Sunday, November 2, 2014

குமுதம் கொஞ்சம் கேட்டு சொல்ல வேண்டும்





குமுதம் இதழின் இந்த வார தலையங்கத்தை இன்றுதான் படித்தேன். மோடியின்  இரு மாநில வெற்றிக்காக புளகாங்கிதமடைந்துள்ள குமுதம் "மத வாத அரசு இல்லை என்பதை வெளிப்படுத்துவதற்காக காஷ்மீர் சென்று தீபாவளியைக் கொண்டாட முடிந்திருக்கிறது" என்றும் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது.

மோடி காஷ்மீர் சென்று ரம்ஜான் கொண்டாடியிருந்தாலோ அல்லது கோவா சென்று கிறிஸ்துமஸ் கொண்டாடினாலோ வேண்டுமானால் குமுதம் இதழின் பாராட்டில் அர்த்தமிருக்கும்.

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. 

அடுத்த ஆண்டாவது ரம்ஜானோ இல்லை கிறிஸ்துமஸை மோடி கொண்டாடுவாரா என்று குமுதம் கேட்டுச் சொல்லட்டும். 

அதன் பின்பு அந்த பாராட்டுப் பத்திரத்தை மோடிக்கு அளிக்கட்டும்.

5 comments:

  1. Kumutham is RSS paper

    ReplyDelete
  2. இப்படி தான் மதசார்ப்பின்மை பேசும் சில திராவிட பதர்களும் ரம்ஜான, கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லிட்டு திபாவளிக்கு வாழ்த்து சொல்லாம்ம ஓடி ஒளியும்..

    ReplyDelete
  3. மிஸ்டர் அனானி, மதவாதி மோடிக்கு மத நல்லிணக்க போர்வை போர்த்தியுள்ள குமுதத்திற்கு கேட்கப்பட்டுள்ள கேள்வி அது. உமக்கு இங்கே வேலையில்லை.

    ReplyDelete
    Replies
    1. ippadi yellaraiyum anuppivittu
      "yaruk-kaa-ga tea poda-reenga- Tholar?"

      Delete
    2. வாங்க அனானி, அது எப்படி சமபந்தம் சம்பந்தமே இல்லாம பின்னூட்டம் போட முடியுது?

      Delete