Wednesday, June 20, 2018

காஷ்மீர் மேலும் நாசமாய் போகும் . . .

போர் நிறுத்த அறிவிப்பை மத்தியரசு திரும்பப் பெற்ற போதே பெரிய வில்லங்கம் வரப்போகிறது  என்று எதிர்பார்த்தேன். 



பாஜக - முப்தி கட்சிகள் தேர்தலுக்குப் பிந்தைய  கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்ததிலும் எந்த கொள்கையும் கிடையாது, மக்கள் நலனும் கிடையாது.

இப்போது பாஜக ஆட்சியை விட்டு வெளியேறி அதனைக் கவிழ்த்ததிலும் எந்த கொள்கையும் கிடையாது, மக்கள் நலனும் கிடையாது. 

இனிமேலும் மெஹ்பூபா முப்தியோடு இணைந்து செயல்பட முடியாது என்ற ரீதியில்தான் பாஜக பேசுகிறதே தவிர, என்ன காரணங்களுக்காக வெளியேறுகிறோம் என்று ஆணித்தரமாக எதுவும் சொல்லவில்லை. இனியும் சொல்லாது. ஏனென்றால் அப்படி எதுவும் கிடையாது.

பாஜக வின் செயலால் இனி என்ன நிகழும்?

காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டுமென்றால் காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசின் மீது அடிப்படையாக நம்பிக்கை வர வேண்டும். அப்படி நம்பிக்கையை உருவாக்கும் எந்த செயலையும் நான்காண்டுகளில் மோடி செய்யவில்லை. இந்த ஆட்சிக் கலைப்பு என்பது அந்த நம்பிக்கையின்மையை மேலும் அதிகப்படுத்திடும். 

ஜனாதிபதி ஆட்சியின் மூலமாக  பாஜக வின் ஆட்சிதான் அங்கே நடைபெறப் போகிறது. மூன்றாண்டுகளில் பாஜக செய்ய நினைத்த பல சதிகளை இப்போது அரங்கேற்றும்.

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி என்பது கிட்டத்தட்ட ராணுவத்தின் ஆட்சிதான். மக்களுக்கும் ராணுவத்திற்குமான மோதல்களும் முரண்பாடுகளும் ஏற்கனவே உள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை ராணுவம் கண்டிப்பாக பயன்படுத்திக் கொள்ளும். காஷ்மீரில் ராணுவம் செய்து வரும் அத்து மீறல்கள் உலகப் பிரசித்தி படைத்தது.

பாஜக என்னதான் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் அதனால் ஜம்மு பகுதியைத் தாண்டி வெற்றி பெற முடியாது. கடந்த முறை பெற்ற 25 தொகுதிகளில் கூட இனி வெற்றி பெற முடியுமா என்பது சந்தேகமே.

ஆகவே குடியரசுத்தலைவர் ஆட்சி என்ற பெயரில் ஒரு பினாமி ஆட்சியை காஷ்மீரிலும் நடத்தப்போகிறது. அந்த ஆட்சி நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அம்மாநில மக்கள் மனதளவில் இந்தியாவிடமிருந்து விலகிப் போய்க் கொண்டே இருப்பார்கள்.


6 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. காஷ்மீர் நாசமா போனாலென்ன...? இந்தியாவே நாசமாலென்ன...?

    உங்களுக்கென்ன...?

    நாங்கள் தேச பக்தர்கள்... எதுவும் செய்வோம்.

    எதிர்ப்பவர்கள் தேச விரோதிகள்...!

    ReplyDelete
  5. காஷ்மீர் மேலும் நாசமாய் போகும் . . . *** yes, for jihadi terrorists and their supporters including commies and secular thugs.

    ReplyDelete
    Replies
    1. ஏன்யா பீட்டரு, உனக்கு தமிழ் தெரியாதா?
      கொலைகாரக் காவிக்கூட்டத்தைச் சேர்ந்த உன்னால இதை சிரிப்பு வராம எழுத முடிஞ்சுதா? பொறுக்கிக் கூட்டத்துக்கு கோபத்தைப் பாரு

      Delete