்.தேர்வில் பெயில் என்றால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகள்,ஆசிரியர் திட்டினால் தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகள்,தான் விரும்பிய கல்வி பிரிவு கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகள். தலைவர்கள் கைது செய்யபட்டாலோ,இறந்தாலோ தற்கொலை செய்து கொள்ளும் தொண்டர்கள்,நடிகரின் படம் வெளிவந்தால் ஒரு பிரமாண்டமான கொண்டாட்டமே கொண்டாடுவது.எல்லாம் எங்கு நடைபெறுகிறது, யாருடைய தவறு?

    ReplyDelete