Friday, November 7, 2014

ம்றை கழண்டு போன காங்கிரஸ் வாரிசுகள்

இது மகாராஷ்டிர கலாட்டா



நேற்றைய செய்தித்தாளையும் இன்றைய நாளிதழையும் சற்று நிதானமாக  படித்துக் கொண்டிருந்த போது கண்ணில் பட்ட இரண்டு செய்திகளுக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது.

முன்னாள் உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவின் மகளும் இப்போது சட்ட மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ப்ரணதி ஷிண்டே என்பவர் ஹைதராபாத்தை தளமாக கொண்டுள்ள ஓவைஸி யின் எம்.ஐ.எம் கட்சி ஒரு தேச விரோதக் கட்சி, அதனை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் வீராவேசமாக முழங்கியுள்ளார்.

அதே போல முன்னாள் தொழில்துறை அமைச்சரான நாராயண் ரானே வின் மகன் நிதேஷ் ரானே, இவரும் இப்போது புதிதாக எம்.எல்.ஏ ஆகியுள்ளார். மராத்தியர்களை வெறுக்கும் குஜராத்திகளை மஹாராஷ்டிராவிலிருந்து சுத்தம் செய்து துடைத்தெறிய  வேண்டும் என்று ட்விட்டரில் எழுதியுள்ளார். 

இவர்களுக்கு பெரிய கொள்கைப் பிரச்சினையெல்லாம் ஒன்றும் கிடையாது. நடைபெற்ற தேர்தலில் தட்டுத் தடுமாறி ஜெயித்தவர்கள். அதற்கு யார் காரணமோ அவர்கள் மீது விஷம் கக்கியுள்ளார்கள். 

இதிலே  பாவம் அந்தப் பெண் மறந்து போன விஷயம் என்னவென்றால் இடதுசாரிகள் ஆதரவை திரும்பப் பெற்ற போது மன்மோகன் சிங்கின் நாற்காலி ஆட்டம் கண்ட போது ஆதரவளித்து முட்டு கொடுத்தது இந்த எம்.ஐ.எம் கட்சிதான். ஆந்திராவிலும் கூட கிரண் குமார் முதல்வராக இருந்த போது ஆதரவு கொடுத்து காங்கிரஸ் ஆட்சியை காப்பாற்றியது. அப்போதெல்லாம் எம்.ஐ.எம் தேச பக்த கட்சியாய் இருந்திருந்து போலும்.

இந்த இரண்டு வாரிசுகளும் அரசியலில் நீடிக்க வெறுப்பை விதைக்கும் பேச்சுக்களை நம்பியுள்ளார்கள். அந்த நாசகரமான பாணி பாரதீய ஜனதா கட்சிக்கும் சிவ சேனாவிற்கும் சொந்தமானது. 

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று நிலையில் உள்ளதால் இந்த பாணியை பின்பற்றுகிறார்கள் போலும்.

இது சரியல்ல, ஆபத்தானது, ஆம் மக்களுக்கு ஆபத்தானது.

3 comments:

  1. Pl let them allow to speak and action to finish the chapter of congress as soon as possible. seshan

    ReplyDelete
  2. ஓ அப்படியா சேதி அவைங்களா? இவைங்க..?

    ReplyDelete
  3. தோழரே.. நோகாமல் நோம்பு கும்பிடுபவர்களை தோலுரிக்க வேண்டிய நேரம்.. வ.......உ

    ReplyDelete