Sunday, June 3, 2018

பொருந்தா ஊதிய ரஜனிக்கு புரியாது . . .




முதலாளித்துவ ஊடகங்களில் மட்டுமல்லாது சமூக ஊடகங்களிலும் கண்டு கொள்ளப்படாத ஒரு போராட்டம் பனிரெண்டு நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது.

அஞ்சல் துறையின் பாவப்பட்ட ஜென்மங்கள் முன்பு ஈடி ஊழியர்கள் என்று அழைக்கப்பட்டு இப்போது ஜிடிஎஸ் ஊழியர்கள் என்று அழைக்கப்படும் பகுதி நேர ஊழியர்கள். கிராமப்புற அஞ்சல் சேவை என்பது இவர்கள் இல்லையென்றால் நடக்கவே நடக்காது.

இரண்டரை லட்சம் ஜி.டி.எஸ் ஊழியர்கள் பனிரெண்டு நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி மத்தியரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டு விட்டது. ஊதியக்குழு முடிந்ததும் அதன்படி ஜி.டி.எஸ்  ஊழியர்களுக்கும் ஒரு குழு அமைக்கப்பட்டு முழு நேர ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டது போல விகிதாச்சார அடிப்படையில் அவர்களுக்கும்  ஊதிய உயர்வு கிடைத்து விடும்.

இந்த முறையும் கமலேஷ் சந்திரா என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அது பரிந்துரையும் அளித்து விட்டது.

அக்குழு பரிந்துரை அளித்து பதினெட்டு மாதங்கள் ஆன பின்பும் அது அமலாக்கப்படவில்லை. அமலாக்குவதற்கு மோடி அரசுக்கு மனமில்லை. பாஜக சார்பு சங்கம் அங்கே கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாய் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்து விட்டதால் அரசு கண்டு கொள்ளவில்லை.


மனு அளித்தல், முறையீடு, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம்,  அடையாள வேலை நிறுத்தம் மீண்ரும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று பல கட்டங்களை கடந்த பின்பு இப்போது வேறு வழியின்றி கடைசி கட்டமாக கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த குழுவின் பரிந்துரைப்படி அவர்களுக்கு எவ்வளவு உயர்வு கிடைக்கும்?

மாதச்சம்பளத்தில் உயர்வு ரூபாய் இரண்டாயிரம் முதல் அதிகபட்சம் நான்காயிரம் ரூபாய் வரை. அப்படியும் கூட குறைந்தபட்ச ஊதியமாக தொழிற்சங்கங்கள் கோருகிற பதினெட்டாயிரம் ரூபாய் என்பது ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்களுக்குக் கூட வராது.

மோடி ஆட்சியில் அனைத்து பொருட்களின் விலையும் அன்றாடம் உயர்ந்து வருகையில் நியாயமான ஊதிய உயர்வு மறுக்கப்படுகிற போது அவர்கள் போராடவில்லை என்றால்தான்  அவர்கள் வாழ்வு  சுடுகாடு ஆகும்.

இந்த உண்மையெல்லாம்

ஒரு துளி வியர்வைக்கு 
ஒரு பவுன் தங்கக்காசு 

என்று உழைப்பிற்குக் கொஞ்சமும் பொருந்தாத ஊதியம் வாங்கும் ரஜனிக்கெல்லாம் புரியாது.

3 comments:

  1. வரி கூட ஒழுங்கா செலுத்தாத திருட்டு க --- தி

    ReplyDelete
    Replies
    1. நீ வரி கட்டீக்கியா ?
      நீ யோக்கியனா ? டிராஃபிக் போலீஸ் க்கு லஞ்சம் கொடுக்கலையா ?
      யாருக்காவது லஞ்சம் கொடுத்தலியா ?

      Delete
    2. தம்பி, ரஜனி யோக்கியனா என்று கேட்டால் உனக்கென்ன கோபம்?
      சரி நீ பதில் சொல்லு.
      நீ யோக்கியனா?
      ஒளிஞ்சு வந்து கேள்வி கேட்கிற நான் எப்படி யோக்கியனா இருக்க முடியும்னு நீ சொல்றது எனக்கு கேட்குது

      Delete