Friday, June 22, 2018

கோவை - இன்னொரு பொலிவியா ?????



90 களின் இறுதியில் லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவின் இரண்டாவது பெரிய நகரமான கோச்சாபாம்பா நகரத்தின் தண்ணீர் வினியோகம் "பெக்டெல்" என்ற பன்னாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான "அக்வாஸ் டெல் டுனாரி" என்ற நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அங்கே இருந்த நதி கூட அவர்கள் வசம் சென்றது.

அவர்கள் தண்ணீரின் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே இருந்தனர். குடிதண்ணீர் மட்டுமல்லாது அனைத்து தேவைகளுக்கான தண்ணீரும் அவர்களின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.

கிடைக்கிற ஊதியத்தில் பெரும்பகுதியை பெக்டெல் லிடமே கொட்டி அழ முடியாத சூழலில் மக்களின் போராட்டம் வெடித்தது. எடப்பாடி வகையறா போல போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட, போராட்டம் மேலும் சூடு பிடித்தது.

இறுதியாக "அக்வாஸ் டெல் டுனாரி" உடன் போடப் பட்டிருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

தண்ணீரை தனியார்மயமாக்கும் சதி முறியடிக்கப்பட்டு விட்டதால் அடுத்த படியாக காற்றை தனியார்மயமாக்கும் கொடுமைகள் எல்லாம் நடைபெறவில்லை.

பொலிவியாவில் பெக்டெலிடம் தண்ணீரை அடமானம் வைத்தது போல இப்போது கோவையில் குடிதண்ணீர் வினியோகத்தை "சூயஸ்" என்ற நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார்கள். 

வரும் முன் காப்பது நல்லது.
கோவை மக்கள் போராட்டத்தை உடனடியாக துவக்கிட வேண்டும். 

கோவை மௌனமாக இருந்தால் தமிழகம் முழுதும் இக்கொடுமை பரவும். 

பி.கு : பெக்டெல் எதிர்ப்புப் போராட்டத்தின் முன்னணிப் போராளி தோழர் இவா மொரேல்ஸ் பின்னர் அந்நாட்டின் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இன்னும் அப்பொறுப்பில் தொடர்கிறார்.

11 comments:

  1. சூயஸ் ஒரு இஸ்லாமியரின் நிறுவனம்
    இன்று நாடு முழுவதும் இஸ்லாமியருக்கு எதிராக பாஜக இயங்கி வருக்கிற போது
    பொதுவுடைமை தொண்டர்களும் அப்படி இயங்கினால்
    பாஜக வைக்கும் நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போலாகும்
    எனவே இந்த விடயத்தில் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்

    ReplyDelete
    Replies
    1. சூயஸ் ஒரு ஃப்ரெஞ்சு நிறுவனம்.
      அப்படி ஒரு இஸ்லாமிய நிறுவனமாக இருந்தால் அதற்கு பாஜக அனுமதி கொடுக்குமா?

      Delete
    2. சூப்பர் அனானிJune 23, 2018 at 7:09 AM

      இந்த அனானி சூயஸ் என்றவுடன் ஏதோ எகிப்து கம்பெனி அதனால் அது இஸ்லாமிய கம்பெனி என்று நினைச்சு இருக்கும்
      ஹஹஹஹஹ்

      அவங்க நினைப்பு முழுக்க மதம் மட்டும் தான்

      சூயஸ் ஒரு கிறிஸ்தவ கம்பெனி அப்போ கிறிஸ்தவர்களுக்கு பாஜக முன்னுரிமை என்று சொல்ல வரீங்களா
      .
      .
      உங்க கமெண்ட் ஐ பார்க்கும் போது இஸ்லாமிய கம்பெனியாக இருந்தால் போராட தேவையில்லை ஆனால் பிரென்ச் கம்பெனி என்பதால் போராடுகின்றோம் என்று சொல்வது போலுள்ளது

      சூப்பர் அனானி

      Delete
  2. போராட பல விடயங்கள் உள்ளது
    8 வழி சாலைக்கு எதிராக போராடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

    ReplyDelete
    Replies
    1. அதற்கும் போராடுவோம்.
      இதற்கும் போராடுவோம்

      Delete
  3. kovai went under the hands of RSS since 1991. Either it can be handed over to Kerala or it can be converted as union territory of India under the control of baniyaas. So they can put one RSS governor and rule 'peace'fooly.

    ReplyDelete
  4. பொலிவியாவில் அழகான பெண்கள் இருப்பாங்க

    கோவையில் இருக்காங்களா

    ReplyDelete
    Replies
    1. நீ போட்ட பின்னூட்டங்களிலேயே நாகரீகமான பின்னூட்டம் இதுதான்.
      உன் வீட்டில் பெண்கள் இருக்கிறார்களா?

      Delete
    2. இங்கே பல அனானிகள் உலவி திரிவதால் என் பெயரை சூப்பர் அனானியாக மாற்றி கொள்கின்றேன்

      Delete
    3. அழகான பெண்கள் என்று சொல்வது கேவலமானதா ?
      ஆமா என் வீட்டில் அழகான பெண்கள் இருந்தார்கள் .. இப்போ திருமணம் செய்து புகுந்த வீடு போய் விட்டார்கள்

      சூப்பர் அனானி

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete