Monday, August 18, 2014

நாளை முதல் மீண்டும்

எங்கள் கோட்டச்சங்கத்தின் 27 வது பொது மாநாடு நேற்றும் இன்றும்  விருத்தாச்சலம் நகரில் நடைபெற்றது. மாநாட்டுப் பணிகள் காரணமாக சில நாட்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை. 

எங்கள் விருத்தாச்சலம் கிளைத்தோழர்களின் அயராத உழைப்பு, அவர்களுக்கு பக்கபலமாக இருந்த வரவேற்புக்குழுத் தலைவர் தோழர் வழக்கறிஞர் ஏ.சந்திரசேகரன் ஆகியோரின் பணியால் ஒரு சிறப்பான மாநாடு முடிந்த நிறைவோடு வீடு திரும்பினேன்.

மீண்டும் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். மாநாடு அளித்துள்ள கடமைகளோடு வலைப்பக்கப் பணியையும் தொடர்வேன் நாளை முதல் மீண்டும்.

இதோ மாநாடு குறித்த தீக்கதிர் செய்திகள் இரண்டு.

 காப்பீட்டு கழக பொது மாநாட்டுவேன் பிரச்சாரம் துவக்கம்



சிதம்பரம், ஆக.17-கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆக 17.18 தேதிகளில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின வேலூர் கோட்ட 27 வது பொது மாநாடு நடைபெற்று வருகிறது.இதையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் மாநாட்டின் நோக்கங்களை விளக்கி வேன் பிரச்சாரம் நடைபெற்றது,இதன் ஒரு பகுதியாக சனிக்கிழமை சிதம்பரம் காந்தி சிலை அருகே வேன் பிரச்சாரம் துவக்க நிகழ்ச்சி காப்பீட்டு கழக கோட்ட இணை செயலாளர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். சிதம்பரம் காப்பீட்டு கழக சங்கத்தின் கிளைச்செயலாளர் யோகநாதன்,முகவர்கள் சங்கத்தின் சார்பாக முகமதுஅலி, சம்பந்தமூர்த்தி, அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் மகாலிங்கம் உள்ளிட்டவர்கள் வாழ்த்தி பேசினார்கள். இதே போல் சிதம்பரத்தில் தெற்கு சன்னதி, மேலவீதி உள்ளிட்ட இடங்களில் வேன் பிரச்சாரம் நடைபெற்றது. 

 காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க வேலூர் கோட்ட மாநாடு
 


கடலூர்,ஆக.17-காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட 27 வது மாநாடு விருத்தாசலத்தில் ஞாயிற் றுக் கிழமை தொடங்கியது. மாநாட்டையொட்டி விருத்தாசலம் கடை வீதியி லிருந்து பேரணி தொடங்கி மாநாட்டு அரங்கமான தோழர் ஆர்.உமாநாத் நினைவரங்கத்தை அடைந்தது, மாநாட்டு கொடியினை தலைவர் எம்.தசரதன் ஏற்றி வைத்து கண்காட்சியை திறந்து வைத்தார்.

வேலூர் கோட்ட தலை வர் எம்.தசரதன் மாநாட் டிற்கு தலைமை தாங் கினார், வரவேற்புக்குழு தலைவர் ஏ.சந்திரசேகரன் வரவேற்றார். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணை செயலாளர் எம். கிரிஜா மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார்.

தென்மண்டல இன் சூரன்ஸ் ஊழியர் கூட்ட மைப்பின் துணைத்தலை வர் ஆர்.புண்ணியமூர்த்தி, இணைசெயலாளர் டி.செந்தில் குமார், எல்.ஐ.சி முதுநிலை அதிகாரிகள் சங்கத்தின் கே.தியாகராஜன், வளர்ச்சி அதிகாரிகள் சங்கத்தின் கோட்டச் செய லாளர் பி.சுப்பரமணியன், முகவர்கள் சங்கத்தின் தென் மண்டல செயலாளர் கலை செல்வன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

காப்பீட்டுகழக ஊழியர் சங்கத்தின் வேலூர் கோட்ட செயலாளர் எஸ்.ராமன் நன்றி கூறினார். முதல் நாள் நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாலை பாலக்கரை அருகே மக்கள் ஒற்றுமை கலைவிழா நடைபெற்றது. மாநாட்டின் இரண்டாம் நாள் திங்கள் கிழமை அன்று பிரதிநிதிகள் மாநாடு நடைபெற உள்ளது.

 

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. மீண்டும் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  3. நன்றி நண்பர் ஜெயக்குமார் அவர்களே

    ReplyDelete
  4. அகற்றப்பட்ட பின்னூட்டத்தை எழுதிய அனானி தன்னுடைய அடையாளத்தோடு அதே பின்னூட்டத்தை போடட்டும் தைரியமிருந்தால். பிரசுரித்து தக்க பதிலும் தர தயாராக இருக்கிறேன். தான் யார் என்பதைக் காண்பித்துக் கொள்ள தயாராக இல்லாத வக்கிரம் பிடித்த கோழைகள் விஷத்தை கக்க மட்டும் தயாராக இருக்கிறார்கள். வெட்கம் கெட்டவர்கள்

    ReplyDelete