Monday, September 19, 2011

உண்ணாவிரதமா? புதுசா ஏதாவது பண்ணுங்கப்பா!



வர வர உண்ணாவிரதப் போராட்டங்கள்  அர்த்தமிழந்து
போய்க்கொண்டிருக்கிறது. 

அண்ணா ஹசாராவின்  உண்ணாவிரதங்கள் பிரதமரை
லோக் பால் மசோதாவில் சேர்க்கவில்லை. ஆனால் அது
வெற்றி என பேசப்படுகின்றது.   


பாபா ராம்தேவின் உண்ணா விரதம் அவரை சுடிதார்
அணியவைத்தது.


ஏர்கண்டிஷன் அறையில்  உத்தமர் வேடம் போட 
இப்போது  மோடி உண்ணா விரதம்.


அதற்கு போட்டியாய்  காங்கிரசார் உண்ணாவிரதம்.


இந்த பரபரப்பு உண்ணாவிரதங்கள் நியாயமான 
கோரிக்கைகளுக்காக  உண்ணாவிரதப் 
போராட்டம் மேற்கொள்ளும்  பலரை 
பல அமைப்புக்களை  கவனிப்பு  கிடைக்காத
வண்ணம் செய்து விடுகின்றது.  


அப்படி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என
அரசியல் பிரபலங்கள் ஆசைப்பட்டால் கலைஞர் 
போல காலை உணவுக்கும் மதிய உணவிற்கும்
இடைப்பட்ட நேரத்தில் ஏர்கூலர்கள் வசதியோடு
மூன்று மணி நேரத்தில் முடித்து விடுங்கள். 
 

2 comments:

  1. தொழிற்சங்க ஊழியர் என்று எப்படித் தனியாக அழைக்கமுடியும்? தொழிற்சங்கப் பதவியைக் காட்டி வேலையே பார்க்காமல் இருப்பவர்கள் வேண்டுமானால் அப்படிக் குறிப்பிட்டுக் கொள்ளலாம். ஏதாவது கட்சியில் பொதுநேர ஊழியராக இருந்தால் முழுநேரக் கட்சி ஊழியர் என்று சொல்லலாம். இல்லை என்றால் பார்க்கும் வேலையைத்தான் குறிப்பிட வேண்டும். மோடியின் உண்ணவிரதத்தை நியாயப் படுத்தவில்லை. அதற்காக உ.வி. கொச்சைப்படுத்தக் கூடாது தோழரே. கூடங்குள உ.வி. என்ன சொல்லப் போகின்றீர்கள்?

    ReplyDelete
  2. அலுவகப் பணியோடு தொழிற்சங்கப் பணியும் சேர்த்து பார்ப்பதால்தான் தொழிற்சங்க ஊழியன். அது 24 மணி நேரப் பணி. ஐரோம் ஷர்மிளா, கூடங்குள உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு கிடைக்காத ஊடக வெளிச்சம் அரசியல் பிரபலங்களுக்கு கிடைக்கிற எரிச்சல்தான் பதிவின் நோக்கம் நண்பரே!

    ReplyDelete